Ads 468x60px

8/14/2013

காங்கிரசின் "அநியாய கோணல் " புத்தி...


மனிதர்கள் ஒரு பிரச்னையை தீர்க்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்கும் போது, அதை விட பெரிய பிரச்னை ஒன்று வருமேயானால், முதல் பிரச்னை, நம்ம தலைவர் பாணியில் சொல்வதென்றால் 'ஜூஜூபி'யாகி விடும். நம்முடைய சிந்தனை முழுவதும், இரண்டாவது பிரச்னையின் மீதே மையம் கொண்டிருக்கும். 

இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான, 'இரு கோடுகள்' என்ற  படத்தின் தத்துவம் இது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்த தத்துவத்தை, ஒவ்வொரு முறையும்  பார்லிமென்ட் கூடும் போதும், தவறாது கடை பிடித்து, பழியை, வழக்கமாக எதிர்க்கட்சிகள் மீது சுமத்தி, குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. 

இப்போது நடைபெற்றுவரும் மழைக் கால கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன், "பார்லிமென்ட், சுமுகமாக நடைபெற, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என,வேண்டுகோள் விடுத்தார்கள் , பிரதமர் மன்மோகன் சிஙகும், காங்கிரஸ் தலைவி சோனியாவும்.  சபாநாயகர் மீரா குமாரோ, அனைத்து கட்சி தலைவர்களையும் வரவழைத்து,  டீ - பார்ட்டி  கொடுத்து, பார்லிமென்ட் நிகழ்ச்சிகள் , இடையூறின்றி நிகழ, மசோதாக்கள் நிறைவேற, அனைத்து கட்சிகளும் உதவி  புரிய வேண்டும்' என்று மன்றாடினார். 

இதோடு நின்றிருந்தால், பார்லிமென்டில் நிறைவேற வேண்டிய மசோதாக்கள், நிறைவேறி இருக்கும். பார்லிமென்ட்டில் நிகழ்ச்சிகளும், சுமுகமாக நடந்திருக்கும். ஆனால், சபை கூடுவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், 'தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும்' என்று கொளுத்திப் போட்டு , தன் தலையில், தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது காங்கிரஸ். 

புதிய தெலுங்கானா மாநில அறிவிப்பை, இப்போது வெளியிட  என்ன அவசரம்? காங்கிரசின் இந்த அஷ்டகோணல் புத்தியை என்னவென்று சொல்வது? 

6 comments:

  1. இந்தியா இவர்களால்தான் ஒளிர போகுது!!

    ReplyDelete
  2. என்னமோ செய்யுறாங்க..
    நாம என்ன சொல்றது

    ReplyDelete
  3. அட இதுல இப்படியொரு ஆங்கிள் இருக்கோ!

    ReplyDelete
  4. எல்லாம் நம்ம நேரம்!

    ReplyDelete
  5. nalla kaalam porakkanum jakkamma
    intha naarapayanga poganum jakkamma...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"