Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/12/2013

மொபைல் போனால் கெட்டுப்போன பள்ளி மாணவியும், கைதாகிய ஆசிரியையும்...?


அரியலூரில், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு, ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அந்த மாணவி, வகுப்பறையில், மொபைல் போனில் பேசியதற்கு, ஆசிரியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, தவறான முடிவை எடுத்துள்ளார்.

பள்ளிக்கு, மொபைல் போன் கொண்டு வந்ததோடு, வகுப்பறையில், மொபைலில் பேசியது யார் குற்றம்? 9ம் வகுப்பு மாணவியை, ஆசிரியை கண்டிக்கக் கூடாதா?

பள்ளியில், மொபைல் கொண்டு வர தடையிருந்தும், அதைக் கொண்டு வந்த மாணவி குற்றவாளி தானே? வாங்கிக் கொடுத்து, அதை பள்ளி செல்ல அனுமதித்த பெற்றோரும் குற்றவாளியே. 

ஆசிரியை என்ன மண் பொம்மையா? மாணவர்கள் எதைச் செய்தாலும், பார்த்தும் அப்படியே இருப்பதற்கு? மாணவியரை, அவர்களின் தவறுகளை கண்டிக்கக் கூடாதெனில், பின் ஏன், அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்? வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது தானே...

 தற்கொலைக்கு தூண்டுபவர் என்று ஆசிரியர்களை சொல்வதும், அவர்களை தண்டிப்பதும் பெரிய தவறு. இன்றுள்ள நிலையில், 6வது படிக்கும் மாணவன் கூட, சினிமா, "டிவி' பார்த்து, பஞ்ச் டயலாகுகளை அதிகமாக பேசி, அடங்காமல் இருக்கின்றனர். பெற்றோரே...

ஆசிரியர்களுடன் இணைந்து, உங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து, ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களாக விளங்க, அவர்களது எதிர்காலம் செம்மையாக மாற, ஆசிரியருக்கு உறுதுணையாக இருங்கள். ஆசிரியர்கள் கண்டிப்பதற்கு இடையூறு இருப்பின், மாணவர்களின் எதிர்காலம், இருண்டு விடும் என்பதை, மறக்க வேண்டாம். நன்றி செய்தி மலர்.

6 comments:

  1. முழு விவரம் தெரியாமல் பேச வேண்டாமே. கண்டிப்பதற்கும் - திட்டுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. அத்தோடு செல்பேசியை வகுப்பு நேரத்தில் வைத்து வகுப்புக்குள் பேசுவது இடையூறு தரும், அனால் வகுப்பின் வெளியே, பாடம் நடக்காத இடங்களில் வைத்து பேசுவது குற்றமில்லையே..! முழு விவ்

    ReplyDelete
  2. தலைப்பிற்கும் பதிவின் தகவலுக்கும் என்ன சம்பந்தம் ? ஒய் திஸ் கொல வெறி?

    ReplyDelete
  3. முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பெற்றோர்தான்!

    ReplyDelete
  4. எந்த பிரச்சனை என்றாலும் பெற்றோறை அழைத்து சொல்லலாம். அடிகடி கூப்பிட்டால் அந்த கடுப்பில் நாம் செய்ய வேண்டியதை அவர்களை செய்வார்கள். நமக்கு எந்த பிரச்சனையும் வராது.

    ReplyDelete
  5. ஆசிரியர்களுடன் இணைந்து, உங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து, ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களாக விளங்க, அவர்களது எதிர்காலம் செம்மையாக மாற, ஆசிரியருக்கு உறுதுணையாக இருங்கள்
    >>
    சரியான வாதம். 9 வது படிக்கும் பிள்ளைக்கு எதுக்கு செல்போன்?! அப்படியே அவசியமென்றாலும் வகுப்ப்பறையில் பயன்படுத்தலாமா?! இதையெல்லாம் ஆத்திரத்தில் அறிவிழந்து ஒரு அப்பாவி ஆசிரியரை சிறையில் அடைப்பது எந்த விதத்தில் சரி?!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"