Ads 468x60px

7/18/2013

மோடி இதற்கு தயாரா? காங்கிரஸ் சவால்!



தமது செல்வாக்கை உயர்த்திக் காட்டுவதற்காக அமெரிக்க விளம்பர நிறுவனம் ஒன்றை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வாடகைக்கு அமர்த்தி உள்ளதாகவும், துணிச்சல் இருந்தால் மோடி இதனை மறுக்க தயாரா? என்றும் காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. 

உணவு பாதுகாப்பு திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பிரநிதியான பிரேம் சந்த் மிஸ்ரா, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில்," குஜராத் கலவரத்தால் சரிந்த தன் செல்வாக்கை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர்த்தி காட்ட மோடி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். வரும் மக்களவை தேர்தலையோட்டி விளம்பர தேடுவதற்காக மோடி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை. 

இஸ்ரேல் அரசுக்காக பணியாற்றிய அமெரிக்க விளம்பர நிறுவனத்தை, மோடி இந்த பணிக்காக அமர்த்தியுள்ளார்.துணிச்சல் இருந்தால் மோடி இந்த குற்றச்சாட்டை மறுக்கட்டும்" என்றார். சபாஷ் சரியான போட்டி.


நன்றி இணைய செய்திகள்.

6 comments:

  1. பல்லிருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்னு விட்டுடனும்

    ReplyDelete
  2. காங்கிரஸ்க்கு மக்கள் பிரச்சினையைவிட மோடியை மோப்பம் பிடிப்பதே முக்கிய வேலையாகிப்போச்சு...

    ReplyDelete
  3. சரியாப்போச்சு! இவர்கள் எல்லோருமே விளம்பர நிறுவனங்கள் பின்னும், 'நடுநிலை' என்ற போர்வையில் இருக்கும் ndtv , ibnlive , timesnow தொலைக்காட்ச்சிகள் பின்னே செல்பவர்கள் தானே! என்னமோ அவர் மட்டும்தான் செய்கிறார் என்பது போல சொல்வது கொடுமை!

    ReplyDelete
  4. யாரை புடிச்சி என்ன விளம்பரம் பண்ணாலும் பணாலப் போவுது மோடியோட பி.எம். கனவு. வீணாகப் போறது கட்சியோட காசு மட்டுந்தான்.

    ReplyDelete
  5. படித்த செய்திதான்...இதிலிருந்து நீங்க என்ன சொல்ல வரீங்க...?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"