Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/07/2013

உங்க பிள்ளை தமிழ்/ஆங்கில மீடியத்தில் படிக்கிறதா? அப்ப இதைப் படிங்க...


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சதாசிவம் எனும் தமிழர் நியமனம் செய்யப்பட்டிருப்பது, தமிழர்களாகிய நமக்கு பெருமை தரும் விஷயம். பல ஆண்டுகளுக்கு பின், தமிழனுக்கு இந்தப் பெருமையும், புகழும் கிடைத்திருக்கிறது. 
கான்வென்ட்டிலோ, வெளிநாட்டிலோ, ஆங்கில மீடியத்தில் படித்து பட்டம் பெற்றவர் என்ற பெருமையெல்லாம், இவருக்கு இல்லை. அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்து பட்டம் பெற்றவர் இவர் என்பதை நினைக்கும் போது, அடடா... ரொம்ப பெருமையாக இருக்கிறது! 

ஒரு தமிழர், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்; ஒரு தமிழர், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்திருக்கிறார். ஆனால், இதுவரை ஒரு தமிழர், இந்தியாவின் பிரதமராக ருக்க வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. 

சதாசிவம், எத்தனையோ, புரட்சிகரமான, புதுமையான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். தமிழகத்தில், சமச்சீர் கல்வி உதயமாவதற்கு, பச்சைக் கொடி காட்டியது, இவரது தீர்ப்பு தான். தமிழக அரசியல் தலைவர்கள், இவரை வாழ்த்தி இருக்கின்றனர். இவரது தாத்தா, தந்தை என, யாரும் பிரபல வழக்கறிஞர்களாக இருந்தது இல்லை. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், லண்டன் சென்று, பார் அட்லா பட்டம் எதுவும், பெற்றதும் கிடையாது. தன் சொந்த முயற்சியில், இப்படியொரு உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார். 

ஆங்கில மீடியத்தில் படித்தால் தான், வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று சொல்லும் கருத்துக் குருடர்களுக்கு, மதிப்பு மிகு சதாசிவத்தின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை மணி!    -மல்லிகை மன்னன்.



10 comments:

  1. வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை என்பது உணர்த்திய திரு. சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. முன்னேற்றம் என்பது முயற்சியில் இருக்கிறது மொழியில் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு திரு.சதாசிவம் அவர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உதாரணமாய் திகழும் உன்னதமான மனிதர்.

    ReplyDelete
  4. தமிழன் தமிழை மதிக்கிறதில்லை; அவமதிக்கிறானே!

    ReplyDelete
  5. நல்ல உதாரண மனிதர்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. படிக்கிற பிள்ளை எங்கேயும் படிக்கும் என என் அப்புச்சி அடிக்கடி சொல்லும், வெட்டி பந்தா காட்டும் தமிழர்கள் உருப்படாத ஆங்கில (கொலை செய்யும்) பள்ளிகளில் பின்னர் எதாவது எஞ்சினியரிங் பின்னர் பொட்டி தட்டி அமெரிக்கா போக நினைத்து குடி மூழ்கி போவார். சொல்லித் திருந்தும் இனம் நம் இனமில்லை.

    ReplyDelete
  7. திரு. சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  8. திரு.சதாசிவம் அவர்களைத் தமிழன் என்று சொல்லி நாம் தலை நிமிர்ந்து நிற்போம்.

    வாழ்க திரு.சதாசிவம் அவர்கள்!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நல்ல உதாரணம் சதாசிவம் அவர்கள்.தமிழ் வழியில் கற்பவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை உணர்த்திவிட்டார். உழைப்பும் முயற்சியும் மட்டுமே முக்கியம்
    நல்ல பதிவு

    ReplyDelete
  10. வாழ்க திரு.சதாசிவம் அவர்கள்!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"