Ads 468x60px

7/12/2013

கமலிடம் ஆலோசனைக் கேட்கிறார் ரஜினி காந்த் ?




தென்னிந்திய திரையுலகத்தின் முன்னணி நடிகர்களும், நெருங்கிய நண்பர்களுமான ரஜினி, கமல் ஆகியோரின் திரைப்பட ரிலீஸே பெரிய திரையுலக திருவிழா போல் கொண்டாடப்படும். நீண்டகால நண்பர்களாக இருக்கும் இவர்கள் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளைக் கண்டு ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வார்கள்.

இதற்காக இவர்கள் தாங்கள் நடிக்கும் இயக்கும் படங்களை பிரத்யேகமாக ஒருவருக்கொருவர் திரையிட்டு காட்டுவார்கள். கமல் தான் நடித்த தசாவதாரம் திரைப்படத்தையும், விஸ்வரூபம் திரைப்படத்தையும் ரஜினிக்கு அவர் வீட்டிலேயே திரையிட்டு காட்டினார்.

இப்பொழுது ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள கோச்சடையான் திரைப்படத்தை கமலுக்கு போட்டுக்காட்டி அவரது விருப்பத்தை அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறாராம் ரஜினி.

கோச்சடையான் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சமயத்தில் கமலின் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள விரும்பும் ரஜினி கூடிய சீக்கிரம் கமலுக்கு கோச்சடையானை திரையிட்டுக் காட்டுவார் என்கிறது கோடம்பாக்கம்.  

4 comments:

  1. மகள்களை வீட்டுலயே விட்டுட்டு வேலையை பாருங்கன்னு கமல் ரஜினிக்கு சொல்லி இருப்ப்பாரோ!!

    ReplyDelete
  2. நல்லது...

    தொடர்புடைய சுட்டி ":" சிறிது மாற்றலாமே...!

    ReplyDelete
  3. தொழில் முறையி்ல் இதுவும் நல்ல பண்புதானே!

    ReplyDelete
  4. நட்புக்குள் இருக்கும் பாசம் நல்லதுதானே?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"