Ads 468x60px

7/28/2013

தமிழக ப . ஜ. கா வும் , கொலைகளும்....


தமிழக பா.ஜ., பொதுச் செயலர், சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும், அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். 

கழகங்களுள், ஒருவருக்கொருவர் கொலைகள் செய்வதில், பற்பல காரணங்கள் இருக்கும். ஆனால், பா.ஜ.,வை பொறுத்தவரை, அரசியல் கொலை நடக்க, பெரும்பாலும் வாய்ப்பில்லை. இன்று, இந்தியா முழுவதும் பரவலாக நடப்பது, ரியல் எஸ்டேட் பொறாமைக் கொலைகளாக தான் இருக்கும். 

சில பா.ஜ., தலைவர்கள் கொலையில், மதவெறியும் காரணமாக இருக்கலாம். மனிதனை மனிதன் கொலை செய்வது, அநாகரிகத்தின் உச்சகட்டம். கட்சி உணர்வுகளை, கட்சிகள் வழியாகத்தான், சமாளிக்க வேண்டுமே ஒழிய, கொலை செய்வதன் மூலம் தீர்வு காண்பது அழகல்ல.

சமதர்ம பூமியாகவும், சமாதான பூமியாகவும் இருந்த தமிழகம், அறுபத்தேழுக்குப் பின் தான், கொலைகார பூமியாக உருவெடுத்தது. இப்போது, சர்வ சாதாரண நிலை அடைந்து விட்டது. 

கொலைக்காரர்கள் மத்தியிலும், கொலையுணர்வு மிக்க அரசியல்வாதிகள் மத்தியிலும், காவல் துறை மீதான அச்சம் போய்விட்டது. இது தமிழகத்திற்கு, இப்போது மட்டுமல்ல, எப்போதும் ஆபத்து. அரசு இதில், தயவு, தாட்சண்யம் பார்க்காமல், கட்சி பார்க்காமல், கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனை தர வேண்டும்.  செய்தி  உதவி தினமலர்.

4 comments:

  1. சந்திப்பில் நிறைய பேச வேண்டும்... 1/9

    ReplyDelete
  2. சமதர்ம பூமியாகவும், சமாதான பூமியாகவும் இருந்த தமிழகம், அறுபத்தேழுக்குப் பின் தான், கொலைகார பூமியாக உருவெடுத்தது. இப்போது, சர்வ சாதாரண நிலை அடைந்து விட்டது.

    ----

    உண்மைதான்... தண்டனைகள் சரிவர இருந்தால் குற்றங்கள் குறையும்.

    ReplyDelete
  3. சேலம் போன்றதொரு நடுத்தர நகரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்துவிட்டு எவ்வித தடயங்களையும் விடாமல் தப்பித்துக்கொண்டனர் என்றால் நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் உள்ளது. காவல்துறையினருடைய செயல்பாட்டில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தாலே இவ்வித கொலைகளில் பலவும் தீர்க்கப்பட்டுவிடும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"