Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/25/2013

தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது?



இந்த நாட்டில், ஒரு கிறிஸ்தவர், "நான் கிறிஸ்தவன்' என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படத் தேவையில்லை. அதே போல, ஒரு முஸ்லிமும், "நான் முகமதியன்' என்று சொல்ல, யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.

 "நான் தலித், நான் வன்னியன், நான் நாயுடு, நான் முதலியார், நான் செட்டியார், நான் தமிழன், நான் தெலுங்கன், நான் மலையாளி, நான் கன்னடியன், நான் மராட்டி, நான் பீகாரி, நான் அசாமி, நான் பெங்காலி, நான் குஜராத்தி' என்று சொல்லிக் கொள்ள, எந்தவித எதிர்ப்பும், எந்த மூலையிலிருந்தும் எழுந்ததில்லை. 

சொல்லப் போனால், அவ்வாறு கூறிக் கொள்வதில், அவர்கள், பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால், "நான் இந்து' என்று, ஒருவர் பகிரங்கமாகக் கூறிக் கொண்டதால், வந்தது வினை. கண்ட இடங்களிலிருந்து, விமர்சனமும், சகட்டு மேனிக்கு கண்டனமும், கன்னா பின்னாவென்று எழுகிறது. 

அதுவும் மெத்த படித்தவர், பொருளாதார மே தை, பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒருவர், குஜராத் முதல்வர், மோடி, தன்னை ஒரு இந்து என்று கூறிக் கொண்டதற்காக, எதிர்ப்புத் தெரிவித்திருப்பது, ஆச்சரியமாக உள்ளது. அமர்த்தியா சென்னின் அறிவு, அவ்வளவு தானா என்ற ஆதங்கம் எழுகிறது. 

குஜராத் முதல்வர் மோடியை, நாட்டின் அடுத்த பிரதமர் என்று, பலரும் கூறுவதில், சென்னுக்கு உடன்பாடில்லையாம். அமர்த்தியா சென்னுக்கு உடன்பாடில்லாவிடில், மோடி, நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட மாட்டாரா? பிரதமரை தேர்ந்தெடுப்பது, நாட்டு மக்கள்; பொருளாதார மேதைகள் அல்ல. அமர்த்தியா சென், முதலில், இதைப் புரிந்து கொள்வது நல்லது.


மோடி, முதலில், தன்னை மதச்சார்பற்றவர் என்று நிரூபிக்க வேண்டுமாம்; சென் சொல்கிறார். எப்படி? சீதை தீக்குளித்து, தன் கற்பை நிரூபித்தது போல, மோடி தீக்குளிக்க வேண்டுமா?

அமர்த்தியா சென் போன்ற பொருளாதார புலிகள், ஒரு விஷயத்தில் தெளிவடைவது உத்தமம். கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்த கலவரத்தை விடுங்கள். மோடி முதல்வராக உள்ள குஜராத்தில், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், சீக்கியர்களும் இல்லவே இல்லையா? குஜராத்தை விட்டு ஓடியா போய்விட்டனர்? அவரது ஆட்சியில், அவர்கள் அங்கு அமைதியாகத்தானே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்... பிறகென்ன!
இந்திய திருநாட்டில் பிறந்த ஒரு இந்து, தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது?

- ஈமெயில் கணேசன் 

10 comments:

  1. போச்சுடா இனி இது வேறயா...?

    ReplyDelete
  2. இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக்கொள்ளாதே
    ==பெரியார்==
    இந்த நாட்டிற்கு பிரதமர் வேட்பாளராகவே கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் தன்னை இந்து என்று சொல்லிக்கொண்டதில்தான் ஆச்சரியமும் எதிர்ப்பும் உள்ளது. மதசார்பற்ற அரசு என மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவின் அடிப்படையையே சுக்கு நூறாக்கியிருக்கிறது இந்த கே(மோ)டி யின் பேச்சு.

    ReplyDelete
  3. அமர்த்தியா சென் ...எப்பவோ கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருக்கு....

    ReplyDelete
  4. இதற்கு பெயர் தான் கொடுமை ... எதுவும் சில காலம் தான்...

    ReplyDelete
  5. americavil settil aagivita sennukku en intha sombhu thookkum velai....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. தான் இன்னாருடைய மகன் என்பதில் உள்ள பெருமைதானே தான் இந்து என்பதிலும் இருக்கிறது.
    .
    மற்ற மதத்தினர்கள் தங்களை தான் இந்த மதத்தைச் சார்ந்தவன் என சொல்லலாம்.ஆனால் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் அப்படி சொன்னால் மத வெறியனாம்.இப்படி சொல்வதுதான் மதச்சார்பற்ற நிலையாம்.இப்படிச் சொல்வது ஒரு ஃபேசன்.
    மோடி தான் பொருடபடுத்த முடியாத நபர்தானே.அவரை ஏன் இத்துனை பேர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  8. நான் என்னை இந்து என்று சொல்லிக்கொள்ளலாம். நீங்களும் சொல்லிக்கொள்ளலாம். அவ்வாறே மற்றவரகளும் இந்து, முசுலிம், தமிழர், கனடியர், பீஹாரி எனச்சொல்லிக்கொள்ளலாம்.

    ஆனால், வட்டல் நாகராஜ் தன்னைக் கனடியர் என்னும்போதும், மோடி தன்னை இந்து என்னும் போதும், ராமதாசு தன்னை வன்னியர் எனச்சொல்லிக்கொள்ளும் போதும் பிறமக்களுக்கு அதன் பொருளும் உள்ளோக்கமும் வேறாகவும் அச்சப்படும்ப்படியும் தெரிகிறது.

    இரண்டாவது, நீங்களே உங்களை எப்போது எதற்காக இந்து என்று சொல்லிக்கொள்கிறீர்கள் எனப்தைப்பொறுத்தும் அச்சொல்லின் வேகமும் விவேகமும் என்ன எப்படி எனப்து தெரிய வரும்.

    எனவே கருண், ஒட்டுமொத்தமாக ஒரேபதில் எங்குமே கிடையாது. இடம், பொருள், ஏவல், ஆள் என்பதைப்பார்த்தே அவை பார்த்தறியப்படும்.

    அடுத்து,

    சென்னைப்பற்றி.

    அவர் தன்னைப்பொருளாதார மேதையென்றும் அறிஞரென்றும் சொல்லிக்கொள்ளவேயில்லை. மற்றவர்கள்தான் சொல்லிக்கொள்கிறார்கள். நீங்கள் அவரைப்புலி என்கிறீர்கள்.

    அவர் படித்த கல்வி வழியாக அவருக்குத் தோன்றிய சிந்தனை அவரிடம் கேட்டதனால் சொல்கிறார். அவர் பிரபலம் எனவே அவர் சொன்னதை எல்லாரும் தெரியவருகிறார்கள்.

    ஏன் சொல்லக்கூடாதென்கிறீர்கள்? அவர் சொன்னது அவருக்கும் மற்றும் பலருக்கும் சரியாக இருக்கலாம். நீங்கள் அவர் சொல்வதை தப்பென்கிறீர்கள். அது உங்களுக்கும் பலருக்கும் சரியாக இருக்கலாம். அவ்வளவுதானே.

    மோடி பிரதமராக எந்த நாட்டுக்கு வர நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? இந்தியாவுக்கு. கோடிக்கணக்கான பிறமத்ததவரோடு இந்துக்கள் சுமூகமாக வாழ்ந்து மத நல்ல்லிணக்கத்தை உருவாக்கவேண்டும் அப்போதுதான் இந்தியா அமைதியாக இருக்கும்.

    பிரதமரே தன்னை இந்து என்று அடையாளம் காட்டிக்கொண்டு பெருமைப்பட்டால், அவர் இந்தியாவை முதலில் இந்து ராட்டிரமாக்க்கிக்கொண்ட பின்னர் பிரதமர் ஆகலாம்.

    He wants to the CEO of this country - a country of many religions and cultures. He should not identify himself with only one community. Pl remember that. In his private life, he can do so. A PM has a private life, too. Hasnt he?

    உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விவாதிக்கலாம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"