Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/18/2013

இப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா?



வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”


பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க.....

அதுவே சரியாயிடும்.

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து...”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை.

ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும்.

ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும்.

அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?” - படித்ததில் பிடித்தது.

17 comments:

  1. லக்கிலுக் யுவா முகநூளில் எழுதினது நினைக்கிறேன்..பட் நல்ல செய்தி.

    ReplyDelete
  2. கண்ணருகில் வைத்துக் கொள்ளும் கல்லைப் போல...!

    ReplyDelete
  3. நானும் படிச்சிருக்கேன்

    ReplyDelete
  4. உங்க கிளாஸ்ல நீங்க பாடம் நடத்துறதுனால எனக்கு தலைவலிக்குதுன்னா கிளாசை விட்டு எழும்பி போகலாம்னு எம்புட்டு நாசூக்கா சொல்லுது பாருங்க ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  5. ஏற்கனவே படிச்சதுதான்னாலும் மறுபடியும் படிக்க தூண்டுற அறிவுரை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. முக நூலில் பலமுறை உலா வந்த பயனுள்ள செய்தி...

    ReplyDelete
  7. @Manimaran said...
    லக்கிலுக் யுவா முகநூளில் எழுதினது நினைக்கிறேன்..பட் நல்ல செய்தி.//// தெரியல, இருக்கலாம்..

    ReplyDelete
  8. @திண்டுக்கல் தனபாலன் said...
    கண்ணருகில் வைத்துக் கொள்ளும் கல்லைப் போல...!/// நன்றி..

    ReplyDelete
  9. @ ராஜி said...
    நானும் படிச்சிருக்கேன் // நல்லது..

    ReplyDelete
  10. @MANO நாஞ்சில் மனோ said...
    உங்க கிளாஸ்ல நீங்க பாடம் நடத்துறதுனால எனக்கு தலைவலிக்குதுன்னா கிளாசை விட்டு எழும்பி போகலாம்னு எம்புட்டு நாசூக்கா சொல்லுது பாருங்க ஹா ஹா ஹா ஹா.../// அட...

    ReplyDelete
  11. சங்கவி said...
    நல்ல செய்தி...// நன்றி..

    ReplyDelete
  12. tbr.joseph said...
    ஏற்கனவே படிச்சதுதான்னாலும் மறுபடியும் படிக்க தூண்டுற அறிவுரை. பகிர்வுக்கு நன்றி./// நன்றி...

    ReplyDelete
  13. ezhil said...
    முக நூலில் பலமுறை உலா வந்த பயனுள்ள செய்தி...// ஆமாம் பயனுள்ள செய்தி..

    ReplyDelete
  14. படித்ததில் பிடித்தது...

    ReplyDelete
  15. நானும்முகநூலில் படித்து இருக்கிறேன்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  16. படித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது.....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"