Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/01/2013

பேப்பர் ‘கப்’-பில் டீ குடிக்கிறீர்களா? அப்ப முதல்ல இதப் படிங்க


ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் அன்பர் ஒருவர்,தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பலபரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தைசொன்னார் டாக்டர். 


அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு,அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒருமுடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும்,பேப்பர் ‘கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, ‘கப்'கள் மூலமாகத்தான், அந்த நபரின் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்றுகூறியுள்ளார் டாக்டர்.


அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், ‘பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் ‘கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது. 

இப்படி மெழுகுபூசப்பட்ட ‘கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம்காரணமாக, ‘கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம்வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளைதோற்றுவிக்கிறது.


"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் ‘கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம்.ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, ‘கப்'களைஉபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...”என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

நன்றி தினக்ஸ் இணையம் 

20 comments:

  1. ஆஹா இனி இதுலேயும் டீ குடிக்ககூடாதா....

    ReplyDelete
  2. ஏற்கனவே எங்கேயோ படித்த ஞாபகம் என்றாலும் ஒரு நல்ல பகிர்வு

    ReplyDelete
  3. ஐயையோ! காகித கப்பும் போச்சா?!

    ReplyDelete

  4. இதுவும் இப்படியா!!!!?

    ReplyDelete
  5. கண்ணாடி டம்ளர்களை விட பேப்பர் கப்கள் சுகாதாரமானவை என்ற தவறான எண்ணம் நிறையப் பேரிடத்தில் உள்ளது. ஆபத்தை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  6. எதை எடுத்தாலும் பிரச்சினைதானா?
    நல்ல தகவல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இதுக்குதான்யா நம்ம லல்லூஜீ மண் குவளையை அறிமுகம் பண்ணார். யாரு கேக்குறா? இப்போ பாரு எவ்வளவு பிரச்சனைன்னு!

    ReplyDelete
  8. அய்யோ இப்ப இது தானே எங்கும் பயன்படுத்தப்படுகிறது.

    ReplyDelete
  9. ஜாக்கிரதையாக இருக்கனும் போல

    ReplyDelete
  10. மெழுகு தடவப் பட்ட பேப்பர் கப் குளிர்ந்த தண்ணீர் அருந்துவதற்கு மட்டுமே ஏற்றது. லூசுத்தனமாக அதில் காபியையோ டீயையோ ஊற்றிக் குடித்து விட்டு வயிறு வலி என்று கூவுவது அறிவீனம்.

    ReplyDelete
  11. தகவலை சரிபார்த்து முதலில் வெளியிடவும்.போகிறபோக்கில் எதயாவது அள்ளிவிடதீர்கள்.

    Polyurethane is the materiel which is used a coat to avoid leakage in paper cups. get your facts right before spreading it.

    Raja

    ReplyDelete
  12. அப்பேலிருந்து காபி.டீ குடிக்கிற பழக்கமில்லிங்க....

    ReplyDelete
  13. அதனால் தான் நான் காகிதமே பயன்படுத்துவதில்லை – எழுதுவதற்கு உட்பட! (எல்லாம் கணினி மயம் தான் போங்கள்!)

    ReplyDelete
  14. பயனுள்ள தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. பயனுள்ள தகவல். பல இடங்களில் இதில் தானே தருகிறார்கள்....

    ReplyDelete
  18. பயனுள்ள தகவல். பல இடங்களில் இதில் தானே தருகிறார்கள்....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"