Ads 468x60px

6/20/2013

உதயமாகிறதா போட்டி தேமுதிக? மேலும் சில MLA க்கள் ஜெ -வை சந்திக்கின்றனர்.


கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. இதனால் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். 
ஆனால் அதிமுகவுடன் முறைத்துக் கொண்டு கூட்டணியை உடைத்துக் கொண்டது தேமுதிக. இருப்பினும் தேமுதிகவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் இதுவரை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவை, ‘தொகுதி நலனுக்காக' நேரில் சந்தித்துப் பேசினர். 

அவர்கள் 7 பேரும் தேமுதிக தலைமைக்கு எதிராக ‘அதிருப்தி' அணியினராக வலம் வருகின்றனர். இந்நிலையில் 27-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 5 எம்.பி.க்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் 6வது எம்.பி. இடத்துக்கு தேமுதிகவும் திமுகவும் போட்டியிடுகின்றன. 

இதற்காக இரு கட்சிகளும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற பகீரத பிரயத்னம் செய்கின்றன. இந்நிலையில் அதிமுக வசம் இருக்கும் 7 அதிருப்தி எம்..எல்.ஏக்களையுமே தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்க வைத்து வெற்றி பெறப் போகும் இளங்கோவனை, ஒரு அதிருப்தி எம்.பி.யாக தம் வசம் வைத்துக் கொள்ள அதிமுக முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த மேலும் 4 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கி உள்ளன. அப்படி 4 எம்.எல்.ஏக்கள், அதிருப்தி அணிக்குத் தாவினால் போட்டி தேமுதிக என்பது இயல்பாக உருவாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. 

நன்றி இணைய செய்திகள்

3 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"