Ads 468x60px

6/27/2013

விஜயகாந்த் தமிழர்களை விட்டுடுங்க பாவம் அவங்க - பாரதிராஜா


இயக்குநர் பாரதிராஜா. இளையராஜா, சமீபத்தில் மறைந்த மணிவண்ணன் ஆகியோருக்கு அடுத்து, இப்போது அவரது அட்டாக் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது. 

தமிழரல்லாத விஜயகாந்த், தமிழரை ஆளக் கூடாது என்னும் பொருள்பட, மிஸ்டர் விஜயகாந்த், பாவம் தமிழர்கள், எங்களை விட்டுவிடுங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனா, தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க? கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. 

ஆனா, தமிழ்நாட்டுல? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே... கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க. 

தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!'

இது எப்படி இருக்கு?

8 comments:

 1. இந்த அட்வைஸ் விஜயகாந்துக்கு மட்டும்தானா?!

  ReplyDelete
 2. இந்த கருத்துக்கள் ஆத்தாளுக்கும் சேர்த்து

  ReplyDelete
 3. கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி\\ ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. அதுசரி இதுவும் மனவாடாமே நிஜமா?

  ReplyDelete
 4. அப்ப தமிழகத்தில் யார்தான் தமிழா்கள்?
  தமிழர்களின் மீது அவ்வளவு அக்கறை உள்ளவர் முதலில் அவரது
  திரைபடத்தை காண தமிழா் தவிர யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கலாமே,
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 5. ம்ம்ம்ம்ம்.....

  அப்பப்ப இப்படித்தான் எதையாவது கொட்டுவார்!

  ReplyDelete
 6. இவர் சொல்வதில் என்ன தவறு, தமிழநாட்டில் மட்டும் தான் தமிழரல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆள ஆசைப்படுவது மட்டுமல்ல, அவர்களால் ஆட்சியைப் பிடிக்கவும் முடிகிறது. தமிழர்கள் தமிழ் நாட்டிலேயே ஆளுமையை, தமது மண்ணை இழந்தது எல்லாமே விஜயநகர ஆட்சியினால் தான். அவர்கள் தான் தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தெலுங்கு ரெட்டிகளுக்கும், நாயுடுகளுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். அவர்களால் தான் தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ் புறக்கணிக்கப்பட்டு, கோயில்கள் பார்ப்பனர்கள் வசம் போனது. தமிழ் நாட்டில் எந்தக் கிராமத்துக்குப் போனாலும் தெலுங்கர்கள் நிலச் சொந்தக்காரர்களாக இருப்பதற்கும் அவர்கள் தான் காரணம்.. எல்லாவற்றுக்கும் காரணம் தமிழர்களின் தனக்கில்லாது விட்டாலும் தானம் கொடுக்கும் பெருந்தன்மை, ஆனால் அதை மற்றவர்கள் தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்தின் அறிகுறி என்று நினைத்துக் கொள்வதால் தான் தமிழ் நாட்டில், ஆட்சியிலும் குறிவைக்கிறார்கள். இடைக்கிடை பாரதிராஜா போன்ற தமிழர்கள் பயமின்றி தமது கருத்தைத் தெரிவிப்பது உண்மையான தமிழர்களால் வரவேற்க வேண்டியதொன்று.

  ReplyDelete
 7. கருணாநிதி கூட தெலுங்குக் கலப்பினமாமே. அப்படியானால் தமிழ்நாட்டில் உண்மையான தமிழர்களே கிடையாது போலும். தமிழ் நாட்டுத் தமிழர்கள் எல்லாம் லத்தீனோக்கள் மாதிரி ஒரு கலப்பினமா? :)))

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"