Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/23/2013

மோடியின் மோடி வித்தை நாடகமா?

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத் பக்தர்களை அதிகாரிகள் படையுடன் சென்று பத்திரமாக மீட்டு வந்தார் மோடி . இவரது அசுர வேக செயல்களை பக்தர்களும் , பா.ஜ., தொண்டர்களும் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளனர்,
பருவ மழை காரணமாக வட மாநிலங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 40 ஆயிரம் பேர் வரை ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதியை குஜராத் முதல்வர் மோடி சென்று பார்வையிட்டார்.

இவர் தன்னுடன் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஒரு ஐ.பி.எஸ்., ஒரு ஐ. எப்.எஸ்., மற்றும் குஜராத் மாநில் நிர்வாக துறை அதிகாரிகள், இரண்டு டி. எஸ்.பி., 5 இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை கொண்ட குழுவினரை உடன் அழைத்து சென்றார். இவர்களுடன் லோக்கல் பா.ஜ., தொண்டர்களும் இணைந்து கொண்டனர். அங்கு மீட்பு பணியின் களத்தில் தானே நேரில் இறங்கினார். ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தவித்த குஜராத் பக்தர்களை மீட்டார்.

இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் இவர்கள் 4 விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோடி தானே களத்தில் இறங்கி தமது மாநில மக்களை மீட்டு வந்த சம்பவம் இம்மாநில மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. 

இதற்கிடையே மோடி, வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை. குஜராத் மக்களை மட்டுமே காப்பாற்ற வந்துள்ளார். என காங். குறை கூறியுள்ளது. நன்றி இணைய செய்திகள்.

5 comments:

  1. அண்ணே, 80 இன்னோவா கார் மற்றும் 4 விமானம் உதவியுடன் அவர் இவர்களை மீட்டதாக செய்திகள் வருகின்றன. தனது மாநில மக்கள் சிக்கி இருப்பது அறிந்து தானே நேரில் சென்ற அவரது உணர்வை மிகவும் மதிக்கிறேன். நிச்சயம் இது பாராட்டத்தக்க செயலே. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் எனது மரமண்டைக்குச் சில சந்தேகங்கள்?. ஒரு இனோவாவில் ஓட்டுனர் தவிர்த்து அதிகபட்சம் 7 பேர் செல்லலாம்! 80 இனோவாக்கள் எப்படி 15,000 பேரை வெறும் இரண்டு நாட்களில் கேதர்நாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள மாநிலத் தலைநகருக்கு கொண்டு சென்றிருக்க முடியும்!!? அப்படி இருப்பின் இது உலகசாதனை! மேலும் மாநிலத் தலைநகரில் இருந்து 4 விமானங்களில் 15,000 பேர் பயணித்தனர் எனில் ஒரு விமானத்திற்கு சுமார் 3750 பேர் வருகிறது. இப்படி 3750 பேர் ஒரே நேரத்தில் பயணிக்கும் விமானத்தை இதுவரை 39 நாடுகளுக்குச் சென்று வந்த நான் எங்கும் கண்டதில்லை, நிச்சயம் இதுவும் ஒரு உலகசாதனைதான்!!

    ReplyDelete
  2. புதுகை.அப்துல்லா அவர்களின் கருத்துரை மூலம் உலக சாதனையையும் அறிய முடிந்தது...!

    ReplyDelete
  3. நம்புகிற மாதிரி கதை சொல்லுங்க .இப்படி ஒரு 10 பேர் கொண்ட குழுவால் 15000 பேரை காப்பாற்ற முடியும் என்றால் ராணுவம் செய்யாமல் இருக்குமா? சரி, அவர் வீர தீர செயலை டி.வி யில் காட்டியிருக்கலாமே.அவ்வளவு கூட்டத்தில் குஜராத்திகள் தனியாக வாருங்கள் என்றாரா ? ராணுவம் போக முடியாத இடத்திற்கு இவர் போய் விட்டாரா? எந்த கதை சொன்னாலும் நம்பர கூட்டம் ஒன்னு இருக்கு. ஜால்ரா ,அப்படியே இன்னும் ஒரு 1000 இன்னோவா கொண்டு போய் எல்லோரையும் மீட்க வேண்டியதுதானே.ராணுவம் தன வீட்டிற்கு போயிருக்குமே.போங்கடா

    ReplyDelete
  4. உத்தரகாண்ட் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவித்த, குஜராத்தைச் சேர்ந்த 15000 பக்தர்களை ஒரே நாளில் திட்டம் தீட்டி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீட்டு வந்தார் என்ற கற்பனைச் செய்தியை,

    "இது எவ்வாறு சாத்தியமாகும்" என்பதைக் கூடச் சிந்திக்காமல் மூளையைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு ஒரு சில தவிரப் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன.

    இந்தச் செய்தியை வெளியிடாத ஊடகங்கள் கூட, இந்தச் செய்தியின் பொய்மையை விமர்சிக்கத் தயாராக இல்லை.

    இச்செய்தியைப் படித்த நமோ பக்தர்களும் தம்முடைய சுய சிந்தனைத் திறனை உபயோகிக்க மறுத்து ஊடகங்களில் வெளியான கற்பனைச் செய்தியைச் சமூக வலைப் பக்கங்களில் பரப்பி, "பாருங்கள் மோடியின் சாதனையை; இப்படி ஒரு மனிதர் நாளை பிரதமரானால் ஒரே நாளில் இந்திய மக்கள் அனைவரையும் மீட்டு விடுவார்" என்ற ரேஞ்சுக்குப் புகழ்ந்து தள்ளினர்.

    கற்பனைச் செய்தியைப் படித்து பாஜகவினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். செய்தியின் உண்மைத் தன்மையைச் சிந்திக்க மறந்த பல பாஜக தலைவர்களே நரேந்திர மோடியை வானளாவப் புகழ்ந்தனர்.

    நரேந்திர மோடி குறித்த அந்தக் கற்பனைச் செய்தியின் உண்மை நிலையை அன்றைய தினமே, குஜராத் அரசின் இணைய தள ஆதாரங்களுடன் ஆராய்ந்து எழுதிய தமிழ் ஊடகம் இந்நேரம்.காம் மட்டுமே என்றால் அது மிகையன்று.

    இந்நேரம் இணைய தளத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நரேந்திர மோடியின் ரேம்போ முயற்சியில் சிறிதளவும் உண்மையில்லை என்ற செய்திகளும் பணம் கொடுத்து விளம்பரம் செய்யப் படும் பெய்ட் நியூஸ் வகையைச் சேர்ந்த செய்தியே இது என்ற உண்மைகளும் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

    செய்தி வெளியான உடன் எந்த மறுப்பும் தெரிவிக்காத பாஜக, பொய்யான கணக்கால் நிலைமை கைமீறிப் போய் இது வரை ஊடகங்களில் பெய்ட் நியூஸ் வகையில் செய்து வந்த தமது அத்தனைப் பொய்ப் பிரச்சாரங்களும் வெளிப் பட்டு விடக் கூடும் எனப் பயந்து, ''நரேந்திர மோடி குறித்த செய்தி மிகைப் படுத்தப் பட்டு விட்டது. நரேந்திர மோடி தாம் 15000 பேரை மீட்டதாக ஒரு இடத்திலும் கூற வில்லை'' என்று தெரிவித்துள்ளது.

    தாங்கள் வழங்கும் செய்தி எந்த அளவுக்கு நம்பகமானது என்பதை அறியாமல் தங்களோடு சேர்த்து, வாசிக்கும் வாசகர்களையும் மடையர்களாக்கிய எந்த ஊடகமும் தங்கள் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்கக் கூட தயாராக இல்லை. இதன் மூலம் இது வரையில் இவர்கள் அளித்து வந்த செய்திகளின் நம்பகத் தன்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இத்தனைக்குப் பிறகும் "உண்மையின் உரைகல்" என்று பொய்யே சொல்லும் தினமலர், மோடிபற்றிய 15000 கற்பனையை மீண்டும் மீண்டும் எழுதி வாசகர்களை முட்டாள்களாக்கப் பார்க்கிறது.

    தவறான தகவல் அளித்து மக்களை மடையர்களாக்கும் இது போன்ற ஊடகங்கள் மீது பத்திரிகை கவுன்ஸில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மெய்ப் பொருள் காண்பதே அறிவு. காணத் தவறினால் காவிக் கலரிலும் காக்கா பறந்தது போன்ற செய்திகளையும் இனி காணும் நிலை வரலாம்.

    http://www.inneram.com/opinions/politics/667-wisdom.html

    ReplyDelete
  5. http://www.inneram.com/opinions/politics/667-wisdom.html
    உத்தரகாண்ட் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவித்த, குஜராத்தைச் சேர்ந்த 15000 பக்தர்களை ஒரே நாளில் திட்டம் தீட்டி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீட்டு வந்தார் என்ற கற்பனைச் செய்தியை,

    "இது எவ்வாறு சாத்தியமாகும்" என்பதைக் கூடச் சிந்திக்காமல் மூளையைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு ஒரு சில தவிரப் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன.

    இந்தச் செய்தியை வெளியிடாத ஊடகங்கள் கூட, இந்தச் செய்தியின் பொய்மையை விமர்சிக்கத் தயாராக இல்லை.

    இச்செய்தியைப் படித்த நமோ பக்தர்களும் தம்முடைய சுய சிந்தனைத் திறனை உபயோகிக்க மறுத்து ஊடகங்களில் வெளியான கற்பனைச் செய்தியைச் சமூக வலைப் பக்கங்களில் பரப்பி, "பாருங்கள் மோடியின் சாதனையை; இப்படி ஒரு மனிதர் நாளை பிரதமரானால் ஒரே நாளில் இந்திய மக்கள் அனைவரையும் மீட்டு விடுவார்" என்ற ரேஞ்சுக்குப் புகழ்ந்து தள்ளினர்.

    கற்பனைச் செய்தியைப் படித்து பாஜகவினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். செய்தியின் உண்மைத் தன்மையைச் சிந்திக்க மறந்த பல பாஜக தலைவர்களே நரேந்திர மோடியை வானளாவப் புகழ்ந்தனர்.

    நரேந்திர மோடி குறித்த அந்தக் கற்பனைச் செய்தியின் உண்மை நிலையை அன்றைய தினமே, குஜராத் அரசின் இணைய தள ஆதாரங்களுடன் ஆராய்ந்து எழுதிய தமிழ் ஊடகம் இந்நேரம்.காம் மட்டுமே என்றால் அது மிகையன்று.

    இந்நேரம் இணைய தளத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நரேந்திர மோடியின் ரேம்போ முயற்சியில் சிறிதளவும் உண்மையில்லை என்ற செய்திகளும் பணம் கொடுத்து விளம்பரம் செய்யப் படும் பெய்ட் நியூஸ் வகையைச் சேர்ந்த செய்தியே இது என்ற உண்மைகளும் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

    செய்தி வெளியான உடன் எந்த மறுப்பும் தெரிவிக்காத பாஜக, பொய்யான கணக்கால் நிலைமை கைமீறிப் போய் இது வரை ஊடகங்களில் பெய்ட் நியூஸ் வகையில் செய்து வந்த தமது அத்தனைப் பொய்ப் பிரச்சாரங்களும் வெளிப் பட்டு விடக் கூடும் எனப் பயந்து, ''நரேந்திர மோடி குறித்த செய்தி மிகைப் படுத்தப் பட்டு விட்டது. நரேந்திர மோடி தாம் 15000 பேரை மீட்டதாக ஒரு இடத்திலும் கூற வில்லை'' என்று தெரிவித்துள்ளது.

    தாங்கள் வழங்கும் செய்தி எந்த அளவுக்கு நம்பகமானது என்பதை அறியாமல் தங்களோடு சேர்த்து, வாசிக்கும் வாசகர்களையும் மடையர்களாக்கிய எந்த ஊடகமும் தங்கள் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்கக் கூட தயாராக இல்லை. இதன் மூலம் இது வரையில் இவர்கள் அளித்து வந்த செய்திகளின் நம்பகத் தன்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இத்தனைக்குப் பிறகும் "உண்மையின் உரைகல்" என்று பொய்யே சொல்லும் தினமலர், மோடிபற்றிய 15000 கற்பனையை மீண்டும் மீண்டும் எழுதி வாசகர்களை முட்டாள்களாக்கப் பார்க்கிறது.

    தவறான தகவல் அளித்து மக்களை மடையர்களாக்கும் இது போன்ற ஊடகங்கள் மீது பத்திரிகை கவுன்ஸில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மெய்ப் பொருள் காண்பதே அறிவு. காணத் தவறினால் காவிக் கலரிலும் காக்கா பறந்தது போன்ற செய்திகளையும் இனி காணும் நிலை வரலாம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"