Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/04/2013

ஒரு கொலுசு கவனமாகவே கழற்றப்பட்டது...




ரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது -
ஆயினும்...........
கால் சுளுக்கிக் கொண்டது...!


ன் செயல் மெதுவாகவே
ஊடுருவியது நெஞ்சில்-
ஆயினும்...........
காயப்பட்டு விட்டது உயிர்....!

ண்பா!
படிப்பு கேட்டாய்
“ சாப்ட்வேர் ” என்றதும்
ஸ்நேகமாய் சிரித்தாய்...

ம்பளம் கேட்டாய்
சொன்னேன்...!

ர் கேட்டாய்
சென்னை என்றேன்...!

றவினர் பற்றி
உரசிப் பார்த்தாய் ...!

போய்விட்டாய் நேற்று...

ஜாதகக் கட்டுடன் வந்தாய்
தங்கை வரனுக்காய்...
என் ஜாதகமும் கேட்டாய்...!

றுபடியும்.,
பூர்வீகம் சொத்து
ஜாடையாய் கேட்டாய்...!

ன் போட்டோ  பார்த்து
புன்னகையில்
அஜீத் என்றாய்...!

ரு நாள்
விருந்துக்கு அழைத்து
ஒரு கிலோ  எடை கூட்டினாய்...!

ங்கையை அறிமுகம் செய்து
அவள் கனவில்
என்னை தைத்தாய்
என்  நெஞ்சில்
அவளை விதைத்தாய்...!

 னிதாவின் மாடர்ன் ஆர்ட் ”
புரியாத பெயின்டிங்கை
புலம்பிவிட்டு போனாய்...!

 னிதா போட்ட கோலம்”
இடியாப்பக் கோடுகளை
என் மீது  திணித்தாய்...!

 ங்கை  சமைத்த குழம்பு ”
உணவு இடைவேளையில்
லஞ்சமாய் கொடுத்தாய்...!

ரவுக் கனவுகளில்
இருவரையும் சரசிக்கவிட்டு
ஏக்கக்  கூண்டில்
குருவியை அடைத்தாய்;
இப்போது
சிறகுகள் வேண்டும்.... இல்லை
திருமணம் வேண்டும்...!

த்திரிக்கை அடிக்க
பணம் கேட்டாய்
கொடுத்தேன்...!

ந்தல் அட்வான்ஸ்
மேளம், தாலி முன்பணம்
வெற்றுச் “செக்” காய்
வாங்கிப் போனாய்...!

மோதிர அளவுக்கு
விரலைக் கேட்டாய்;
கடிகார அளவுக்கு
கை கேட்டாய்...!

“ஷு ” அளவுக்கு
கால் கேட்டாய்;
அச்சு திருத்துமுன்
அப்பா பேர்கேட்டாய்;

ஓ.......................!
கடைசியில் அதையும்
கேட்டுவிட்டாய் நண்பா !

ஜாதி,

நின்று போனது கல்யாணம் மட்டுமா ?
என் நெஞ்சும் கூடத்தான்.

ன் தங்கை இப்போது
கல்யானமாகாத விதவை,

போ..... நண்பா......போ !
இன்னும்
ஜாதக கட்டுகளுடன் -
விதவைக்கு மாப்பிள்ளை வேண்டும்
விளம்பரம் கொடு.......!

ம்.......
ஒரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது
ஆயினும்...........

Repost

7 comments:

  1. நெத்தியடி கவிதை... நன்றி...

    ReplyDelete
  2. இந்தக் ஜா'தீ' கொடுமையை அருமையாக சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கடைசியில் அதையும்
    கேட்டுவிட்டாய் நண்பா !

    ஜாதி,?????????உன் தங்கை இப்போது
    கல்யானமாகாத விதவை.
    மனதில்லா மானிடன்

    ReplyDelete
  4. நெஞ்சில் தைக்கும்.

    ReplyDelete
  5. மிகச்சிறந்த கவிதை... ஜாதி கொள்கைகளுக்கு நல்ல அடி...

    ReplyDelete
  6. அப்படி முக்கியமென்றால் முதலிலேயே கேட்டிருக்கலாமே.....

    நல்ல கவிதை நண்பரே......

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"