Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/18/2013

திமுக - தேமுதிக நேரடி மோதல்: ஜெயிக்கப் போவது யார்?



மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு கேட்டு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.சுதீஷுடன் நடத்திய நேரடிப் பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் 6-வது இடத்துக்கு திமுக, தேமுதிக நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

மாநிலங்களவைத் தேர்தலில் ஒவ்வொரு மணி நேரம் ஒவ்வொரு காட்சிகள் மாறிமாறி அரங்கேறி வருகின்றன.

திங்கள்கிழமை காலை 11 மணி வரை 6-ஆவது இடத்துக்கு இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, திமுக சார்பில் கனிமொழி, தேமுதிக சார்பில் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுவதாக இருந்தது.

ஆனால் திடீரென அதிமுக 4 இடங்களில் மட்டும் போட்டியிடுவது என முடிவு எடுத்து, இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் திமுக, தேமுதிக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் பேச்சுவார்த்தை தோல்வி: மாநிலங்களவைத் தேர்தலில் தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை தலைமை நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினார்.

இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர். இப்படி அறிவிக்கப்பட்டாலும் தேமுதிக - திமுக இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொன்முடியும் தேமுதிக சார்பில் எல்.சுதீஷும் சென்னையில் தனியார் இடம் ஒன்றில் சந்தித்துப் பேசினர்.

இதற்காக ஸ்டாலின் வழக்கமாக பயன்படுத்தும் காரில் செல்லாமல் வேறு காரில் அந்த இடத்துக்குச் சென்றார். அரை மணி நேரத்துக்கும் மேல் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மாநிலங்களவைத் தேர்தலில் இந்த முறை திமுகவை தேமுதிக ஆதரிக்க வேண்டும் என்றும், அடுத்த முறை தேமுதிகவை திமுக ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் சுதீஷ் ஏற்றுக்கொள்ளாமல் முதலில் தன்னை ஆதரிக்குமாறு கூறியுள்ளார்.

ஆரம்பத்திலேயே இதை கேட்டிருந்தால் திமுக ஆதரவு தந்திருக்கும். ஆனால் தற்போது கனிமொழி மனுதாக்கல் செய்துவிட்டார். அதனால் ஆதரவு தருமாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கு உடன்படுவது போல மெளனம் காத்த சுதீஷ், விஜயகாந்திடம் ஆலோசித்து திங்கள்கிழமை காலை தெரிவிப்பதாகச் சென்றார். ஆனால் பதில் எதுவும் வரவில்லை.

தேமுதிக சார்பில் இளங்கோவன் போட்டியிட மனுதாக்கல் செய்யப் போகும் செய்தியைத் தெரிந்துகொண்ட திமுக தலைமை மிகுந்த கோபம் அடைந்தது. திமுக எந்தக் கட்சியிடமும் இந்த அளவுக்கு இறங்கிச் சென்றதில்லை.

சுதீஷ் மாமியார் மரணத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துடன், பிறகு மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாகவும் பேசி வந்தார். செஞ்சி ராமச்சந்திரன், பண்ருட்டி ராமச்சந்திரனை ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். எல்லாப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடத்தை விட்டுக் கொடுத்து அதிமுக எடுத்துள்ள முடிவால் உண்மையில் திமுக நிம்மதி அடைந்துள்ளது எனக் கூறலாம்.

அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களில் வெற்றி பெறுவதற்கு 170 வாக்குகள் தேவைப்படுகின்றன. அதிமுக 151 வாக்குகள், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வாக்குகள், பார்வர்டு பிளாக் கட்சியின் ஒரு வாக்கு என மொத்தம் 170 வாக்குகள் மூலம் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம். அது மட்டுமல்லாமல் தேமுதிவில் இருந்து பிரிந்த 7 பேரின் வாக்குகளும் உள்ளன.

திமுகவின் 23 உறுப்பினர்கள் வாக்குகளும், தேமுதிகவின் 22 உறுப்பினர்களின் வாக்குகளும் உள்ளன. இதில் காங்கிரஸ் (5), பாமக (3), புதிய தமிழகம் (2), மனித நேய மக்கள் கட்சி (2) ஆகிய கட்சிகளின் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளைப் பெறுவதற்கு திமுக முயற்சித்து வருகிறது.

தற்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினே நேரடியாகத் தலையிட்டு இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தேமுதிகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் திமுகவை ஆதரித்து வாக்களித்து கனிமொழியை வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறது திமுக வட்டாரம். இதுவரை நடந்த எந்த மாநிலங்களவைத் தேர்தலிலும் இந்த அளவுக்குக் குதிரைப் பேரம் நடந்ததில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். நன்றி இணையசெய்திகள்.

8 comments:

  1. சரியான விரிவான அலசல்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அதிமுக எடுத்துள்ள முடிவால் உண்மையில் திமுக நிம்மதி அடைந்துள்ளது எனக் கூறலாம்.???

    ReplyDelete
  3. அட போங்கப்பா! எனக்கு ஒண்ணும் புரியலை

    ReplyDelete
  4. இணைய செய்திகளுக்கு மிகவும் நன்றி...!

    ReplyDelete
  5. இப்படி பேரம் பேசி இவங்க அங்க போயி நமக்காக என்னத்த கிழிக்க போறாங்க

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"