Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/08/2013

எந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திருமாவளன் பேச்சு!



ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தார். திமுகவுடன் கூட்டணி வைத்தும் படுதோல்வி அடைந்தார். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், தன் அரசியல் பலத்தை நிருபிப்பதற்கு சாதியை கையில் எடுத்திருக்கிறார். தலித் அல்லாத சாதி அமைப்புகளை ஒன்று சேர்க்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட மோதல்களும் கிடையாது என திருமாவளவன் பேசியிருக்கிறார்.


என்னை அவன், இவன் என்றும், பொறுக்கி என்றும், ரவுடி என்றும் பேசுகிறார். நாடக காதல் நசுக்கும் சட்டம் என்று சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். எந்த தாஸ் வந்தாலும் எந்த வெட்டி வந்தாலும் சாதி மறுப்பு திருமணங்களை ஒழிக்க முடியாது. 
ஆனால், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்காகவும் சேர்த்துதான் நான் போராடி கொண்டிருக்கிறேன்.  திருமாவளவன் சொல்லியோ, தலித் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலே ராமதாசை ஜெயலலிதா கைது செய்யவில்லை. அது ராமதாசுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே இருக்கிற தனிப்பட்ட ஈகோ. 

என்னை என்ன வேண்டுமானாலும் அவர் பேசலாம். ஆனால் அந்த அம்மாவைப் பற்றி பேசினால் அவர் சும்மா இருப்பாரா? வழக்குப் போடு என்று ராமதாஸ் சொன்னார். எனக்கே சவாலா என்று அந்த அம்மா வழக்கு போட்டிருக்கிறார். அவர்களுக்குள் எந்த தனிப்பட்ட மோதல்கள் இருந்தாலும், சட்டப்பேரவையில் மரணக்கானம் தொடர்பான விளக்க உரையில் உண்மைகளை முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகளை வம்புக்கு இழுக்கிறார்கள். என்னதான் வம்புக்கு இழுத்தாலும் விடுதலை சிறுத்தைகள் வன்முறையை கையில் எடுக்க தயாராக இல்லை. அறிவு ஆயுதம் ஏந்தி செயல்பட முடிவு எடுத்திருக்கிறோம். அதனால்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சென்று நான் சந்தித்தேன். அனைத்து தலைவர்களையும் சந்தித்தது கூட்டணி வைக்க முயற்சி என்று கொச்சைப்படுத்துகிறார்கள். 

எங்களுக்கு தேர்தலை பற்றி கவலையில்லை. மக்கள் நலனுக்காகத்தான் மக்கள் ஒற்றுமை மாநாட்டை ஏற்படாடு செய்தோம். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும், திராவிட கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

4 comments:

  1. அறிவு ஆயுதம் - நல்ல முடிவு...

    ReplyDelete
  2. // எந்த தாஸ் வந்தாலும் எந்த வெட்டி வந்தாலும் சாதி மறுப்பு திருமணங்களை ஒழிக்க முடியாது //

    உங்கள் பதிவின் தலைப்பு திருமாவளவன் சொல்லாத ஒன்றை சொல்லுவது போல் இருக்கிறது

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"