Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/12/2013

ராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக்கிறாரா ?


அன்பார்ந்த வன்னியர் இன தோழர்களே....

வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், அவர்கள் முன்னேற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வன்னியர் என்ற சாதிப் பெயரை வைத்துக் கொண்டு, தன் குடும்பத்தை மட்டும் கோடீஸ்வர குடும்பமாக்கி விட்டு, மகனுக்கு பதவி, மருமகளுக்குப் பதவி என்று முழுக்க முழுக்க சுயநலமியாக இருக்கும் இந்த ராமதாஸ் உங்களின் பிரதிநிதியா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.


தொடக்க காலத்தில் இந்த இயக்கம் உருவாகக் காரணமாக இருந்த பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் தீரன், பு.தா இளங்கோவன், குணங்குடி அனீபா, என ஒருவருமே இன்று ராமதாஸோடு ஏன் இல்லை என்பதை யோசித்துப் பாருங்கள்.. தன் குடும்பம் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, ஆயிரக்கணக்கான வன்னிய இளைஞர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கும், சிறைக்கும், கோர்ட்டுக்கும் அலைக்கழித்து விட்டு, தான் மட்டும் கோடிகளில் திளைக்கும் இந்த விஷக் கிருமியா உங்களின் தலைவன் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த நபரின் சுயநலத்தால் எத்தனை வன்னிய இளைஞர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.

பெண் கொடுத்து பெண் எடுக்கும் உறவுகள் இல்லாவிட்டாலும், பெரிய உறவுச்சிக்கல் இல்லாமல் பழகி வந்த தலித் மற்றும் வன்னிய மக்களை இன்று நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாத வகையில் பகையாளியாக்கியதற்கு யார் காரணம் என்று யோசித்துப் பாருங்கள்.... இந்த சுயநலமியையும் அவர் குடும்பத்தையும் புறக்கணிப்பது மட்டுமே, வன்னியர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

ராமதாஸ் வன்னியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக்கிறாரா என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:

1. நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!

2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!

3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!

4.எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் - எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!

5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டாள் - இது சத்தியம்! என் தாய்மீது சத்தியம்!

இதையெல்லாம் உங்கள் டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!

முகப்புத்தகத்திலிருந்து...

8 comments:

  1. நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை

    ReplyDelete
  2. மேலே உள்ள 5 வாக்குறுதிகளில் 1, 2, 3, 5 ஆகிய வாக்குறுதிகளை மருத்துவர் அய்யா அவர்கள் இன்றுவரை காப்பாற்றி வருகிறார்.

    4 ஆவது வாக்குறுதியை அளிக்கும் உரிமை அவருக்கு இல்லை. தனது குடும்பத்தினர் அரசியலுக்கு வரலாமா? வரக்கூடாதா? என்றேல்லாம் அவர் முடிவெடுக்க முடியாது. தொண்டர்கள் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை அரசியலுக்கு வர வற்புறுத்திய போது - அதனை தடுக்கும் உரிமை அவருக்கு இருக்கவில்லை.

    ReplyDelete
  3. ராமதாஸ் கொடுத்த ஐந்து வாக்குறிதிகளை மீறிவிட்டார் என்று விகிடன் தெரிவித்து உள்ளது இந்தற்கு பதிலளிப்பது எங்களின் கடமை
    1.ராமதாஸ் சங்கத்திலும் கட்சியிலும் எந்தபோருப்பிலும் இல்லை அவர் பாமக வின் நிறுவுனர் அவள்தான் ஆனால் விகிடன் அவர் நிறுவன தலைவர் என்று தவறான தகவலை பதிவு செய்து உள்ளது கட்சின் தலைவர் ஜி.கே. மணி அணைத்து நாளிதழும் துளைகாட்சியிலும் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சின் நிறுவுனர் என்று குறிப்பிடு கின்றனர் இது ஆசிரியருக்கு எப்படி தெரியாமல் போனது
    2.இன்றுவரை அவர் சொந்த செலவில்தான் அவர் பயணம் செய்கிறார் இல்லை என்றால் விகிடன் ஆதாரம் வெளியிடட்டும்
    3.அவர் இதுவரை எந்த தேர்தலையும் சந்தித்தது இல்லை சடமன்றதிற்கோ நாடாலமன்றதிற்கோ அவர்சென்றதில்லை
    3.அவர் கட்சியிலும் சங்கத்திலும் எந்த பொறுப்பிலும் இல்லை.அன்புமணி மட்டுமே பொறுப்பிலும் பதவியிலும் இருக்கிறார் உண்மைதான் பாமக முதலில் நாடாளமன்றத்தில் நுழைய வாய்ப்பு கிடைத்த பொது அமைச்சர் பதவி கிடைத்த பொது ராமதாஸ் அவரோ அன்புமணி அவரோ பதவிக்கு செல்லவில்லை முதல் அமைச்சர்பதவியை தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த தலித் எழில் மலை அவருக்கு கொடுத்து அழகு பார்த்தார் மருத்துவர் ஆனால் தலித் எழில் மலை அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியை விட்டு ஓடினர் அதன் பிறகு பூதா இளங்கோவன் பூதா அருள் மொழி அவர்களை உர்வாகினார் அவர்களும் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியை விட்டு ஓடினர் அதற்கு பிறகு கிடைத்த அமைச்சர்பதவியை தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த பொன்னுசாமிக்கு கொடுத்து அழகு பார்த்தார் இப்படி பலருக்கு பதவியை வாங்கி கொடுத்தவர்கள் அனைவரும் கட்சியை காட்டி கொடுத்து விட்டனர் அக எதிர்வரும் காலகட்டத்தில் கட்சியையும் சங்கத்தையும் காப்பாற்ற ஒரு நம்பிகையான ஆள் தேவை பட்டது அதனால் தனது மகனை களம் இரக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார் அதனால் தான் அவர் இதை செய்தார்.
    5. அவர் யாரிடமும் விலை போக வில்லை முடிந்தால் அதற்கும் விகிடன் ஆதாரம் வெளியிடட்டும் பார்க்கலாம்

    அதே முகபுதகத்தில் நண்பர் ஒருவர் அளித்த பதிலில் இருந்து..

    ReplyDelete
  4. ///அருள் said...

    மேலே உள்ள 5 வாக்குறுதிகளில் 1, 2, 3, 5 ஆகிய வாக்குறுதிகளை மருத்துவர் அய்யா அவர்கள் இன்றுவரை காப்பாற்றி வருகிறார்.

    4 ஆவது வாக்குறுதியை அளிக்கும் உரிமை அவருக்கு இல்லை. தனது குடும்பத்தினர் அரசியலுக்கு வரலாமா? வரக்கூடாதா? என்றேல்லாம் அவர் முடிவெடுக்க முடியாது. தொண்டர்கள் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை அரசியலுக்கு வர வற்புறுத்திய போது - அதனை தடுக்கும் உரிமை அவருக்கு இருக்கவில்லை.///


    இந்த அருளை குண்டர் சட்டத்தில் 10ம் தேதியே உள்ளே போட்டுவிட்டர்கள்.
    இது அருளின் பினாமியா?

    ReplyDelete
  5. //
    இந்த அருளை குண்டர் சட்டத்தில் 10ம் தேதியே உள்ளே போட்டுவிட்டர்கள்.
    இது அருளின் பினாமியா?//

    முதலில் கண் மருத்துவரை அனுகவும் தொலைக்காட்சி செய்தியில் காட்டப்படும் சேலம் அருள் இவர் இல்லை

    ReplyDelete
  6. ராவணன் said...
    //இந்த அருளை குண்டர் சட்டத்தில் 10ம் தேதியே உள்ளே போட்டுவிட்டர்கள்//

    ஒரு அரை லூசு என்று தன்னைத் தானே நிரூபித்துக்கொண்ட இராவணனுக்கு நன்றி.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"