Ads 468x60px

5/31/2013

இந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண்டா?தமிழக முதல்வர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று, சட்டசபையில் சரத்குமார் பேசுகிறார். இதே போல், அ.தி. மு.க.,வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று பேசுகின்றனர்.

 தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, "சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட, வேஷ்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும்' என்கிறார். ஆக, இந்தியாவின் தென் கோடி மாநிலமாம், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனும், பிரதமராக வர முடியும் என்று, பேசும்படியான நிலை, தற்போது உள்ளது. உத்தர பிரதேச அகிலேஷ் யாதவும், இங்கு வந்திருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, "எங்கள் கட்சி அதிக சீட்கள் ஜெயித்தால், என் தந்தை பிரதமராவதற்கு, நீங்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறிச் சென்றார். 

தற்போது, நிலவி வரும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை, மாபெரும் ஊழல்களால், திறமையற்ற நிர்வாகத்தால், சீரிய தலைமையின்மையால், காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு, தேசியக் கட்சிகள் பெரும்பான்மை பெற முடியாத நிலை போன்றவற்றால், தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு, கூடுதலாக தோன்றுகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க., 30 இடங்களுக்கு மேல் ஜெயித்து, தேசியக் கட்சிகள் எதற்கும் பெரும்பான்மை இல்லை என்னும் நிலை வரும் போது, பிரதமரோ அல்லது துணைப் பிரதமர் பதவியோ, ஜெயலலிதாவிற்கு கிடைக்க வாய்ப்புண்டு. 

அதற்கான தகுதிகள் அவருக்கு உண்டா என்றால், உண்டு என்றே சொல்லலாம். தற்போது, அனைத்து விமர்சகர்களும், நரேந்திர மோடி பிரதமராக வந்தால், நன்றாக இருக்கும் என்றே கூறுகின்றனர். அவருடன் ஒப்பிடுவோமேயானால், ஜெயலலிதாவும் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஏழு மொழிகள் பேசத் தெரியும்; நான்கு மொழிகள் எழுத, படிக்கத் தெரியும். மிகப் பரந்த தொலை நோக்கு பார்வை உடையவர். அவரும், உலகறிந்த ஒரு பிரபலமான அரசியல் தலைவரும் கூட. எந்த ஒரு விஷயத்திலும், துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனால், தமிழனின் தலை எழுத்து, என்ன என்பதற்கு, இனி வரும் காலம் தான், பதில் சொல்ல வேண்டும்.

சு.பொன் இருளாண்டி, தேனி ...


5/30/2013

இது சந்தியாவின் முத்தம்பூர்வமான
ஒரு தனிமையில்
உட்கார்ந்து  கொண்டிருந்தோம்.

வார்த்தைகளின்
இடைவெளிகளை நிரப்பிய
நெகிழ்வான மௌனங்கள்
கரைத்துக் கொண்டிருந்தன
நாம் பேச இயலாத
சஞ்சலங்களை.

ந்த அடர்ந்த வனத்தின்
ஒற்றைப் பட்டாம்பூச்சியைப் பின்
தொடர்ந்துக்கொண்டிருக்கிறது
உன் மனம்.

ந்த நீர்க்குமிழிக் கணத்தின்
எதோவொரு இழையில்
மீண்டும் பலப்படுகிறது
நம் நட்பு .

நெகிழ்வுகள் நீங்கிய
வேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!மறுபதிவு .,
படங்கள் உதவி கூகிள்.

5/28/2013

" சோ " கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்


பாமக விடம் கையேந்துகிறதா திமுக ?


வரும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இம்முறை கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவளித்தார்ல் அடுத்த ஆண்டு விஜயகாந்தின் மச்சான் சதீஷுக்கு திமுக ஆதரவளிக்கும் என்பதுதான் பேரம். ஆனால் விஜயகாந்தோ இம்முறை சுதீஷ் என்பதில் உறுதியாக இருந்தார். 

இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் பேசாமல் தேர்தலையே புறக்கணித்துவிட்டால் என்ன? என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக.. 

இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது. 

காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் என்று திமுக நம்புகிறது. 

ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. 

பாமக கை கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

5/27/2013

கருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்?


ஊழலின் விளை நிலம் இந்தியா' என்று சொல்லும் அளவுக்கு, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு சேர்த்ததில், காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான பங்குண்டு.

5/25/2013

டி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்


பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

5/24/2013

இதற்காகவே அம்மாவை பாராட்டலாம்..."டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்" என சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்திய போதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

60 சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர்.

அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது" என தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை.

வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக அரசின் அறிவிப்பு, மிகவும் தவறானது. ஆந்திரா உட்பட பல மாநிலங்கள், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்துள்ளன.

"தகுதி மதிப்பெண்கள் அளவை, மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம்" என, என்.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழக அரசு மட்டும், ஏன் இப்படி செயல்படுகிறது என, புரியவில்லை.

ஒரே தகுதியை, அனைத்து தேர்வர்களும் பெற வேண்டும் என்பது சரியல்ல. இதனால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நல்ல தரமான ஆசிரியர்கள் உருவாக இது சரியான நடவடிக்கையே.. இதற்காகவே அம்மாவை பாராட்டலாம்...

5/23/2013

காமெடி கலாட்டாஎஸ்.எம்.எஸ்.கலாட்டா

1) Complete மற்றும் Finished --- இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை Complete....
அதுவே அத்தனை நண்பர்களும் பெண்களாக இருந்துவிட்டால் உங்கள் லைப் Finished....

2) யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........

கண்ணா பின்னா தத்துவங்கள்

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, 
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?" 

2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து 
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். 
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

விஜய்க்கு வச்ச ஆப்பு

"நடிப்புனா என்ன" என்று கேட்ட போது.
கமல் -அது என் இன்னொரு உயிர்
ரஜினி - அதுதான் என் வாழ்க்கை
சூர்யா - அதுதான் என் சுவாஸம்
விஜய்- அப்படின்னா என்ன "ஏதாவது ரஜினி படமா?சொல்லுங்க REMAKE பன்னிடலாம்

Mr.மொக்கை

MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..
"என்னா மேன்.. உன் mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!
மொக்கை பதிலளித்தார்..

கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!

சர்தார்ஜீ ஜோக்

சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழன், குஜராத்தி, சர்தார் ஜீ ஆகிய மூவரும் தப்பினர். நீண்ட தூரம் ஒட முடியாத மூவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தினுள் சென்று தம்மைத் தாமே கோணிப் பைகளில் கட்டிக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் அங்கு பொலீஸ் படையணி வந்து சேர்ந்தது. முதலில் தமிழன் இருந்த மூட்டையை காவல் துறை அதிகாரி காலால் உதைத்தார்
அப்போது அவன் “வவ்! வவ்!” எனச் சத்தம் இட்டான்.

அடுத்து குஜராத்தி “மியாவ்! மியாவ!” எனச் சத்தமிட்டார்.
இந்த இரு கோணிப் பைகளிலும் முறையே நாய் மற்றும் பூனை இருப்பதாக எண்ணிக்கொண்டனர் காவல் துறையினர்.

இறுதியாக அவர்கள் சர்தார் ஜீ இருந்த பையை எட்டி உதைத்தார் நீண்ட நேரம் எந்த சத்தமும் வரவில்லை. மீண்டும் ஓங்கி உதைத்த போது

“உருளைக் கிழங்கு” என ஒரு சத்தம் வந்தது.

ரசிச்சது எப்புடி............

5/22/2013

TNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, வருகிற ஜுன் 17ம ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17 ஆம் தேதியும். இரண்டாம் தாள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


தாள்-I...


1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.


தாள்-II...


6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள்அமைந்திருக்கும்.

ஆகவே , தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.

150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.

காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.''

- தகவல் இணையம்.

உலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை


குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இந்த வருடம் உலக பொருளாதார அமைப்பில் பேச உள்ளார். தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தவர்  நடிகை திவ்யா ஸ்பாந்தனா. 

இவருக்கு உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இளம் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், சர்வதேச இளம் தலைவர்கள் கலந்துகொள்வார்கள். இவர்கள் சர்வதேச பிரச்னைகள், அபாயங்கள் பற்றியும் அதை தீர்க்கும் விஷயங்கள் பற்றியும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். 

இதில் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இளைஞர்கள் அரசியலுக்கு ஏன் வரவேண்டும். கொள்கை முடிவுகளில் ஏன் பங்கெடுக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறார். இந்தக் கூட்டம் செப்டம்பர் மாதம் சீனாவில் நடக்க இருக்கிறது.

இதில் பெண்களுக்கும் பங்கு உண்டா?
நாட்டில், பயங்கரவாதம், கொலை, கற்பழிப்பு போன்ற வன்கொடுமைகள் பெருகி வருவது, மிகுந்த வேதனையளிக்கிறது. பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று, பிரதமர் உட்பட அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இது, தனிநபர் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், பாலியல் கொடுமைகளை பிரசாரத்தின் மூலம் தடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது.ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் மூலம், சட்டத்தினாலேயே கூட தடுத்து நிறுத்த முடியாத, இது போன்ற குற்றவாளிகளை பிரசாரத்தினாலும், போராட்டத்தினாலும் எவ்வாறு தடுக்க முடியும்?

நம் நாட்டில் சாதாரணமாக, ஒரு குற்றம் நடந்து, அந்த வழக்கின் விசாரணை முடிந்து, இறுதித் தீர்ப்பு வெளியாகும் போது, கிட்டத்தட்ட ஏழு, எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கும்.சில வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டும், அதை நிறைவேற்றுவதில், அதற்கு பின் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது.

சில வழக்குகளில், குற்றவாளிகள் பாதி தண்டனையை, விசாரணைக் காலத்திலேயே அனுபவித்து விடுவது உண்டு. இறுதியில், நிரபராதி என்று அவர் விடுவிக்கப்பட்டால், தேவையில்லாமல் ஒரு நிரபராதி சிறைவாசம் செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

வழக்கின் தீர்ப்பு வெளியாக, நீண்ட கால தாமதம் ஏற்படும்போது, அந்தக் குற்றத்தின் தீவிரம் நீர்த்துப் போவதுடன், மக்களும் அந்த சம்பவத்தை மறந்து விடுவர்.'தாமதித்துக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்' என்று சொல்வதுண்டு. 

சில மாதங்களுக்கு முன், கேரளாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில், ஒரு வழக்கின் குற்றப் பத்திரிகை, குற்றம் நடந்து மூன்று மாதங்களில் தாக்கல் செய்யப்பட்ட நற்செய்தி வெளியாகியிருந்தது. இன்று, பெருகி வரும் குற்றங்கள் குறைவதற்கு ஒரே வழி, பாலியல் மற்றும் கொலைக் குற்றங்கள், தனி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே. அவ்வாறு செய்தால், குற்றம் செய்ய முனைவோர், ஓரளவு பயப்படுவர். நிரபராதிகள் அனாவசியமாகத் தண்டிக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.

கற்பழிப்பு - தீர்வுதான் என்ன? முதலில் இந்த தலைப்புதான் வைத்தேன்.5/21/2013

அந்த முக்கியமான 5 ரகசியங்கள் ?நீங்கள் எப்போது இறக்கத் தொடங்குகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு மிக நேர்மையான பதில்... 'பிறந்த அடுத்த நொடியில் இருந்து' என்பதுதானே! 'நான் உற்சாகமானவன், சாதிக்கப் பிறந்த வன்' என்றெல்லாம் நீங்கள் எகிடுதகிடு தன்னம்பிக்கை வார்த்தைகள் வாசித்தாலும், நிதர்சன உண்மை அதுதான்.

ஆக, இறப்புதான் (இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்!) நமது இலக்கு என்றால், அந்தப் பயணத்தைப் பக்காவாகத் திட்டமிட வேண்டும் அல்லவா? அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கு முன் நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களை உங்களுக்குச் சொல்கிறார் ஜான் இஸ்ஸோ தனது 'The Five Secrets You Must Discover before you die' புத்தகத்தில்.


'இவர் தனது வாழ்நாள் முழுக்கச் சந்தோஷமாகக் கழித்தார்!' என்று பலரால் சுட்டிக்காட்டப்பட்ட 200 நபர்களைப் பேட்டி எடுத்திருக்கிறார் ஜான். 60 முதல் 106 வயது வரையிலான அந்த 200 பேரின் 18,000 வருட அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்டு, இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் ஜான். 'வாழ்க்கையில் உங்களுக்கு அதீத சந்தோஷத்தைத் தந்தது எது? வாழ்க்கை யில் நீங்கள் மிக முக்கியமாகக் கருதுவது எதை?' இவை போன்றவைதான் அவர்களிடம் ஜான் கேட்ட கேள்விகள். அந்தப் பதில்களைச் செதுக்கி, சீராக்கி, வடிகட்டி வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களைப் பட்டிய லிடுகிறார் ஜான். உங்களுக்கும் நிச்சயம் உதவும் ரகசியங்கள்...

1) உங்களுக்கு உண்மையாக இருங்கள்!

தனது 75 வயது ஆயுளில் ஜார்ஜ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை பிசிக்ஸ் புரொஃபசராகக் கழித்திருக்கிறார். அவரிடம் மாணவர்களின் மனப்போக்கு குறித்துக் கேட்டேன். 'தனது இதயம் செலுத்திய பாதையில் பயணித்தவர்களுக் கும் அந்தப் பாதையைப் புறக்கணித்தவர் களுக்கும் இடையே மலையளவு வித்தியாசத்தை நான் கவனித்திருக்கிறேன். தனது தோளில் ஏற்றப்பட்ட பிறரது கனவுகள், ஆசைகள், லட்சியங்களை வேறு வழியில்லாமல் தூக்கிச் சுமந்த மாணவர்கள், வாழ்நாட்களைக் கழித் தார்கள். ஆனால், தனது மனம் விரும்பிய படிப்பைப் படித்த மாணவர்கள்தான் வாழ்ந்தார்கள். ஆயுளைக் கழிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியா சங்கள் இருக்கின்றன. தனக்கே உண்மையாக இல்லாதவர்கள் பிறருக்கு எப்படி உண்மையாக இருப்பார்கள்?' என்றார் அந்த புரொஃபசர்.

2) எந்த ஏக்கத்தையும் மிச்சம்வைக்காதீர்கள்!

84 வயது டோனல்ட் ஆறு வருடங்களுக்கு முன்தான் தனது பிரியமான மனைவியை இழந்திருந்தார். மனைவி யுடனான 56 வயது மணவாழ்க்கைதான் தனது ஆயுளின் ஆகப் பெரிய சொத்து என்று புளகாங்கிதப்பட்டார் டோனல்ட். 'கல்லூரியின் முதல் வருட வாழ்க்கை முழுக்க நான் அநியாயத்துக்கு கூச்ச சுபாவி. அப்போது எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள் அவள். க்ரீம் கலர் ஸ்வெட்டர் அணிந்து மிக மிருதுவான கூந்தலுடனும் தேவதைச் சிரிப்புடனும் வளைய வந்த அவளைச் சுற்றிலும் எப்போதும் அழகிய பெண்களின் கூட்டம்தான். அன்று காலேஜ் டே. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நடனமாடலாம். அவளை என்னுடன் டான்ஸ் ஆட அழைக்கச் சொல்கிறது மனதின் ஒரு மூலை. பலவந்தமாகப் பிடித்துப் பின்னிழுக்கிறது மூளை. ஒரு வேகத்தில் என் கூச்சம் தவிர்த்து அவளிடம் சென்று, 'நீதான் நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!' என்றேன். சின்ன ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டே என்னுடன் அப்போது டான்ஸ் ஆடினாள். அதன் பிறகு அடிக்கடி அவளைச் சந்தித்தேன். எனது விருப்பத்துக்குச் சம்மதிக்கவைத்தேன். 56 வருட ஹனிமூன்!

ஒருவேளை அந்த ஆரம்பத் தயக்கம் என்னைத் தடுத்திருந்தால், இன்று மரணப் படுக்கையில் 'அன்று அவளிடம் எனது ஆசையை வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ' என்ற ஏக்கம் மிச்சம் இருந்திருக்கும். இப்போது நான் மிகச் சுதந்திரமாக உணர்கிறேன். நான் என் வாழ்க்கையை முழுக்க வாழ்ந்திருக்கிறேன்!' என்றார் அர்த்தம் நிறைந்த சிரிப்புடன்.

3) அன்பின் வடிவமெடுங்கள்!

டேவிட் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம் விசேஷமானது. 'எனது தந்தை தனியரு ஆளாக உழைத்து முன்னேறி கோடீஸ்வரனாகி எங்கள் குடும்பத்தையே உச்ச நிலைக்குக் கொண்டுசென்றவர். அவர் தனது மரணப் படுக்கையில் இருந்த கடைசி சில நாட்களில் அத்தனை வருடங்களில் தான் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தனது குழந்தைப் பருவம் முதல் இப்போது வரையிலான புகைப்படங்களைத் தன்னைச் சுற்றிப் பரப்பிவைத்துக் கொண்டார். அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த மனிதர்களுடனான தனது பாசப் பிணைப்பு குறித்து மட்டுமே பேசி நெகிழ்ந்துகொண்டு இருந்தார். அத்தனை பேரின் அன்பைச் சம்பாதித்ததைத்தான் தனது மிகப் பெரிய சாதனையாக நினைத்து, நிறைவான நிறைவை எட்டினார்!' அந்த நிறைவை எட்டுவதற்கு முதலில் நீங்கள் காதலிக்க வேண்டிய நபர் நீங்கள் தான்!

4) இந்த நொடி, இந்த நிமிடம் வாழுங்கள்!

ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வாழ்க்கை யாகத்தான் கணக்கில்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு இலக்கை அடையும் பயணத்தின் வழித் தங்கல் அல்ல ஒவ்வொரு நாளும்; அந்த நாளே ஓர் இலக்குதான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... குறிப்பிட்ட ஆனால், தீர்மானிக்கப்படாத வருடங்கள்தான் உங்கள் ஆயுட்காலம். அது 40 வருடமோ அல்லது 70 வருடமோ! அந்த வருடங்களின் எந்த ஒரு நொடி கடந்தாலும் அதை மீண்டும் நாம் திரும்பப் பெற முடியாது. உலகின் மிக உன்னத பொக்கிஷம் உங்கள் ஆயுளின் ஒரு நொடிதான். அப்படியிருக்க, அந்த தங்கத் தருணங்களை வெறுப்பு, கோபம், துவேஷம் என்று செலவழிப்பானேன். கொண்டாடுங்கள். உங்கள் சூழல் என்னாவாக இருந்தாலும் அதைக் கொண்டாட உங்கள் மனதைப் பழக்குங்கள்.

93 வயது ஜான் ஒவ்வொரு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் கண்டு களிக்கிறார். அந்தக் குதூகலத்தை 93 வயதில்தான் நாம் அனுபவிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே, அத்தனை வயது வரை நாம் மிஞ்சி இருப்போமா மாட்டோமா என்ற உத்தரவாதம் இல்லாத போது!

5) பெறுவதைக் காட்டிலும் அதிகமாகக் கொடுங்கள்!

அந்தச் சிறிய கிராமத்துக்கு கென் ஒருவர்தான் பார்பர். ஊரில் எந்த நல்லது கெட்டதுக்கும் கென்தான் கத்தியைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். அவரி டம் பேசிக்கொண்டு இருந்தபோது சிம்பிளாக ஒரே வரியில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொன்னார், 'இந்த ஊரில் யார் இறந்தாலும் நான் சென்று என் வேலையை முடித்த பிறகு தான் இறுதிச் சடங்குகள் துவங்கும். பல சமயங்களில் நான் எனது கத்தியைக் கழுவிப் பெட்டியில் வைப்பதற்குள் பத்து நிமிடங்களில் சடங்குளை முடித்து, கிட்டத்தட்ட இறந்தவரைத் துரத்தியடிப்பார்கள். ஆனால், சில சமயங் களில் 10 மணி நேரத்துக்கும் மேலாக சடங்கு களை நீட்டித்து இறந்தவரைப் பிரிய மனம் இல்லாமல் கண்களில் நீருடன் வழியனுப்பி வைப்பார்கள். காரணம், அவர் தன் வாழ்க்கை முழுக்கப் பிறருக்காக வாழ்ந்து இருப்பார். என் இறுதிச் சடங்கும் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது பேராசையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்காகவே இந்த உலகத்தின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறேன்!' என்றார்.

இந்த உலகத்தின் மீது ஆசைவையுங்கள்... சொல்லப்போனால் அத்தனை ரகசியங்களிலும் இது மிகவும் சுலபமானது!


நன்றி - கி.கார்த்திகேயன்.

5/20/2013

விஜயகாந்த் இனி அவ்வளவுதானா? ஒரு சிறப்பு அலசல்'நந்தவனத்திலோர் ஆண்டி; அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி...'இந்த சித்தர் பாடல், தற்போது, விஜயகாந்திற்கு நிச்சயம் பொருந்தும். 

5/19/2013

அரசியல்வாதிகளே - இது நியாயமா?இந்தி மொழியை எதிர்க்கிறோம் என்று, மாணவர்களை தூண்டி விட்டு, ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள்  இன்று, ஆங்கில வழி கல்வியையும் எதிர்க்கிறார்கள்.

5/13/2013

இப்படியும் சில பெண்கள் ! என்ன செய்ய?


ன்புள்ள அப்பாவுக்கு...
நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை 
வேண்டிக்கொள்கிறேன்.


அன்று,


தாமரைக் குளமும் 
பெருமாள் கோயிலும் 
பெரிதாய் இருக்கிறதென்று 
சொன்னீர்கள்...!


வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும் 
சின்ன காய்கறித் தோட்டமும் 
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில் 
வாழக் கொடுத்து வைக்க 
வேண்டுமென்று 
வக்கணை பேசினீர்கள்...!


மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக 
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!


மாப்பிள்ளையின் 
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள் 
சம்பந்தி வீட்டு பெருமை...!


மாப்பிள்ளை வீடு 
ரொம்ப அழகுதான் 
உறவினர்களின் உபசரிப்புக்கும் 
ஒரு குறையும் இல்லை...!


இங்கு 
நீங்கள் 
பார்க்கத் தவறியது 
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!


இருந்தாலும் பரவாயில்லை ...


இந்தக் கடிதத்தை 
அம்மாவிடம் 
படித்துக் காட்டும்போது 
அவரோடு நான் 
சந்தோஷமாகவே இருப்பதாக 
அவசியம் சொல்லவும்...!

படம் உதவி ஓவியர் இளையராஜா - மறு பதிவு.

5/12/2013

ராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக்கிறாரா ?


அன்பார்ந்த வன்னியர் இன தோழர்களே....

வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், அவர்கள் முன்னேற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வன்னியர் என்ற சாதிப் பெயரை வைத்துக் கொண்டு, தன் குடும்பத்தை மட்டும் கோடீஸ்வர குடும்பமாக்கி விட்டு, மகனுக்கு பதவி, மருமகளுக்குப் பதவி என்று முழுக்க முழுக்க சுயநலமியாக இருக்கும் இந்த ராமதாஸ் உங்களின் பிரதிநிதியா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

5/11/2013

சிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்


மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி போராட்டம் நடத்தினார் டாக்டர் ராமதாஸ். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 

சிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார்?


ஒரு வழியாக, சித்திரை முழு நிலவு நாள், டாக்டர் ராமதாசின் உத்தரவுப்படி, மிக வெற்றிகரமாக கொண்டாடியாயிற்று. வழக்கமான வன்முறைகளும் அரங்கேறி விட்டன.நடந்த வன்முறைகளை அங்கீகரிக்கும் விதமாக, "முடிந்தால் கைது செய்' என்று, சவால் விட்டார்.ராமதாசின் சவாலை, வேண்டுகோளாக ஏற்று, கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டார் முதல்வர். 

5/10/2013

கடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்?யுத்த நெருப்பில்
பொசுங்கிய மேனி,
சுனாமி புயலாலும்
பூமி அதிர்ச்சியாலும்
அழுகிக் கொண்டிருக்கும்  உடல்,
மரங்களை நடு...
பறவைகளைக் கூப்பிடு...
மண் தாய்க்கு அவசரம்
தோல் மாற்று
அறுவைச் சிகிச்சை...!

5/09/2013

+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

5/08/2013

சிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜனம்?!


எனக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சி பணியாற்றவே விரும்புகிறேன்' என, நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளது, சிவகங்கைத் தொகுதி மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்திருக்கும்(?).

எந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திருமாவளன் பேச்சு!ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தார். திமுகவுடன் கூட்டணி வைத்தும் படுதோல்வி அடைந்தார். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், தன் அரசியல் பலத்தை நிருபிப்பதற்கு சாதியை கையில் எடுத்திருக்கிறார். தலித் அல்லாத சாதி அமைப்புகளை ஒன்று சேர்க்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட மோதல்களும் கிடையாது என திருமாவளவன் பேசியிருக்கிறார்.

5/07/2013

இனியாவது பாமக-விசி யை ஒதுக்குவார்களா இவர்கள்?


"ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று, அவ்வை சொன்னதை, ராமதாசும், திருமாவளவனும் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர் போலும். இந்தியாவில், 4,000த்துக்கும் மேற்பட்ட ஜாதியினர் உள்ளனர் என்பதை மறந்த இவர்கள், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி கொலை செய்வது போல், ஒருவரை ஒருவர் தாக்கி மாண்டு வருவது, நாகரிகமற்ற செயல்களாக தோன்றுகின்றன. 

5/06/2013

இந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டினோம் - கலைஞர்
இந்திய தீபகற்பம் முழுவதிலும்,3554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரைஅமைந்துள்ளது.எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி அமையப் பெறவில்லை. 

சில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது ?


ன்மீது உண்டானது 
காதல்தான் என்று 
எனக்கு
முதலில் உணர்த்தியது 
மழை...!

ன்னுள் கரையும் போது 
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!

ரு மேகங்கள் சூழ 
ஒரு நாள் மழை தோடு முன் 
என் விரல்களை நீ  பற்றினாய் ...!

ம் முதல் ஸ்பரிசத்தை 
மேலும் மகிழ்த்தியது 
மழையின் பகிர்வு...!

நெற்றியில் விழும் 
ஒற்றை முடி விலக்கி 
மெல்ல இதழ் பதித்தாய்
அதுவும் 
ஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...!

பின்னொரு நாள் 
கனத்த இதயத்தையும் 
கண்ணீரையும் சேர்த்து 
என் காதலுக்கு கல்லறை 
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!

ந்த  மழை
என் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா 
என்று தெரியவில்லை ...!

ண்மையில்
உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது 
நீ தந்த 
மழைக்கும் எனக்குமான உறவு...!
- மறுபதிவு 

5/05/2013

எதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்டார்! போலிசை கலாய்க்கிறாரா?கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் மூலம் பப்ளிசிட்டி கிடைக்க சீனிவாசனின் இன்னொரு முகம் வெளியே தெரிய வந்தது. வேலை வாங்கித் தருவதாகவும், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், இரட்டிப்பு பணம் தருவதாகவும் பல உறுதிகளை கொடுத்து அதை காப்பாற்ற முடியாமல் தவித்த கதை மெல்ல மெல்ல வெளியே வந்தது. 


சென்னையில் ஆரம்பித்த இரண்டு புகார்கள் அப்படியே நகர்ந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா வரை சென்றது. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 7 புகார்களை அளித்துள்ளனர். புகாரில் ஏமாந்தவர்களின் கணக்குப்படி ரூபாய் 12 கோடியை எட்டுகிறது. 


இதில், ஒரு சில புகார்கள் சீனிவாசனும், அவரது மனைவியும் பணம் கேட்டவர்களை தொலைத்துவிடுவதாக சொல்லி மிரட்டிய புகார்கள் ஆகும். இந்த நிலையில் சீனிவாசனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் 5 நாள் காவ-ல் எடுத்து விசாரணை நடத்தினர். 


ஆனால், உருப்படியாக அவரிடமிருந்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இவ்வளவு பணத்தை என்ன செய்தீர்கள் என்று போலீசார் திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் அமைதியாக இருந்திருக்கிறார். சீனிவாசனை விசாரிக்கும் டீமில் இருக்கிற ஒரு அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார். 

திடீரென விக்கை கழட்டி தலையை துடைத்துக்கொண்டு மீண்டும் மாட்டிக்கொள்கிறார். என்ன சார் ஏதாவது சொல்லுங்களேன், கஸ்டடி முடியபோகுது என்று கேட்டால், மறுபடியும் ஒரு 5 நாள் கஸ்டடி கேட்டு வாங்கிக்க வேண்டியதுதானே என்று காமெடியாக பதில் சொல்லுகிறார். இவரிடம் இருந்து உண்மையை வரவழைக்கவோ, பணம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளவோ அவர் சொன்னபடி இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றுதான் கருதுகிறோம் என்கிறார் அந்த அதிகாரி. 


மொத்தத்தில் காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன், தன்னுடைய சிரிப்பையே வில்லத்தனமாக பயன்படுத்தி போலீசாரை கண்ணீர் விட வைத்திருக்கிறார்.


5/04/2013

இது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா.

5/03/2013

மருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்டுகோள்.பெட்டி செய்தி:

5/02/2013

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா?நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும், இருக்கிற  எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம்முக்கு  செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை. 

5/01/2013

நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர"நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர” என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.