Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/19/2013

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன?


கோடைக் காலத்திற்கு என்று தனியாக ஏதேனும் உணவுகள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டாம். கோடைக் காலத்தில் நமது உடல் இழக்கும் நீர்த்தன்மையை அதிகரிக்கவும், உடல் சூட்டைக் குறைக்கவும், நமது உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.


அதாவது நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேணடும்.

அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

உணவில் மோர் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

ஊறுகாய், உப்புத் தன்மை கொண்ட மோர் மிளகாய் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம்.

அதிகமாக நீர் பருகுங்கள். காபி, டீ ஆகியவற்றை திரவ ஆகார பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

நீர் மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறுகளை உணவிற்கு இடையே சேர்த்துக் கொள்வது நன்மையளிக்கும்.

இரவு வடித்த சாதத்தில் நீரை ஊற்றி அதனை காலையில் சிறிது உப்பு சேர்த்து அருந்துவது வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தரும்.

வெயிலில் அலைபவர்கள் மட்டும் குளுக்கோஸ் கலந்த நீரை பருகலாம்.

குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சீரகத் தண்ணீர் கொடுக்கலாம்.

புளி, காரம், உப்பைக் குறைத்து எளிமையான அதே சமயம் சத்தான உணவை தினமும் உண்ணுங்கள்.

கீரை, கிழங்கு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடலாம். வெள்ளரி, தர்பூசணி, மெலாம் பழங்களை சாறு எடுத்து பருகாமல், பழங்களாக சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்தும் உடலுக்குக் கிடைக்கும். தேவையற்ற சர்க்கரையும் குறையும்.


8 comments:

  1. வெயிலுக்கு குளுமை தேவைதான் .பயனுள்ள பதிவு அருமை

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  3. நுங்கு, சாப்பிடலாம். இளநீர், நன்னாரி சர்பத் போன்றவை குடிக்கலாம்.

    ReplyDelete
  4. பயனுள்ள யோசனைகள்... நன்றி...

    ReplyDelete
  5. வெயிலுக்கு ஏற்ற பதிவு...
    நன்றி.

    ReplyDelete
  6. ஆஹா சரிடே தம்பி....இங்கேயும் சூடு ஆரம்பிச்சிருச்சி....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"