Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/02/2013

வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை



இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நடைபெற இருக்கும்  நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற தேமுதிக கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய அதன்  தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவையில் இருந்து தமது கட்சி எம்எல்ஏக்கள்  ஆறு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் அதிருப்ப்தியையும்  தெரிவித்தார். 

இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாகச் சாடி பேசிய  அவர் இந்த பிரச்சனை தீரும் வரை நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தார். இதைப் போல மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

தனது பேச்சில் நான் நடிகனாக இருந்த போதே  இலங்கை தமிழர்களுக்காக பலவகையில் போராடி உள்ளேன். என் மூத்த மகனுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர் வைத்துள்ளேன். இலங்கை தமிழர்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும் வரை  என் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்று முடிவெடுத்து, அதன்படியும்  நடந்து வருகிறேன். 

2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை இலங்கை பிரச்சினைக்காக என்னுடைய கட்சி தே.மு.தி.க. புறக்கணித்தது. மற்ற அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்க வலியுறுத்தினேன். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. அப்படி புறக்கணித்திருந்தால் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார். தமிழ்ஈழ மக்களுக்கும் விடுதலை கிடைத்திருக்கும். தமிழீழமும் மலர்ந்திருக்கும்.

தற்போது வருகின்ற நாடாளுமன்ற  தேர்தலை இலங்கை தமிழர்களுக்காக தே.மு.தி.க. நிச்சயம் புறக்கணிக்கும். மற்ற கட்சிகளும் கண்டிப்பாக தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார். இந்த புறக்கணிப்பு(?) அந்த கட்சிக்கு  வெற்றியைத் தருமா? பொறுத்திருந்து பாப்போம்.


1 comments:

  1. ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்தாத்தான் பிழைக்க முடியும்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"