Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/13/2013

பேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்



குடிப்பழக்கம் மற்றும் டிரக்ஸ் போற போதைப்பழக்கங்கள் உடையவர்களை விடவும் ஃபேஸ்புக்கில் முழு நேரம் இருப்பவர்கள்  மிகவும் பலகீனமானவர்களாக உள்ளனர் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் மிசோரி சார்பில் சுமார் 225 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்த பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மது அருந்துவதைவிட ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் "அதிக" நேரத்தை செலவிடுவதே மிகுந்த ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மனித மூளைகள் பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், உடல் சோர்வு, பலவீனமான மனநிலையையும் பெற்றுத்தரும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இம்மாதிரி தளங்களில் அதிக அளவில் கவனம்செலுத்துவதை குறைக்கவேண்டும் எனவும், சிறுவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது நன்மைதரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை நான் சொல்றது தான் காமெடி... இப்படிக்கு அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்து தானே திருந்துபவர்கள் சங்கம்.



11 comments:

  1. உண்மைதான்.பெண்களே இப்போது கடையில் வந்து வாங்கும் கேவல நிலை உள்ளது

    ReplyDelete
  2. இதுல கூட நிறைய பேர் மாட்டிக்கிட்ட வெளியில வராம கிடக்குறாங்க....

    ReplyDelete
  3. யோசிக்க வைத்த பதிவு! நன்றி! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இரு குழிகளிலும் விழுந்தோர் பலர்... தானாக தான் மீண்டு வர வேண்டும்...

    ReplyDelete
  5. பேஸ்புக் மட்டும் இல்லை இந்த வலைதிரட்டியும் அப்படித்தான் எப்போதும் கமெண்ட் போட்டுகிட்டே இருக்கனம் இல்லைனா தலை வலிக்கும்.

    ReplyDelete


  6. என்னைப் போன்ற வயதானவர்களுக்கு வேறு வழியில்லை!

    ReplyDelete
  7. ம்ம்ம்.. சரி தான்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. only sick people use face book or other...

    ReplyDelete
  9. முக நூல் மட்டும் இல்ல ப்ளாக் எழுதுவதும் கிட்டத்தட்ட அதுபோல் தான் இருக்கு.சரியாத்தான் சொன்னீங்க!

    ReplyDelete
  10. I think the same will happen to those who spend more time on Blooger too!! Let me reduce it!!

    ReplyDelete
  11. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சே! எதையும் அளவுடன் கையாளும் மனவுறுதியை வளர்க்காவிடில் வினையே!
    முகநூம் பலரைப் பைத்தியாமாக்கி விட்டது உண்மையே!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"