Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/28/2013

இரவு நேர இம்சைகள்!?





நான்
தூங்கும்போது
மாலை செய்தித்தாளில்
படித்த செய்தி
நினைவில்
வந்து  இம்சிக்கிறது...!

தெரிந்தவர் மரணம் தான்
பாதிக்குமென்று
யார் சொன்னது?

முன்பின் தெரியாது
அந்த இளைஞனை...!

டிக்கும்போதே
மனதைப் பிசைந்தது
சிதைந்த முகம்
சிதறிய உடல்
நசுங்கிய கைகள்...!

த்தனை மனிதர்களோடு
அந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
என்று யோசிக்கும்போதே
கண்ணீர் திரண்டது...!

த்தனை நம்பிக்கையோடு
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
எதற்காகவோ அவன் பயணம்?
வேலைக்கான 
நேர்முகத் தேர்வுக்கா?
தன் காதலியை சந்திக்கவா?
அப்பாவின் வியாதிக்கு
மருந்து வாங்கவா?
எதாக இருந்தாலென்ன,
பாதியில் முடிந்துவிட்டதே
அவன் பயணம்...

னி எத்தனை
கைகள் நீண்டாலும்
அவன் அம்மாவின்
கண்ணீரைத்
துடைக்க முடியுமா?

Repost

4 comments:

  1. படிக்கும் போதே நம் கண்களிலும் கண்ணீர் பெருகுவதை தடுக்க முடியல்லே.அந்த அம்மா எப்படி தாங்குவாங்க?

    ReplyDelete
  2. முடியாது...?
    தெரிந்தவர்கள் பிரிவுதான் வதைக்கும் என்றில்லை...:(

    ReplyDelete
  3. செய்தித்தாள்களில் படிக்கும் சில தகவல்கள் மனதை வதைக்கவும் செய்கிறது... கோபத்தையும் உண்டாக்குகிறது...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"