Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/02/2013

பிரபாகரனின் மகனாகப் பிறந்தது, பாலச்சந்திரனின் குற்றமா?


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்ட படத்தை, சமீபத்தில், பிரிட்டனின், சேனல்-4 "டிவி" வெளியிட்டது.

இச்சம்பவம் போல், 240 ஆண்டுகளுக்கு முன், தென்நாட்டில் உள்ள பாளையங்களில் ஒன்றான, சிவகங்கைப் பாளையத்துக்கும் ஏற்பட்டது.

ராணி வேலுநாச்சியாரின் கணவரான, மன்னர் முத்துவடுகநாதரையும், அவரது இளைய மனைவியான கர்ப்பிணி கவுரி நாச்சியாரையும், ஜூன் 25, 1772ல் காளையார்கோவிலில், ஆங்கிலேயர் படுகொலை செய்தனர்.

அதற்கு முன், முத்துவடுகநாதர் தம் உயிரையும், தன் குடும்பத்தினரையும் காக்க வேண்டி, தான் உடனடியாக சரண் அடைவதாக, தம் வழக்கறிஞர்கள் மூலம் செய்தி அனுப்பினார்.

இதை ஏற்றுக் கொண்ட ஜெனரல் ஸ்மித், "சரண் அடையும் மறவர் மீது, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என்ற செய்தியுடன், தம் படைப் பிரிவில் சிலரை அனுப்பினார்.

ஆனால், கர்னல் பாஞ்ஜோருக்கு இச்செய்தி போய் சேரவில்லை. கர்னல் பாஞ்ஜோர், தன் உயர் அதிகாரிகளைக் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக இந்தப் படுகொலையை அரங்கேற்றினார்.

இச்செய்தியை, இரண்டு லண்டன் செய்தித்தாள்கள், கையில் எடுத்து, கர்னல் பாஞ்ஜோரை, இரக்கமற்ற கொலைகாரன் என்று வர்ணித்தன.

கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள், உண்மையை அறிந்து, "ஜெனரல் ஸ்மித் தான் பொறுப்பேற்க வேண்டும்' என்றும், "அவருக்கு ஏன் கடும் தண்டனை வழங்கக்கூடாது என்பதற்கு, முகாந்தரம் கொடுக்க வேண்டும்' என்றும் வழக்கு தொடர்ந்தனர்; கோர்ட் ஆப் டைரக்டர்கள் முன்னிலையில் விசாரணை நடந்தது.

மருது சகோதரர்கள், குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன், 520 பேருக்கு மேலானோர், திருப்புத்தூரில், 1801 அக்., 24 முதல் 27 வரை, மூன்று நாட்களில் தூக்கிலிடப்பட்டது வரலாறு.

இருப்பினும், சின்ன மருதுவின் மகன் துரைசாமி தூக்கிலிடப்படவில்லை. காரணம், இவன் சிறியவன் என்பதாலும், இந்த போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்பதாலும், அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

நாடு பிடிக்க வேண்டும் என்று வந்த ஆங்கிலேயருக்கு இருந்த மனிதாபிமானம், இந்த இலங்கை சிங்கள ராணுவத்திற்கு இல்லாமல் போய் விட்டதே!

இந்த படுகொலையைச் செய்தவர்கள், என்றாவது ஒரு நாள், மனித குலத்திடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும். போன உயிர் போனது தான். பிரபாகரனின் மகனாகப் பிறந்தது, பாலச்சந்திரனின் குற்றமா? 
நன்றி : மாரி சேர்வை - சிவகங்கை.


4 comments:

  1. இலங்கை சிங்கள ராணுவத்தில் மனிதர்கள் இருந்தால் தானே... பாவிகள்...

    ReplyDelete
  2. மன்னிக்க முடியாத குற்றகங்களை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம்...


    உலக சமூதாயத்திடம் கண்டிப்பாக பதில்சொல்லியாக வேண்டும் ராஜபக்சே...

    ReplyDelete
  3. இன வெறிநாய்களின் குற்றம்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"