Ads 468x60px

12/31/2012

ஒரு தாயாய் மக்கள் உணர்வு புரிகிறது... சோனியாவின் கபட நாடகம்?


இப்போது நாட்டு மக்கள் தங்களின் ஒரு சகோதரியை இழந்தது போன்ற துயரத்தில் இருப்பதை ஒரு தாய் என்ற முறையில் நான்  புரிந்து கொண்டுள்ளேன். நாட்டில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுட்டுக் கொள்ளகிறேன் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

12/24/2012

தலைமை ஆசிரியர் !!!வரமா? சாபமா?இன்றைய மாணவர்களுக்கு மதிப்பெண்களைத் தவிர மற்ற அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு அனைத்து சலுகைகளும்  "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை மேம்படுத்த  நிதிநிலை அறிக்கையிலும்கூட மூன்றில் ஒரு பங்கு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.

12/23/2012

சச்சினின் நிறைவேறாத ஆசை.


ஒருநாள் போட்டிகளில் 49 முறை சதமடித்து சாதனை செய்த  சச்சின் தமது 50-வது சதத்தை அடிக்காமலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய  16-வயதில் நம்  இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கிய டெண்டுல்கர் 39-வது வயதில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

சச்சின் சாதனைகள் : சச்சின்  மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் எடுத்த ரன்களின் சராசரி என்பது 44.83 ஆகும். 

ஒருநாள் போட்டிகளில் சச்சின் மொத்தம் 49 முறை சதமடித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். அதேபோல் 96 முறை அரை சதம் அடித்திருக்கிறார். இருப்பினும் ஒருநாள் போட்டியில் சச்சின் 50வது சதமடிப்பதை தாம் எதிர்பார்ப்பதாக அவரது மனைவி சமீபத்தில்  கூறியிருந்தார். ஆனால் அந்த  சதத்தை அடிக்காமலையே  சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் 100 அரை சதமும் 50 சதமும் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எது எப்படியோ கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இதை யாராலும் மறுக்க முடியாது.

12/21/2012

இப்படியும் சில பெண்கள் ..

பார்க்க, ரசிக்க..
    நன்றி கூகிள் இமேஜ்

12/20/2012

இவள் விலைமாது அல்ல...வள் உழைத்த காசில்
தினம்
குடித்துவிட்டு வந்து,
அவளை
அணைக்கும் கணவனை 
பத்தினிமார்,
வரிசையில் 
இடமின்றி போகுமோ?
என, நிதம் 
போறுத்துக்கொள்ளுவாள்!!!

12/19/2012

ஒரு பெண் இப்படியா இருப்பாள்?ன்புள்ள அப்பாவுக்கு...

நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை 
வேண்டிக்கொள்கிறேன்.

அன்று,தாமரைக் குளமும் 
பெருமாள் கோயிலும் 
பெரிதாய் இருக்கிறதென்று 
சொன்னீர்கள்...!வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும் 
சின்ன காய்கறித் தோட்டமும் 
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில் 
வாழக் கொடுத்து வைக்க 
வேண்டுமென்று 
வக்கணை பேசினீர்கள்...!மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக 
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!மாப்பிள்ளையின் 
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள் 
சம்பந்தி வீட்டு பெருமை...!

மாப்பிள்ளை வீடு 
ரொம்ப அழகுதான் 
உறவினர்களின் உபசரிப்புக்கும் 
ஒரு குறையும் இல்லை...!

இங்கு 
நீங்கள் 
பார்க்கத் தவறியது 
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!

இருந்தாலும் பரவாயில்லை ...

இந்தக் கடிதத்தை 
அம்மாவிடம் 
படித்துக் காட்டும்போது 
அவரோடு நான் 
சந்தோஷமாகவே இருப்பதாக 
அவசியம் சொல்லவும்...!

ஓவியம் - இளையராஜா -நன்றி. மீள் பதிவு.

12/17/2012

ஞாபக சக்தி அதிகம் பெற வேண்டுமா?உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கிழே உள்ள குறிப்புகளை படிங்கள் 

சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும். அரையாண்டு தேர்வில் தங்கள் பிள்ளைகள் அதிக நினைவுத் திறனுடன் தேர்வெழுதி அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். நன்றி.. 
- முகநூல்.

12/16/2012

ஒ.. இந்த பிளாக் என்னுடையது தானா? அப்ப கொஞ்சம் சிரிப்போம்..

நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது.
டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.படித்ததில் பிடித்தது...