Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/10/2012

குரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் பெற முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?


டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை (Download) பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள்  டி.என்.பி.எஸ்.சி  அலுவலகத்தையும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும் அணுகி தாற்காலிகமாக  ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதுதொடர்பாக,  டி.என்.பி.எஸ்.சி  வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒருங்கிணைந்த சார்நிலைப் பணி-1 மற்றும் இதரப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது. 

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் (Website) இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் (Download) செய்ய தங்களது பதிவு குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். தேர்வர்களின் வசதி கருதி அவர்கள் தேர்வு எழுதும் மையத்தின் முழு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், தொலைபேசி எண் ஆகியவை ஹால் டிக்கெட்டில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகக் கேட்டுத் தெளிவு பெறலாம். 

ஹால் டிக்கெட்டை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) வரை பதிவிறக்கம் செய்ய இயலாத சென்னை விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய அலுவலகத்தையும், இதர மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வு மைய விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் நேரில் அணுகலாம்.

தாங்கள் விண்ணப்பிப்பதற்கான சான்றுகளாக, விண்ணப்பப் படிவம் நகல், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான சான்று , தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றின் நகல்களைச் சமர்ப்பித்து தாற்காலிக ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்ததற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே தாற்காலிக ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினமணி.


3 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"