Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/07/2012

தோல்வி என்பது நிரந்தரமல்ல தோழா.... Repost



ல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஒரு சில மாணவர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடுவதுண்டு. இதற்கு மாணவர்களது பெற்றோரும் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுவார்கள்.
ஆனால், எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்பதை எடுத்துக் கூற பல வரலாறுகள் உள்ளன.

இந்தியாவின் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது. அதனால் அவர் அடைந்தது மகாத்மா என்ற பெருமையை.



இதேப்போல, எத்தனையோ பேர், தாங்கள் அடைந்த சிறு தோல்வியால் பயணம் மாறி பெரிய லட்சியங்களை அடைந்துள்ளனர்.


ஸ்பெயினைச் சேர்ந்த ஜுலியோ என்ற இளைஞன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அதீத பயிற்சியில் ஈடுபட்டு, ரியல் மேட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அணியின் சிறந்த கோல் கீப்பராக வருவார் என்று எல்லோரும் எண்ணினார்.

ஒரு நாள் கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஜுலியோவிற்கு நடப்பதே கடினமானது. 18 மாத மருத்துவமனை வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த ஜுலியோ, தனது வாழ்க்கைப் பயணம் இப்படி இருண்டு விட்டதே என்று எண்ணி கண்ணீர் விட்டார். கண்ணீரை பேனாவில் மையாக ஊற்றி பாடல்கள் எழுதினார். இதனை கிட்டாரில் தானே வாசித்து பாடவும் செய்தார்.

பின்னாளில், இசை வரலாற்றில் ஜுலியோ இக்லேசியஸ், சிறந்த பத்து பாடகர்களில் ஒருவராக இடம்பெற்றார். 300 ஆல்பங்களை வெளியிட்டு, ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

அந்த கார் விபத்து அவருக்கு நேரிட்டிருக்காவிடில், ஜுலியோ இக்லேசியஸ் வெறும் 100 பேருக்கு தெரிந்த ஒரு கோல் கீப்பராக இருந்திருப்பார். ஆனால் தற்போது உலகமே அறிந்த பாடகராக இருக்கிறார்.

நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர, திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.

ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம், நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான்.


தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள். தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும்.



உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும்.


பாலிடெக்னில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்தான் ஐன்ஸ்டீன். அவர் விஞ்ஞானியாகவில்லையா. தோல்வி அடைந்துவிட்டோம். நமக்கு எதுவும் தெரியாது என்று அவர் நினைத்திருந்தால் நமக்கு ஐன்ஸ்டீன் என்ற ஒரு நபர் தெரியாமலேப் போய் இருப்பார் அல்லவா?

கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார் ஒரு இளைஞர். ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் மூலமாக அந்த கனவு தகர்ந்தது.

தோல்வியில் துவளாமல், அடுத்து எம்.எஸ்சி., முதுநிலை முடித்து ஐடி துறையில் சேர்ந்தார். ஐடி துறையில் தனது திறமையின் மூலம் மிக உயரிய இடத்தை அடைந்தார். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்போசிஸ் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்தான். ஒருவேளை கிரிஸ், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடையாமல் போயிருந்தால், தற்போது கேரளாவின் ஒரு குக் கிராமத்தில், மூக்கொழுகும் குழந்தைக்கு மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார். தோல்வியின் காரணமாக உலகமறிந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவராகியுள்ளார். (உதவி  தினமலர்)

எனவே, மாணவர்களே, தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல. ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள். தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக ஜெயிக்கிறார்கள்.

எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்.


தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்.

26 comments:

  1. பரீட்சை நேரத்தில் மிகவும் பயனுள்ளபதிவு நன்றி

    ReplyDelete
  2. பரீட்சை நேரத்தில் மிகவும் பயனுள்ளபதிவு நன்றி

    ReplyDelete
  3. வணக்கம்

    தோல்வியே வெற்றிக்கு முதற்படி - நல்ல பயனுள்ள செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. மாணவர்களுக்கு பயனுள்ள நல்ல பதிவு தோழரே

    ReplyDelete
  5. அருமையான பதிவு....

    ReplyDelete
  6. இந்த நேரத்தில் மிக தேவையான பதிவு ..

    ReplyDelete
  7. அவசியமான நேரத்தில் விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி தம்பி

    ReplyDelete
  8. மாணவன் மனமறிந்த பதிவு.

    ReplyDelete
  9. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வந்துள்ள நீட்டான பதிவு. நன்றி

    ReplyDelete
  10. சிறந்த தன்னம்பிக்கை பதிவு !

    ReplyDelete
  11. அருமையான பதிவு ..

    ReplyDelete
  12. இன்றுதான் உங்களுக்கு போன் பன்னி ஏன் பதிவு போடலன்னு கேட்போம்னு இருந்தேன் ...

    ReplyDelete
  13. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. தேர்வு எழுதப்போகும் மாணவ மணிகளுக்கு
    நல்ல அறிவுரைக் கட்டுரை நண்பரே ...
    வெற்றி பெறட்டும் மாணவக் கண்மணிகள்.....

    ReplyDelete
  15. நீண்ட இடைவெளிக்குப்பின்...நலமா?

    தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பயனுள்ள நல்ல பதிவு தோழரே...

    ReplyDelete
  16. ஐன்ஸ்டீன் இன் தோல்வியை வியக்கிறேன்.. நல்ல தோல்விகள்!-வாழட்டும்..

    ReplyDelete
  17. பாலகுமாரன் கூட கணக்கில் தோற்றேன், ஆனாலும் வாழ்க்கையில் ஜெயித்தேன் என்று தனது பள்ளி பருவ தோல்வியை தாண்டி வந்ததை குறிப்பிடுகிறார்.

    ReplyDelete
  18. அருமையான பதிவு, தேர்வுக்கு பின் மிக நீண்ட வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது உங்கள் பதிவு. மீள் பதிவிட்டதற்கு நன்றிகள்..

    ReplyDelete
  19. அருமையான தன்னம்பிக்கை பதிவு கருண். எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. எதையும் தைரியமாக எதிர்நோக்கும் பண்பு வேணும்னு சொல்லும் அருமையான பதிவு.

    ReplyDelete
  21. ஆனால், எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்பதை எடுத்துக் கூற பல வரலாறுகள் உள்ளன.

    சிறப்பான பயனுள்ள பகிர்வு..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  22. மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

    கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

    மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

    இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

    ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

    இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

    சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

    இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

    தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
    for readmore www.fcrights.in

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"