Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/31/2011

என்னடா உலகமிது... Repost




கிழிந்த சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!
ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!
பட்டு சட்டை போட்டவன்
கைக்குட்டை கேட்டான்
மலைபோல் குவித்து
காட்டினான் அவனுக்கு...!

நான் எடுத்து வந்தேன்
அவன் மறுத்து சென்றான்...!

12 comments:

  1. நல்லா சொன்னீங்க பாஸ். உண்மை நிலைமை இதுதான்.

    ReplyDelete
  2. இவ்வளவுதான் உலகம்

    ReplyDelete
  3. நச் வரிகள்,
    நறுக்குடன்.
    நன்றி சகோ.

    ReplyDelete
  4. நன்று.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    ReplyDelete
  5. வணக்கம் நண்பா,

    ஏற்றத் தாழ்வுகள் பொருளாதார அடிப்படையில் எம் சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதனை கவிதையினூடே சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  6. நடைமுறை நிதர்சனம் இயல்பான நறுக் வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கிறது. நன்று.

    ReplyDelete
  7. உண்மையை ரத்தின சுருக்கமாக சொன்னீர்கள்

    ReplyDelete
  8. நல்லா சொன்னீங்க.. புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் தர்ற உலகமாச்சே இது :-)

    ReplyDelete
  9. நடைமுறையை நச்சென்று சொல்லிவிடீர்கள்

    ReplyDelete
  10. உண்மை தான்...
    சட்டை கிழிந்திருப்பவன் சட்டை வாங்க சென்றால் யாரும் சட்டை செய்வதில்லை

    ReplyDelete
  11. // நான் எடுத்து வந்தேன்
    அவன் மறுத்து சென்றான்//

    கவிதையின் உயிரே இவ்வரிகள்
    தான்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. தலைப்புக்காக
    கவிதை எழுதினீர்களா?

    கவிதை எழுதிவிட்டு
    தலைப்பிட்டீர்களா?

    அருமையான பதிவு நண்பா..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"