Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/22/2011

கோழி முட்டை தண்டவாளத்தில் நிற்குமா?


கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஒன்றுகூடி மேலதிகாரிகளிடம். ' மாடு போல உழக்கும் எங்களுக்கு குறைந்த சம்பளம், எங்களை வேலை வாங்கும் மேலதிகாரிகளுக்கு மட்டும் ஆயிரங்கனக்கில் சம்பளம்" என்று முறையிட்டனர்.

இவர்களது குறையைக் கேட்ட மேலதிகாரி , ' ஒரு கோழி முட்டையை அவர்களிடம் கொடுத்து இதை தண்டவாளத்தின் மீது நிற்க வைக்க முடியுமா?' என்று கேட்டார்.

அந்த தொழிலாளர்கள் முட்டையை தண்டவாளத்தின் மீது நிற்க வைத்தால் முட்டை உருண்டுவிடும் என்றனர். அப்போது அங்கு வந்த சூப்பர்வைசரிடம் தண்டவாளத்தின் மீது முட்டையை நிற்க வைக்க முடியுமா? ஏன் முடியாது எனக் கூறி சூப்பர் வைசர் சிறுது மணலை கொட்டி அந்த முட்டையை அந்த தன்வாளத்தின் மீது நிற்க வைத்துக் காட்டினார்.

அவருடைய புத்திசாலிதனத்துக்குதான் அதிக சம்பளம் என்றார் அதிகாரி.

சிறுவர் கதைகள்-1.


12 comments:

  1. இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ...!!!

    ReplyDelete
  2. கோழி முட்டை நிற்காது...ஆனால், ஆம்லேட் நிற்கும்...

    ReplyDelete
  3. குட்டிக்கதையில் நல்ல விடயம் ஒன்றை சொல்லியிருகீங்க......புத்திசாலித்தனம் இருந்தால் எங்கையும் பொழைப்பை ஓட்டலாம்

    ReplyDelete
  4. அறிவின் தகுதியின் அடிப்படையில்
    ஊதியம்...
    ஊதியக் கொள்கையை சிறு காதில்
    அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் நண்பரே.
    அருமை.

    ReplyDelete
  5. தகுதிக்கேற்ற ஊதியம்.

    ReplyDelete
  6. சூப்பர்வைசர் வீடு சுரேஸ்குமார்ன்னு போடலை எதுக்கு இந்த ஓரவஞ்சனை.....சார்


    இன்று என் வலையில் படிக்க

    2011ல் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்

    ReplyDelete
  7. siruvarukku mattumalla Sako. Periyavarkalukkum etra kathaithaan. Arumai.
    TM 9.

    ReplyDelete
  8. காசுக்கேத்த தோசைன்னு சொல்றீங்களா சகோ

    ReplyDelete
  9. நல்ல கதை..

    ஆனால், சிந்திக்க வேன்டிய செய்தி!!

    "இதை 1 மாதத்திற்குள் செய்ய வேண்டும்" என்று கடுமையான நிபந்தனை போட்டு தன் கீழ் பணிபுரிபவர்களை இம்சிப்பவர்களும் , வெளிவந்தவுடன் "என்னால் தான் இது வெளிவந்தது" என்று மார்தட்டிக் கொள்ளும் சிலரும் அதிகாரத்தில் இருக்கிறார்களே..

    ராப்பகலாக கண்விழித்து வேலை செய்பவனுக்கு சிறிதளவு தொகையும், அலுவல் நேரங்களில் குளிர்சாதன அறையில் இருந்து ஏவுபவருக்கு அதைப் போல் பன்மடங்கு தொகையும் கொடுப்பது தகுமா?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"