Ads 468x60px

12/08/2011

ஒரு 'கொலைவெறிக்கு' யூ-டியுப் தந்த அங்கீகாரம்


அண்மையில் மூணு என்ற படத்தில் இடம்பெற்ற "Y  திஸ் கொலைவெறி" பாடல் படத்தில் பிரமோஷனுக்காக வெளியிடப்பட்டது. இந்த படம் உச்சநடிகர் ரஜினிகாந்தின் மகள்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது கணவர் தனுஷ் நடிக்கும் படம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்துக்காக 'அனிருத்' என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். அவரின் இசையில் தனுஷ் அவர்கள் பாடிய பாட்டு  "Y  திஸ் கொலைவெறி"  இந்த பாடல் இமாலைய வெற்றி பெற்றுள்ளது.  இந்த பாட்டு தமிழ்,ஆங்கிலம் கலந்து அவரே எழுதி பாடியும் இருக்கிறார். இந்த பாடலில் "கொலைவெறி" என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் தமிழ்.

இந்த பாடல் பற்றி பிரபல இதழ் "டைம்" ல் கூட போடப்பட்டு இருந்தது. இந்த பாடல் வெளியிட்ட முதல் வாரத்தில் கிட்டதட்ட பத்து லட்சம் பேர் கேட்டும்,பார்த்தும் இருக்கிறார்கள். இணைய தளங்களில் சுமார் ஒரு கோடி பேர் பார்த்திருப்பதாக யூ-டியுப் நிறுவனம் 'கோல்ட்' விருது வழங்கி இருக்கிறது.


யூ-டியுபில் அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களுக்கு இந்த விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது அந்த நிறுவனம்.

தமிழ் பட வரலாற்றில் படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பாடல் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். ஆனால் இந்த பாடல் பற்றி அதிக விமர்சனங்கள் இருந்தாலும் பாட்டு மட்டும் செம ஹிட்.

மீண்டும் ஒருமுறை உங்களுக்காக..



15 comments:

  1. இன்றைய மேற்கு இந்திய அணிகளுக்கேதிராக இருநூறு ரன்(219) அடித்த வீரேந்தர் சேவாக் - க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சார் உங்களுக்கும் கொலைவெறி வந்திட்டுதா?

    ReplyDelete
  3. ரொம்ப கொலைவெறியா இருக்குங்க சார்

    ReplyDelete
  4. பாட்டு கேட்டேன் நண்பரே ,அந்த யூ டியுப் லிஸ்ட்டில் நானும் ஒருவன் தான்

    ReplyDelete
  5. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. கொலைவெறி தமிழைத் தாண்டியும் கலக்குது.இன்றைய ரசிப்பின் உச்சத்தை என்ன சொல்ல கருன் !

    ReplyDelete
  7. Hi i am JBD From JBD

    Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


    Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

    ReplyDelete
  8. காலம் கலிகாலம் ஆகிபோச்சு
    என்னத்த சொல்ல...
    பாட்டை பாடகர் சோனு நிஹாமின் ஆறு வயது மகனும்
    பாடிக் காண்பிக்கிறார்...
    வீட்டில இருக்கிற பொடுசுக எல்லாம்
    ஒய் திஸ்.. ஒய் திஸ்... னு புலம்பிகிட்டே இருக்குதுக..

    காதை பொத்திக்கொள்ளும் அவலம்...

    ReplyDelete
  9. கருண்... உங்ககிட்ட சரக்கு காலியாயிடுச்சுன்னு அப்பட்டமா தெரியுது... இதெல்லாம் ஒரு பதிவா...???

    அடுத்து சேவாக் இருநூறு அடித்தார்ன்னு ஒரு பதிவு போடலாமே...

    ReplyDelete
  10. மாப்ள ஊர் உலகமே கொலவெறியோடதான் சுத்தறாங்க.

    ReplyDelete
  11. இந்த படம் உச்சநடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது கணவர் தனுஷ் நடிக்கும் படம் : IT SHOULD BE AISHWARIYA . குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள் .. இது தெரியாமல் செய்த பிழையா ? அல்லது ? DID IT PURPOSELY

    ReplyDelete
  12. @ரோசன்...
    இது தெரியாமல் செய்த பிழைதான்..
    இப்போது மாற்றிவிட்டேன்.

    அறிய தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ்;
    மச்சி, டைம்ஸ் தளத்தினைப் போல BBC WORLD ஆங்கில சேவையிலும் இப் பாடல் பற்றி அலசியிருக்கின்றார்கள் என்றால் சொல்லவா வேண்டும்?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"