Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/26/2011

சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா ?


துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது மரத்தில் மேலிருந்து தேள் ஒன்று விழுந்துவிட்டது. தத்தளித்தது. தண்ணீருக்குள் கையை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி.

அது தன்னை காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள், துடித்து, தண்ணீரில் விட்டார் துறவி. மீண்டும் கருணையோடு தூக்கினார். மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை.

கரையில் இருந்த ஒருவர் கேட்டார். 'சுவாமி' தேள்தான் கொட்டுகிறதே, திரும்ப, திரும்ப ஏன் காப்பாற்றுகிறீர்கள் விட்டுவிடவேண்டியதுதானே?

அதற்கு துறவி சொன்னார், "கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம்". அதனுடைய இயற்கையை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் நான் ஏன் விடவேண்டும்? - பகவான் ராமகிருஷ்ணர்.

இந்த கதைக்கும், தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நம்பவா போகிறீர்கள்.
  

21 comments:

  1. நிஜமாகவே இந்த கதைக்கும், தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை...

    ReplyDelete
  2. வணக்கம் மச்சி,
    என்ன மச்சி, நீங்களே சசிகலாவிற்கு ஐடியா கொடுப்பீங்க போல இருக்கே.

    ReplyDelete
  3. கொய்யாலே...நீதிக் கதைக்கு உனக்கு சசிகலாவா கிடைச்சா..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. Title ethaavathu onna paraparappa vachchu pathiva padikka vaikireenga.
    super kathai

    ReplyDelete
  5. கதைக்கு பொருத்தமான தலைப்பு தானா?

    மக்களே, பத்தவச்சிடியலே.....

    ReplyDelete
  6. மச்சி, இந்தக் கதை மூலமா நீங்க என்னா சொல்ல வாறீங்க?
    சசிகலா கொட்டினாலும், அவங்களை ஜெயா அணைச்சுப்பாங்களா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. இது ஏற்கனவே எனக்கு தெரிந்த கதைதான். ஆனால் இந்தச் சூழ்நிலைக்கு பாந்தமாய் பொருந்துகிறது.

    நாய் வாழை நிமிர்த்த முடியுமா சகோ.?

    தஓ 5.

    ReplyDelete
  8. பிழை திருத்தம் : வாலை என்பது வாழை என்று வந்து விட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. ஆஹா..இப்படி வேறயா!

    ReplyDelete
  10. கௌம்பிட்டாருய்யா... கௌம்பிட்டாரு...

    ReplyDelete
  11. ஓ.கே..ஓகே..


    அன்போடு அழைக்கிறேன்..

    அழுகை அழ ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  12. ஹா.ஹா.ஹா.ஹா நான் கூட தலைப்பை பார்த்துட்டு உண்மைதான் என்று நினைச்சு வந்தேன்...

    ஆனாலும் நல்லாவே யோசிக்கிறீங்க பாஸ்

    ReplyDelete
  13. புரிஞ்சா மாதிரி இருக்கு...

    ReplyDelete
  14. நம்பிட்டேன் சகோ

    ReplyDelete
  15. எல்லோரும் நம்புறாங்க... நான் மட்டும் என்னத்த சொல்ல....

    ReplyDelete
  16. நன்றி சகோ பகிர்வுக்கு .உங்களுக்கு என் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ...............

    ReplyDelete
  17. எனக்கு பிடித்த நல்ல நீதிக்கதை! த.ம.12
    தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அடங்கப்பா!நல்ல யோசிக்கறீங்க.

    ReplyDelete
  19. வாத்தின்னா சும்மாவா?

    இதோ ‘டைமிங்’கா ஒரு கதை விட்டோம்ல!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"