Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/20/2011

ஜே, சசியை விரட்டிய மர்மம். ஒரு பகீர் ரிப்போர்ட்.


அதிமுகவிலும் கட்சியிலும் சரி, நடக்கும் ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி குழப்பங்களை பல ஏற்படுத்தி வந்தபோதும் கூட பொறுமையாகவே இருந்த முதல்வர் ஜெயலலிதா சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு அவர்கள் சிந்திக்கத் தொடங்கியதும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் பொறுக்க முடியாமல் தான் சசிகலா அண்ட் 'கோ'வை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக தெரிகிறது.

சரி கொஞ்சம் ஜெயா, சசி உறவு(மக்கா என்ன உறவுன்னு கேட்கக்கூடாது) எப்படி ஆரம்பித்தது என்று பாப்போம். சென்ன ஆழ்வார்பேட்டையில் 'வினோத் விடியோ/ஆடியோ சர்வீஸ்' என்ற விடியோ கடையை நடத்தி வந்த சசிகலாவும், அப்போது தமிழக அரசில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த  நடராஜனும் 1984-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு முதன்முறையாக அறிமுகமானார்கள். 

அப்போது மாநிலங்களவை உறுப்பினராகவும், அ.தி.மு.க. கட்சியின்  கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா தமிழகம் முழுவதும் அப்போது சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார். அப்போதைய நிகழ்ச்சிகளை விடியோ படம் பிடிக்கும் பணி விடியோ கடை வைத்திருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது.

அந்த பணியில் நன்மதிப்பை பெற்ற சசிஇடம் தன்னுடைய வீடு மற்றும் அலுவலக பணியையும் சசிகலாவிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு இவர்கள் நட்புக் கூட்டணி கர்ணன், துரியோதனன் நட்பைப் போல வளர்ந்தது.

1991ஆம் ஆண்டு முதன்முறையாக முதல் அமைச்சரான ஜெயலலிதா, தன தோழி சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அவர் திருமணம் எப்படி நடைப்பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

1996 ல் ஒரு நாடகம் அரங்கேறியது. அப்போது நடந்த தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களுமே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் அப்போது சசிகலாவை தன வீட்டைவிட்டு துரத்தினார். அனால மீண்டும் ஒரு சில மாதங்களில் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

ஆனால் மறுபடியும் வேதாளம் ஏறியிருக்கிறது. சசிகலாவை மீண்டும் தன வீட்டை விட்டும், கட்சியைவிட்டும் துரத்தி இருக்கிறார் ஜே. என்ன காரணம்... சசிகலாவும் அவரது உறவினர்களும் சேர்ந்து கட்சியிலும், ஆட்சியிலும் பெருமளவில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் இவர்கள் உறவில் விரிசல் இல்லை. அதிமுகவில் இருந்து வெளியேரிய பலர்(எஸ்.வி சேகர் உட்பட) தோழி சசிகலாவின் தொல்லை தாங்காமல் வெளியேறி விட்டதாக தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சசிகலா, நடராஜன் உள்பட பதினான்கு பேர் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 comments:

  1. வெட்டு வெட்டியாட்சா

    ReplyDelete
  2. உள்குத்து இருக்கு.. என்னமோ நடக்குது மர்மமாக இருக்குது ஒண்ணுமே புரியல தமிழ் நாட்டிலே

    ReplyDelete
  3. மாப்ள வரலாறுன்னா History தானே!

    ReplyDelete
  4. இதுவும் ஒரு நாடகம்தானோ?! பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  5. சென்னைய விட்டே தொரத்திட்டாங்களாமே? நேர்மையான ரிப்போர்ட்'கு நன்றி.

    ReplyDelete
  6. போகப் போகப் புரியும்-இது
    போலியெனத் தெரியும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. மீண்டும் ஒரு நாடகமா? பொறுத்த்திருந்து பார்ப்போம் சகோ

    ReplyDelete
  8. //சரி கொஞ்சம் ஜெயா, சசி உறவு(மக்கா என்ன உறவுன்னு கேட்கக்கூடாது)//

    //அதன் பிறகு இவர்கள் நட்புக் கூட்டணி கர்ணன், துரியோதனன் நட்பைப் போல வளர்ந்தது.//

    - உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி சார்.

    - தமிழ்மணம் வாக்கு 6.

    ReplyDelete
  9. Where is the "Pakeer" report ?

    /Prabakar.

    ReplyDelete
  10. நாடகத்தை இத்தோடு முடிச்சிடுறாங்களா இல்லை தொடருமா..?

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    மாப்ள வரலாறுன்னா History தானே!//

    டேய் நாதாரி உனக்கு கோனார் தமிழ் உரை வாங்கி தரட்டுமா...?

    ReplyDelete
  12. போயஸ்கார்டன் ஒரு மர்மபூமிதான்...!!!

    ReplyDelete
  13. அரசியலில் நம்பிக்கை என்றும் இல்லை... சாக்கடைக்கு எதற்கு வாசனைத்திரவியம்...

    இன்று என் பதிவு...
    உண்மையான போதிதர்மன் யார்?...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"