Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/19/2011

அட... நீங்ககூட இப்படித்தானா?


வழக்கமாக
எழும் நேரத்திலேயே
இன்றும்
எழுந்து விட்டேன்...!


விழிக்கும் போதே கடவுளிடம்
பிராத்தனை செய்து கொண்டேன்
நேற்று நடந்த
நிகழ்வுகள்
மீண்டும் நிகழாதிருக்க...


இன்னும் கொஞ்சம்நேரம்
தூங்கி இருக்கலாம்
என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்...


நேற்றைய தினங்களின்
பிடிக்காமல் போன
முன் அனுபவங்களால்
மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்
இன்றாவது ஒழுங்காக இரு என்று...


இருந்தும்.,


தேவதை ஒருத்தியின்
உதாசீனப் பார்வையிலும்,


கசக்கி, பிழிந்து
வெளியேத் தள்ளி
பின்பு வழக்கம் போல
புறப்பட்ட பேருந்து பயணத்திலும் ..


டேய்.. வீட்ல,
சொல்லிட்டு வந்துட்டியா
என சபித்துவிட்டுப் போன
ஆட்டோக்காரனிடமும்...


அலுவலகம் சென்று
மறதியால் செய்த
பிழைக்காக
மேலாளரிடமும்...


வெளிப்பட்டுக் கொண்டே
இருந்தன...


அந்த பிரியமற்ற தினத்தின்
கோரமான நிகழ்வுகள்...


இன்று படுப்பதற்கு முன்
மறுபடியும்,
வேண்டிக்கொண்டேன்..
இன்று போல நாளையும்
இருக்கக் கூடாதென்று....!

24 comments:

  1. வணக்கம் மச்சி,
    சௌக்கியமா?
    நேற்று நடந்த வேண்டத்தகா நிகழ்வுகள் இன்றும் இடம் பெறக் கூடாது என அங்கலாய்க்கும் மனதின் உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லியிருக்கிறது.

    ReplyDelete
  2. இன்றைய பொழுது இனிதாக அமையட்டும் மச்சி!

    ReplyDelete
  3. எல்லோரும் ஒரே மாதிரி தான் நினைக்கிறோம் ஆனா நடக்குறது நடந்துக்கிட்டு தான் இருக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் !!..

    ReplyDelete
  4. ஒரு நாள் தாமத பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இது தான் வாழ்க்கை

    ReplyDelete
  6. அன்றாட மனிதனின் பிரச்சனைகள்...

    விடமும் தொடரும் போராட்டமும்...

    அழகிய கவிதையில்....

    நாளைக்கு இது மாதிரி வேணாங்க...

    ReplyDelete
  7. என்ன பண்றது தினமும் இது போல வேண்டிக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  8. இன்று படுப்பதற்கு முன்
    மறுபடியும்,
    வேண்டிக்கொண்டேன்..
    இன்று போல நாளையும்
    இருக்கக் கூடாதென்று....!
    >>>
    எல்லாருமே இப்படித்தானா சகோ

    ReplyDelete
  9. மிக இயல்பான வார்த்தைகள். அனைவருக்கும் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தி மனதுக்கு நெருக்கமான கவிதை. நன்று.

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு நண்பா..

    ReplyDelete
  11. மாப்ள அதேஅதே ஹாஹா! ஜுப்பரு!

    ReplyDelete
  12. இதுதான் வாழ்க்கை!
    த.ம.8

    ReplyDelete
  13. மேலும், கீழும் உள்ள வாழ்வில் மேலே போக வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. யதார்த்தத்தை சொல்லும் இயல்பான வார்த்தைகள் பாஸ் அருமை

    ReplyDelete
  15. nallathe irukku? thiam thinam oru sothanai ! veduthal!! yethirpaarppu!!!

    ReplyDelete
  16. சரிங்க வாத்தி நானும் இப்படியே சொல்லிக்கிறேன் ஹி ஹி...

    ReplyDelete
  17. எவ்வளவு கும்பிட்டாலும் நமக்கு ஆப்ப ஆண்டவன் கரெக்டா வச்சிருக்காரு..

    ReplyDelete
  18. அதெப்படி.கும்பிட்டாலும் விட்டுருவோம்மா??

    ReplyDelete
  19. யதார்த்தமான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  21. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"