Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/26/2011

மூட்டை தூக்கினாரா பெரியார்?(மகான்களின் வாழ்க்கையில்)


திருச்சியில் ரயிலில் வந்து அமர்கிறார் பெரியார். பக்கத்தில் ஒரு துணி மூட்டை. அப்போது பெரியார் ஈ.வெ.ரா.  தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர். அப்போது அதே ரயில் பெட்டியில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரும் வந்து பெரியார் பக்கத்தில் அமர்கிறார். பெரியாரைத் தெரிந்துகொண்டு நலம் விசாரிக்கிறார். "எங்கே போயிட்டு வர்றீங்க?" என்று கேட்டார் உ.வே.ச. "கதர்த் துணியை தெருத் தெருவாகப் போய் வித்திட்டு வறேன்" என்றார் பெரியார்.

அவ்வளவுதான் பெரியார் ஏழ்மை அடைந்துவிட்டதாக நினைத்துவிட்டார் உ.வே.ச..

திருச்சி தொடங்கி ஈரோடு போகும்வரை செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை,  ஆகிய கருத்துக்களை இலக்கியங்கள் எவ்வாறு எடுத்துரைக்கிறது என்று ஒரு சொற்ப பொழிவே நடத்தி விட்டார். கடைசியில் பெரியாரின் தந்தையாரிடம் பணம் பெற்றுதான் புத்தகங்கள் பதிப்பித்து இருப்பதாகவும், அப்படிப்பட்ட வள்ளல் குடுமபம் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவதாகவும் கூறி கவலைப் படாமல் இருக்கும்படி ஆறுதலும் கூறினார்.

அமைதியாக கேட்டுக்கொண்டு சிரித்தபடி வந்த பெரியார், ஈரோடு வந்ததும் தான் காங்கிரசின் கதர்ப் பிரச்சாரத்திற்காக சென்று வருவதைக் கூறி உ.வே.சா.வை ஆறுதல் படுத்தினார்.

இச்சம்பவத்தை சொல்லி, தமிழ்ப் புலவர்கள் உலகம் தெரியாத கிணற்றுத் தவளைகலாக இருக்கிறார்களே. நாட்டில் நடக்கும் அரசியல் இயக்கங்கள் போராட்டங்கள் போன்றவற்றைக் கூட அவர்கள் அறிந்து கொள்வதில்லை என்றார் பெரியார். 

19 comments:

  1. .இதுக்குதான் அவசரப்படமால் எல்லாத்தையும் விவரமாக கேட்டுட்டு பதில் சொல்லணும்

    ReplyDelete
  2. பகுத்தறிவு பகலவன்....

    அவரின் அனுபவங்கள் வாழக்கையை நெறிப்படுத்துபவை...

    ReplyDelete
  3. பேச விட்டுட்டு அப்புறமா போட்டு தாக்குவது இப்படிதானா - நன்றி பெரியாரே.

    ReplyDelete
  4. இது தான் பெரியார் ஸ்டைலோ!

    ReplyDelete
  5. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அன்றைய கவிஞர்கள் யாவருமே உலகியலுக்கு சற்றுத் தள்ளியிருந்தவர்கள்தான். தமிழ்த் தாத்தாவும் விதிவிலக்கா என்ன... நல்ல சம்பவம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஓ என்னை போல அவசரகுடுக்கைகள் அப்பவே இருந்திருக்காங்க போல

    ReplyDelete
  8. இத்தனை விஷயம் இருக்கா! அறிந்து கொண்டேன். நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. இத்தனை விஷயம் இருக்கா! அறிந்து கொண்டேன். நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. புதிய செய்தி, பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. நல்லதொரு நினைவு கூறல்..


    அன்போடு அழைக்கிறேன்..

    அழுகை அழ ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  12. நல்லதொரு நினைவு கூறல்..


    அன்போடு அழைக்கிறேன்..

    அழுகை அழ ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  13. Inrum Pulavargal (Kavignargal) Silar appadithan irukkirargal. Arumai.

    TM 8.

    ReplyDelete
  14. அன்றும் சரி இன்றும் சரி...
    கலை, மொழி, அறிவியலில் மிகவும் ஈடுபாடாய் இருப்பவர்கள் சமூகத்தை விட்டு சற்று தள்ளியே இருக்கிறனர்..

    நன்றி!

    ReplyDelete
  15. தெரிந்திராத விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது நனறி

    ReplyDelete
  16. தவளைகலாக -- something wrong ?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"