Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/18/2011

மதி மயக்கும் மார்கழி மாதம்


மார்கழி மாத மயக்கம்


சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுனுள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.

மார்கழியின் சிறப்பு


மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. 

திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணுதிருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.. இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப்  பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல்.

முதற்பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
To Download Thiruppavai Click hear :(E- Book Format)


To Hear ....

1.

2.

3.

4.

5.

6.

7.


8. Extra .... ஆண்டாள் நம் கோதை...




மார்கழி மாதம் பற்றிய தப்பான அபிப்ராயம்



பீடை என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. நமது உடலை நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம். 
தட்சணாயணம் அந்த மாதத்துடன் முடிகிறது. அதாவது சூரியனுடைய தென் பகுதி இயக்கம் அந்த மாதத்துடன் முடிகிறது. அந்த மாதத்தில் உடலுறவு என்றெல்லாம் இல்லாமல், அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதா‌ல் , நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் அந்த மாதத்தை அப்படி ஒதுக்கி வைத்தார்கள். 



லெளகீகங்களுக்காக எல்லாம் இல்லாமல், ஆன்மிக நிகழ்வுகளுக்காக என்று ஒதுக்கி வைத்தார்கள். தட்சணாயண மாதத்தில் அது முடியக்கூடிய மாதம். சூரியனுடைய தெற்கு இயக்கம் முடியக்கூடியது. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது. 

அதனா‌ல் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது. 


மார்கழி என்றாலே.....

  • மார்கழியின் குளிர்
  • கோலங்கள்
  • கோலம் போடும் பெண்கள்
  • பனி விழும் இரவு
  • வைகுண்ட ஏகாதசி
  • புத்தக சந்தை   
  • புத்தாண்டு
  • தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்
  • கிருஸ்மஸ்
  • போகி இறுதியாக மார்கழியை முடித்து வைக்கும் பண்டிகை..  
மீள்பதிவு.

12 comments:

  1. மார்கழியின் சிறப்பை பகிர்வாக தந்தமைக்கு நன்றி கருண்

    ReplyDelete
  2. படங்களும் மார்கழி மாதத்தின் பகிர்வும் நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கோலங்கள் சூப்பர்ம்மா

    ReplyDelete
  4. மார்கழி மாதம் பற்றிய தகவல்கள் எனக்கு புதியது பகிர்வுக்கு நன்றி வாத்தி...!!!

    ReplyDelete
  5. சூப்பர் அண்ணே...அந்த மார்கழி என்றாலே ல காதல் கவிதைகள் ன்னு சேத்துடுங்க..ஹி ஹி ஹி ...

    ..தங்களின் வருகையை எதிர்நோக்கி என் வலையில்....மயில் அகவும் நேரம் 03:00...

    ReplyDelete
  6. மார்கழிப் பெருமை கூறும் இடுகை. நல்ல தகவல்கள் நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. மிகவும் விரிவாக, எதையும் விட்டுவிடாமல் மார்கழியைப் பற்றி நன்கு சொல்லியிருக்கிறீர்கள். மாதங்களில் அவள் மார்கழி என்று கவிஞர் பாடிய மாதமல்லவா... அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் + நன்றி!

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  9. மார்கழிக்கேற்ற மகத்தான பதிவு.
    நன்றி மச்சி!

    ReplyDelete
  10. இது ஒரு சிறப்பான முயற்சி தான் தோழரே, ஆனால் தகவல்கள் முழுமையாக இருந்தால் அனைவருக்கும் நல்லதாக இருக்கும்...

    ReplyDelete
  11. கட்டுரையும் புகைப்படும் அருமை...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"