Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/17/2011

அட, உங்களுக்கு காதல் பிடிக்குமா?




 1.

ரு
இலக்கணம் தெரிந்து
நான்,
கவிதை எழுதவில்லை
எனினும் எழுதுகிறேன்
நம்புவது,
தமிழை அல்ல
உன்   அழகை...!

**********************************************************************************
 2.

பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!

********************************************************************************** 
 3.


ற்செயலாய்
வாசல் வந்து
நீ...
நின்றபோது
உன் அம்மா
“உள்ளேப் போ”
என்று சொன்னது
என் இதயத்திற்குள்
போகத்தானா?

********************************************************************************** 
 4.


ன்னுடன்
பேசிவிட்டு வந்த
உரையாடலை,
கலைக்க மனமில்லாமல்
மற்றவர்கள் மத்தியில்
மரமாய்...!

********************************************************************************** 
 5.


ப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!

********************************************************************************** 


Repost

22 comments:

  1. கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.

    அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது.

    ReplyDelete
  2. கவிதை அழகுக்கு அழகு

    ReplyDelete
  3. ///////மனசாட்சி said...

    கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.

    அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது./
    ///////


    இதுதான் சரி...
    இப்படி அடிதடி செய்வது பிரச்சனையை வேறு பாதைக்கு கொண்டு சென்று விடும்

    ReplyDelete
  4. அருமை.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. kavithai alakiya kavithai! naan nesitha kavithai!

    ReplyDelete
  6. எப்படி
    பாதுகாப்பேன்?
    நீ...
    நடந்துபோன
    “கால்தடத்தை”...!//

    அதுதான் சொல்றது பள்ளிக்கு போயிட்டு நேரே வீட்டுக்கு போகனும்னு, இப்பிடி எவ பின்னாடியோ சுத்தி கால்தடத்தை பாதுகாக்க வேண்டாம்னு ஹி ஹி...

    ReplyDelete
  7. காதல் கவிதைகள் எல்லாமே அருமை கருண். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. காதல் பிடிக்காது என்று யாரும் சொல்லட்டும் பார்க்கலாம் !

    ReplyDelete
  9. காதலைக் காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது கருன். உள்ளே போ என்று அம்மா சொன்னது என் இதயத்தின் உள்ளே போகத்தானா என்று கேள்வி எழுதிய கவிதை இருக்கும் பெஸ்ட் கவிதைகளில் தி பெஸ்ட்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. உதிரிப் பூக்களோ
    ஒவ் வொன்றும்-தேன்
    மதுவின் சுவைகளோ-மனம்
    மயக்கும் இவைகளே!

    சங்கப் பதிவின் கூட்டத்திற்குத்
    தாங்களும் மற்ற நண்பர்களும் உறுதி செய்து என் வலையில் மறு மொழி
    யிட வேண்டி யுள்ளேன் கவனிக்க!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கவிதைகள் அழகு!

    ReplyDelete
  12. கவிஞர் கலக்கிட்டார்........ அனைத்துமே நல்லா இருந்துச்சு....!

    ReplyDelete
  13. குறுங்கவிதை அருமை....

    ReplyDelete
  14. அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. //நம்புவது,
    தமிழை அல்ல
    உன் அழகை...!//

    கொன்னுட்டீக...:)

    ReplyDelete
  16. பெண்ணே...
    கொஞ்சம் வெளியே வா,
    “ நிலாவைக் காணாமல் ”
    என்
    எதிர்வீட்டுக் குழந்தை
    சாப்பிட மறுக்கிறது...!

    super,,

    ReplyDelete
  17. கருண்,

    காதலைப் பிடிக்காதவர்கள் இங்கே யாருண்டு.

    கவிதைகள் மிகமிக அருமை.

    (அந்தக் கடைசி படம் எதையோ ’சுட்டி’ நிற்கிறது. புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி.)

    ReplyDelete
  18. மதுமதி அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"