Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/14/2011

தலையணை ரகசியங்கள்...





ன்னிடமிருந்து
எதையும்
நான் வாங்கியதில்லை,....

என்னிடமிருந்தும்
எதையும் கொடுத்ததில்லை....

நான் பரிமாற்ற நினைத்த
கடிதங்கள்
தேங்கி கிடக்கிறது
இன்னும் இன்பாக்சில் ...

ஒவ்வொரு நாளும்
விழிக்கும்போதும்
தலையணையின் 
கீழ் கிடக்கிறது இன்னும் 
சொல்லப்படாத
என் கனவின் 
மிச்சங்கள்...

கல்லூரி நட்புகளில்
கடைசிநாள்
கை குலுக்குதல்களிலும்,
ஆட்டோகிராப் நோட்டின்
கடைசி வரிகளிலும்,
தொக்கி நிற்கிறது
நமக்கான
 அன்யோன்யங்கள்...

பாவம் நம் நட்பு
அப்படியேதான் 
இருக்கிறது
இலைகளை உதிர்த்தும்
கிளைகளால் சுவாசிக்கும்
மரங்களைப் போல....

17 comments:

  1. பாவம் நம் நட்பு
    அப்படியேதான்
    இருக்கிறது
    இலைகளை உதிர்த்தும்
    கிளைகளால் சுவாசிக்கும்
    மரங்களைப் போல....

    அருமை..

    ReplyDelete
  2. ஓ! தலையணை ரகசியங்கள் இன்று பரகசியமானதோ! தொடரட்டும் வரிகள். சுவைத்தேன். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  3. மாப்ள நல்லா இருக்குய்யா....!

    ReplyDelete
  4. //பாவம் நம் நட்பு
    அப்படியேதான்
    இருக்கிறது
    இலைகளை உதிர்த்தும்
    கிளைகளால் சுவாசிக்கும்
    மரங்களைப் போல....//

    கல்லூரி கால காதலின் வெளிப்பாடு அருமை..

    ReplyDelete
  5. ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

    ReplyDelete
  6. ஒவ்வொரு நாளும் | விழிக்கும்போதும் | தலையணையின் | கீழ் கிடக்கிறது இன்னும் | சொல்லப்படாத| என் கனவின் | மிச்சங்கள்...
    -அருமையான வரிகள். நல்லதொரு படைப்பு. மிக ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ////கல்லூரி நட்புகளில்
    கடைசிநாள்
    கை குலுக்குதல்களிலும்,
    ஆட்டோகிராப் நோட்டின்
    கடைசி வரிகளிலும்,
    தொக்கி நிற்கிறது
    நமக்கான
    அன்யோன்யங்கள்...////

    அருமையான கவிவரிகள்

    ReplyDelete
  8. கவிதை கொல்லுது மனதை

    ReplyDelete
  9. அழகான கல்லூரிக்காதல்

    ReplyDelete
  10. அருமையான ரசிக்க வைக்கும் வரிகள் வாத்தி...!

    ReplyDelete
  11. ரசிச்சு எழுதியிருக்கீங்க போல,

    ஞாபகம் வருதே.,ஞாபகம் வருதே.,

    ReplyDelete
  12. NICE.. THANKS FOR REFRESH THE DAYS..

    ReplyDelete
  13. அருமையான கவிதை சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"