Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/24/2011

இருந்தா இப்படி இருக்கணும்!? இல்லையினா...(மகான்களின் வாழ்க்கையில்)


ஒரு சமயம் போர் முனையில் நெப்போலியனின் படைகள் எதிரிகளால் தீடீர் தாக்குதல் நடத்தப் பெற்று சங்கடமான ஒரு நிலையில் இருந்தது.

அப்போது இரவு நேரம் கூடாரத்தில் நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்தார். உறங்கும் நேரத்தில் நெப்போலியனை எழுப்பித் தகவல் கூறி அவர் ஆலோசனையைப் பெறுவது எப்படி என்று நெப்போலியனின் படைத் தளபதி சங்கடமடைந்தார்.

என்றாலும் வேறு வழி இல்லாததால் படைத் தளபதி நெப்போலியனின் கூடாரத்துக்குள் பிரவேசித்தார்.

நெப்போலியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நெப்போலியனை எழுப்பவா, வேண்டாமா என்று படைத் தளபதி யோசித்தபோது மேஜை மீது ஏதோ எழுதப்பட்ட காகிதம் ஒன்று விரித்து வைக்கப் பட்டு இருந்தது தளபதியின் கண்ணில் பட்டது.

அந்தக் கடிதத்தை தளபதி எதுத்துப் படித்தார். எதிரிப் படைகள் அன்று இரவு திடீர் தாக்குதல் நடத்தக் கூடும் என்று யூகித்து, எதிரிப் படைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கான வழி வகைகளை அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஆலோசனைப்படி தளபதி எதிர்தாக்குதல் நடத்தி எதிரிப் படைகளைப் பின்வாங்கி ஓடச்செய்தார்.

டிஸ்கி: நான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதால் இன்னும் இரண்டு நாளுக்கு நண்பர்களின் பக்கம் வரமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

21 comments:

  1. >>அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

    ennadhu? என்னது? கருத்து சொல்லனுமா? ஹி ஹி

    ReplyDelete
  2. பயணம் நல்ல படி அமையா வாழ்த்துகள்
    அன்புடன் :
    ராஜா

    அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

    ReplyDelete
  3. பதிவுலகம் இனி மெல்ல வாழும் ஹி ஹி ஹி ஹி...சந்தோசமா போயிட்டு வாங்க வாத்தி....

    ReplyDelete
  4. napolean குறித்து எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன்.. இது புதுசு.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. சபரிமலை யாத்திரை வெற்றிகரமாக அமைய ஆசிகள்

    ReplyDelete
  6. நெப்போலியன் பற்றி நல்லதொரு, தெரியாத கதையைத் தந்தீர்கள். அருமை. சாஸ்தாவின் தரிசனம் நிறைவாகக் கிடைக்கவும், இனிமையான பயணத்துக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சாமியே சரணம் அய்யப்பா.

    ReplyDelete
  8. பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  9. இது நான் ஏற்கனவே அறிந்த கதைதான் மீண்டும் படிக்க படிக்க சுவாரஸ்யம் நெப்போலியன் உண்மையில் ஒரு சிறந்த தீர்கதரிசன போர்வீரர்

    உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எப்போதும் குறிக்கோளை நோக்கியே பயணிக்கும் ஒரு மனிதன் இப்படித்தான் இருப்பான். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. வணக்கம் நண்பரே..

    அறிந்திராத கதை..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. அரிகரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பனின் அருள் முழுவதுமாக கிடைக்கட்டும்

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மாப்ள திருச்சில இருந்து கிளம்பிட்டியா....சாரி சாமி...

    ReplyDelete
  14. சாமியே சரணம் ஐயப்பா....போயிட்டு வந்து பதிவு போடப்பா!

    ReplyDelete
  15. திட்டமிடலும் முன்னெச்சரிக்கையும் முக்கியம் புரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  16. வணக்கம் நண்பரே..

    பசுமையான பயங்கரடேட்டா தொடர்ப்திவு தொடர தங்களை அன்புடன் அழைக்கிறேன்

    இன்று என் வலையில்


    எனக்குள் நான் (பசுமையான பயோடேட்டடா)


    வாருங்கள் நண்பரே..

    ReplyDelete
  17. ஆக்க பூர்வ பகிர்வு.

    ReplyDelete
  18. அப்படியே அய்யப்பனிடம் எங்களுக்கும் சேர்த்து வேண்டிட்டு வாங்க.

    ReplyDelete
  19. தங்கள் பயணம் நன்கு அமைய
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"