Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/29/2011

குப்பைக் கூடை அரசியல்வாதிகள்...!



கூட்டிப் பெருக்கி
முடியவில்லை
ஒரு குப்பைக் கூடை
வாங்கிவா என்றாள்...!

பேன்ஸி ஸ்டோரிலும் சரி
நடை பாதை 
தள்ளு வண்டியிலும் சரி
அழகு அழகாய்
விதம் விதமாய்
எத்தனைக் கூடைகள் ...!

வாங்கி வந்ததும்
வீட்டில்
எங்கு வைப்பது
என்றேன்...!

சுவற்றின் மூலையில்
அல்லது
மேசைக்கு அடியில்
என்றாள்...!

கூடை அழகாய்
இருக்கிறது 
என்பதற்காக
மேசைமீதா வைக்கிறோம்?

னக்கு ஞாபகம் வருகிறது
எத்தனைக் கூடைகள்
மேசையின்மீது,
நாட்டில்தான் ...!
Repost.

21 comments:

  1. இதுக்கு மேல் விளக்கம் முடியுமான்னு தோணலை - அரசியல்வியாதிக்கு ஒப்பிடு

    ReplyDelete
  2. மனசாட்சியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய விஷயம்...

    கவிதை கண்த்தில் அறைகிறது..

    ReplyDelete
  3. மாப்ள கொன்னுட்ட போ!

    ReplyDelete
  4. இந்த கவிதை மூலம் நாங்க தெரிஞ்சுக்குறது என்னவென்றால், நேத்து வீட்டுக்கு போகும்போது குப்பை கூடை வாங்கிட்டு போனீங்கன்னு. சரிதானே சகோ!

    ReplyDelete
  5. இந்த கவிதை மூலம் நாங்க தெரிஞ்சுக்குறது என்னவென்றால், நேத்து வீட்டுக்கு போகும்போது குப்பை கூடை வாங்கிட்டு போனீங்கன்னு. சரிதானே சகோ!

    ReplyDelete
  6. சாரி மேஜை மீது இருப்பது கூடைகள் அல்ல, குப்பைகள்

    ReplyDelete
  7. குப்பைகளை ஓட்டு என்ற துடைப்பத்தால் விரட்டி அடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை....

    ReplyDelete
  8. repost ஆனாலும் என்றுமே மாறாத உன்மையைச் சொல்லும்
    போஸ்ட்.

    ReplyDelete
  9. மச்சி.... இன்றைய அரசியல்வாதிகளை நறுக் சாடல். சூப்பர்யா


    நம்ம தளத்தில்:
    அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

    ReplyDelete
  10. //கூடை அழகாய்
    இருக்கிறது
    என்பதற்காக
    மேசைமீதா வைக்கிறோம்?

    செருப்படி. ஆனால் இந்த கேள்வி எல்லாம் அவர்களுக்கு உறைக்கவா போகிறது?

    ReplyDelete
  11. /எனக்கு ஞாபகம் வருகிறது
    எத்தனைக் கூடைகள்
    மேசையின்மீது,
    நாட்டில்தான் ...!
    //


    நெத்தியடி
    அன்புடன் :
    ராஜா
    .. இன்று

    பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

    ReplyDelete
  12. முகத்தில் சப்புன்னு அறைஞ்ச மாதிரி இருக்கு...!!!

    ReplyDelete
  13. வணக்கம் மச்சி,
    ரொம்பவும் ரசித்து சிரித்தேன்.
    நீங்க கடைசி வரியில கலக்கியிருக்கிறீங்க
    சூப்பர் கவிதை! அப்படியே சட்ட சபைப் பக்கமா யாராச்சும் போனால் இந்த கவிதை எடுத்து துண்டு பிரசுரமாக ஒட்டி விடுங்க!

    சூப்பரா இருக்கும்!

    ReplyDelete
  14. அருமையான சாடல் நண்பரே

    ReplyDelete
  15. கூடை அழகாய்
    இருக்கிறது
    என்பதற்காக
    மேசைமீதா வைக்கிறோம்?

    எனக்கு ஞாபகம் வருகிறது
    எத்தனைக் கூடைகள்
    மேசையின்மீது,
    நாட்டில்தான் ...!/

    செருப்பு கூட விலை மிகுந்து அழகான தோற்றத்தில் இருந்தாலும் அதற்கான இடத்தில்தானே வைக்கிறோம்..

    ReplyDelete
  16. எனக்கு ஞாபகம் வருகிறது
    எத்தனைக் கூடைகள்
    மேசையின்மீது,
    நாட்டில்தான் ...!

    முடிவு சிறப்பு தோழரே..
    வாழ்த்துகள்

    ReplyDelete
  17. 2000 ரூபாய் குடுத்து செருப்பு வாங்குனாலும் காலில் தான் போடணும்.... நம்ம விதி தலைல வச்சுருகிறோம்..........

    செம கவிதை......... நச்சுனு இருக்கு.........................

    ReplyDelete
  18. //எனக்கு ஞாபகம் வருகிறது
    எத்தனைக் கூடைகள்
    மேசையின்மீது,
    நாட்டில்தான் ...!//

    கலக்கிட்டீங்க..

    இன்றைய அரசியலின் அப்பட்டமான நிலைமை கவிதையாய்..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"