Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/11/2011

முதல்வர் ஜெ ! இது நியாயமா?


கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து, இந்த வெற்றி தி.மு.க வின் ஊழல் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்று முதல்வர் ஜெ சொல்லி இருந்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த பின்னர் சில அதிரடி மாற்றங்கள் அவரிடம் தெரிந்தது.

ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக சமச்சீர் கல்வி பிரச்சனையில் முதல்வர் அவர்களின் பங்களிப்பு இருந்தது. அதுவும் ஒரு வழியாக முடிந்தது. பின்பு மூவரின் தூக்கு தண்டனைப் பிரச்சனை, கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனை ஆகியவற்றில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. ஆனால் அதுவும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வரும்வரைதான்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு முதல்வர் அவர்களின் அணுகுமுறையில் பல மாற்றங்கள். விவசாய தொழிலாளர் நலச் சட்டத்தை மாற்றியது, மூவரின் தூக்கு தண்டனைப் பிரச்சனையில் ஒதுங்கியது, கூடங்குளம் பிரச்சனையில் ஆர்வம் காட்டாதது என தொடர்ந்தது. கடைசியில் இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அண்ணா நூலகத்தை மருத்துவ மனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு..

ஆனால் அதையும் தாண்டி இப்போது மக்கள் நல பணியாளர்களை வேலைநீக்கம் செய்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுவும் சுமார் 13,000 பணியாளர்கள்.

1990 இல் கலைஞர் கருணாநிதி இருபத்தி ஐந்தாயிரம் பணியாளர்களை நியமித்தார். 1991ல் ஜெ அவர்களை நீக்கினார். மீண்டும் 1997 ல் கலைஞர் நியமித்தார்.  2001ல் மீண்டும் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். 2006ல் கலைஞர் மீண்டும் நியமித்தார். தற்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா அவர்களை பழிவாங்கியுள்ளார். இதுபோல மாற்றி,மாற்றி அவர்கள் பந்தாடப்பட்டனர்.

1990 ல் இருநூறு ரூபாய் தொகுப்பு ஊதியதிற்கு நியமிக்கப்பட்ட அவர்கள், இப்போது ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். பெரும்பாலும் அனைவரும் நாற்பது வயதை கடந்தவர்கள், அவர்கள் இனிமேலும் இன்னொரு வேலை செய்து பிழைப்பது கடினமே என்ற மனிதாபிமானம் கூட இல்லாமல் நீக்கி இருக்கிறது அரசு.

என்னைப் பொருத்தவரை மக்கள் நலப் பணியாளர்கள் தேவையில்லாத ஊழியர்கள்தான், இருந்தாலும் அவர்களின் வயது, குறைவான ஊதியம் அவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் வாய்பளிப்பதே நம் முதல்வருக்கு அழகு.

டிஸ்கி : இன்று சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர் நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. படம் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டது.


13 comments:

  1. அந்தம்மா கேக்குமா தெரியல சொல்லறத சொல்லி வைக்கலாம் வேற என்ன செய்யுறது ஓட்டு போட்டோம்-ல

    ReplyDelete
  2. அவர்களை பணிமாற்றம் செய்து வேறு துறைக்கு மாற்றலாமே...

    ReplyDelete
  3. <>சரியான கருத்து..!!

    தகுதியின் அடிப்படையில் வேறொரு அரசு வேலைவாய்ப்புகளில் அமர்த்தலாம்..!!

    ReplyDelete
  4. டிஸ்கி : இன்று சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர் நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. படம் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டது.//

    சர்யாபோச்சு மறுபடியும் வாங்கி கட்டியாச்சா...???

    ReplyDelete
  5. மச்சி, முருங்கை மரம் நிறைய இருக்கு நம்ம ஊர்ல, அதனால வேதாளம் இன்னும் ஏறும், ஏறிட்டே இருக்கும்.



    நம்ம தளத்தில்:
    மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

    ReplyDelete
  6. வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறுச்சா... எங்க இறங்குச்சு, நீங்களாகவே இறங்குச்சு அப்படின்னு முடிவா?

    ReplyDelete
  7. அவங்க அரசியலும் அவங்களும் பாவம் மக்கள்

    ReplyDelete
  8. அல்லல் பட்டு ஆற்றாது அழுத
    கண்ணீ வீணாவதில்லை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"