Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/18/2011

போதையில் உளறினாரா விஜயகாந்த்?



தமிழக அரசு நேற்று அறிவித்த விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.


ஒரு பெண்ணாக இருந்துகொண்டு முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பதில் பால் விலையை உயர்த்தி அவர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறார் என்றார்.


பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கும் கடும் கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும், பேருந்து கட்டணத்தை உயர்த்தியது அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்றார்.


மின்வெட்டு காரணமாக தமிழகமே இருளில் மூழ்கி கிடக்கும் பொது மின்கட்டணத்தை உயர்த்த அரசு பரிந்துரைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்றார்.


எல்லாம் சரி விஜயகாந்த் அவர்களே!? கூட்டணி வைக்கும் பொது இதெல்லாம் தெரியவில்லையா? எதிர்க்கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு நீங்கள் சாதித்தது என்ன?


ஆளுங்கட்சியை எதிர்த்து ஒருமுறையாவது சட்டமன்றத்தில் கேள்வி கேட்டீர்களா? பஞ்சாயத்து தேர்தலில் அதிக சீட்டுக்காகத் தானே அமைதி காத்தீர்கள். இப்போதுதான் தெ(ரி)ளிந்ததா அம்மையாரைப் பற்றி?


முதலில் பொறுப்பான எதிர் கட்சி தலைவராக இருங்கள். பின்பு அறிக்கை விடுங்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களிடம் அதிகம் மக்கள் எதிர்பார்த்தார்கள், அவர்களை ஏமாற்றிவிட்டு இப்போது சினிமா வசனம் போல அறிக்கை விடுகிறீர்கள்.


அதுசரி, அண்ணன் போதையோடுதான் சட்டமன்றத்துக்கு வருவார் என அம்மையார் சொன்னபோது ஊத்திக்குடுத்தவர் என்று சொன்னவர்தானே நீங்கள்?

26 comments:

  1. இப்பவாவது தெளிஞ்சிருக்கே அப்படின்னு சந்தோஷப் படாம? நான் மத்த தலைவர்கள தேடிக் கிட்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. //முதலில் பொறுப்பான எதிர் கட்சி தலைவராக இருங்கள். பின்பு அறிக்கை விடுங்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களிடம் அதிகம் மக்கள் எதிர்பார்த்தார்கள், அவர்களை ஏமாற்றிவிட்டு இப்போது சினிமா வசனம் போல அறிக்கை விடுகிறீர்கள்.//

    சூடான அரசியல் கேள்வி..

    ReplyDelete
  3. நியாயமான ஆதங்கம் தான் நண்பரே

    ReplyDelete
  4. ////அதுசரி, அண்ணன் போதையோடுதான் சட்டமன்றத்துக்கு வருவார் என அம்மையார் சொன்னபோது ஊத்திக்குடுத்தவர் என்று சொன்னவர்தானே நீங்கள்?
    /////

    ஹா.ஹா.ஹா.ஹா.

    அருமை

    ReplyDelete
  5. மாப்ள அவரே தவறான சரக்க அடிச்சிட்டு எதோ மேம்போக்கா பேசிபுட்டோமேன்னு புலம்புறதா கேள்வி ஹிஹி!

    ReplyDelete
  6. இப்பவும் அவர் பேசக்கூடாதுன்னா அவர் என்னதான் பண்ணுவார்?

    ReplyDelete
  7. எல்லாரும் பார்த்துக்குங்க நானும் இருக்கேன்...சரி இப்பவாது பேச......ஹிம்

    ReplyDelete
  8. நல்லா இருக்கு கருண்....

    ReplyDelete
  9. எனக்கு எழுதி கொடுத்ததை மட்டும் தான் பேச தெரியும் ...
    நீங்க என்கிட்டே இதுக்கு மேல எதிர்பார்த்தா நான் என்ன பண்றது -------
    இப்படிக்கு
    சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ,,,,,{ஆனா யாருக்கு எதிர்கட்சி என்று மட்டும் கேட்க கூடாது )

    ReplyDelete
  10. எனக்கு எழுதி கொடுத்ததை மட்டும் தான் பேச தெரியும் ...
    நீங்க என்கிட்டே இதுக்கு மேல எதிர்பார்த்தா நான் என்ன பண்றது -------
    இப்படிக்கு
    சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ,,,,,{ஆனா யாருக்கு எதிர்கட்சி என்று மட்டும் கேட்க கூடாது )

    ReplyDelete
  11. கேட்ட கேள்வியும் சொல்லியுள்ள
    விளக்கப் பதிவும் அருமை!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. முதலில் மக்கள் இந்த கட்சி, விட்டா அந்த கட்சி.கொள்ளை அடித்தாலும் தவறில்லை
    புதுசா ஒருத்தரை கொள்ளை அடிகவிடுங்கபா......

    ReplyDelete
  13. முதலில் மக்கள் இந்த கட்சி, விட்டா அந்த கட்சி.இந்த நிலையில் இருந்து மாறவேண்டும்.
    எல்லோரு கொள்ளைதான் அடிகிறார்கள்.யாரும் நாட்டுக்கு நல்லது செய்ய போவது இல்லை.
    கொள்ளை அடித்தாலும் தவறில்லை புதுசா ஒருத்தரை கொள்ளையடிக்க விடுங்கையா.......

    ReplyDelete
  14. திருவாளர் பொதுஜனத்தின் நியாயமான ஆதங்கம் உங்கள் பதிவில் தெரிகின்றது

    ReplyDelete
  15. DMK MARUBADIYUM AATCHIKKU VARAKOODADHENRU EDHIRIKU EDHIRI NANBAN ENDRA ADIPADAYIL KOOTU SAENDHU MAKKALIN AADHARAVOADU VETRI PETRANAR. IPPOADHU MAKKALIN NAMBIKAYAI IRUVARUM POYYAAKUGINRANAR. PORUPUNARNDHU MANASSATCHIYUDAN SEYALPADAVAENDUM.

    ReplyDelete
  16. இப்பத்தான் திருவாய் மலர்ந்திருக்கிறார்..

    பொருத்திருந்து பார்ப்போம் என்ன செய்கிறார் என்று..

    ReplyDelete
  17. யாரு விஜயகாந்தா? அவர் தமிழ்நாட்ல தான் இருக்காரா?

    ReplyDelete
  18. கேப் டன்னு போதையில் உளறியதை பெருசா எடுத்துக்கிடாதிங்க சார்.

    ReplyDelete
  19. நல்லாக் கேட்டீங்க நண்பா..

    ReplyDelete
  20. விலை ஏற்றத்திலும் சில நன்மைகள் இருக்கத்தானே செய்கிறது நண்பா..

    http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_733.html

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"