Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/28/2011

இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.

கூடங்குளம் பற்றி மறுபடியும் ஏதாவது சொல்றாரோ?


  • அத்தியாவசிய தேவையான நல்ல அரிசியின் விலை கிலோ ரூ. 30 லிருந்து ரூ. 40 ரூபாய்.                                                                                                ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது ...!!
  • ரேசன் கடையில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்...!!
  • வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம்.        ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம் ...!!
  • ஒரு Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து      சேர்வதில்லை ...!!

இதுவும் ஒரு கேவலமான உண்மை 
  • ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை ...!!
  • அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன ...!!
  • குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது ...!!
  • மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...!!
  • கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை... அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
  • குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...!!!!

எனக்கு இந்த கேவலமான உண்மைகளை மெயில் அனுப்பி படிக்க (சிந்திக்க) வைத்த பிரகாஷ்க்கு நன்றிகள். 


இந்தப் பதிவுல அப்துல் கலாம் அவர்கள் போட்டோ ஏன் சேர்த்தேன்-ன்னு நான் சொல்லியா தெரியணும் உங்களுக்கு?

22 comments:

  1. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...!!!!
    //

    பிஞ்சுக்களின் உழைப்பையும் அவர்களின் உதிரத்தையும் சேர்த்து.

    ReplyDelete
  2. ஏற்கனவே இந்த பதிவை படித்து விட்டேன்... மீண்டும் பல பேருக்கு சென்று சேரும் வகையில் பகிர்ந்ததற்கு நன்றி ...

    ReplyDelete
  3. சிந்திக்க வேண்டிய பதிவு

    ReplyDelete
  4. எனக்கு இந்த கேவலமான உண்மைகளை மெயில் அனுப்பி படிக்க (சிந்திக்க) வைத்த பிரகாஷ்க்கு நன்றிகள். ////

    அடடா வடை போச்சே.... நாம பதிவா போட்டிருக்கலாமோ?


    நம்ம தளத்தில்:
    எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

    ReplyDelete
  5. முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்தியா...!

    ReplyDelete
  6. ture..
    http://mydreamonhome.blogspot.com/

    ReplyDelete
  7. சபரிமலைக்கு போயிட்டு வந்ததும் வராததுமாக ரொம்ப கொந்தளிச்ச மாதிரி இருக்கே வாத்தி, உண்மை சுடும்ய்யா அதான் நாட்டில் நடந்துட்டு இருக்கு...!!!

    ReplyDelete
  8. மிக கேவலமான அதேவேளை சிந்திக்க வேண்டிய விடயம் / பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  9. Arumaiyana pathivu. Vaalthukkal Sago. But kevalamana enra vaarthaiyai thavirthirukkalame. Nam Thainadu allava?
    TM 4.

    ReplyDelete
  10. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...!!!!

    மனதை நெகிழவைக்குறது பகிர்வு ......

    ReplyDelete
  11. யோவ்... இந்த மொக்கை மெயிலை எத்தனை பேர் யா பதிவா போடுவீங்க...

    ReplyDelete
  12. //மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...!!//

    உண்மை:(

    ReplyDelete
  13. மெயில் மேட்டரை, மெயின் மேட்டராக்கிட்டீங்க!

    ReplyDelete
  14. டைப் பண்றது மிச்சம்....

    ReplyDelete
  15. கேவலத்திலும் கேவலம்

    //இந்தப் பதிவுல அப்துல் கலாம் அவர்கள் போட்டோ ஏன் சேர்த்தேன்-ன்னு நான் சொல்லியா தெரியணும் உங்களுக்கு?//

    ஆமா ஆமா

    ReplyDelete
  16. வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே

    ReplyDelete
  17. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...!!---சீக்கிரமே நம்நாடு வல்லரசா ஆகிடும்கோ.இது கலாம் சொல்லிய தெரி்ஞ்சுகிடனும்

    ReplyDelete
  18. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தகவலுக்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"