Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/06/2011

வெற்றிகளுக்கான இரகசியம்...


இதன் இரகசியத்தை 
இன்னும் 
மனிதகுலம் 
தேடிக்கொண்டிருக்கிறது...


வாருங்கள் 
எனக்கு தெரிந்த
இரகசியத்தை 
சொல்கிறேன்....


இந்த இரகசியத்தின் 
மூத்தவன் பெயர் 
பணிவு...


ஐந்து வயதில்
ஆசிரியரிடம் பணிவு
முதலாம் வகுப்பிலிருந்து
முதல் மாணவன்...


படிப்பு முடித்தவுடன்
வேலை,
உயர் அதிகாரியிடம் 
பணிவு!
உதவியாளர்களிடமும்
பணிவு!
பரிசு 'பதவி உயர்வு'


மனைவியிடமும்,
பிள்ளைகளிடமும்,
பணிவு ..
அமைதியான 
வாழ்க்கைக்கான திறவுகோல்...


பணம் சேர்த்தாகிவிட்டது,
இவ்வளவு பெரிய
கோடீஸ்வரனுக்கு
என்னவொரு பணிவு
வியந்தது சமூகம்.... 


பணிவு இருந்தால் 
வாழ்க்கையில் 
அனைத்தும் வெற்றியே..


நாமும் பணிவுடன் 
இருப்போம் 
உறவுகளே....

18 comments:

  1. ஜெவின் கேள்வி...

    பணிவு என்றால் என்ன..?

    ReplyDelete
  2. இந்த பதிவுக்கு நான் பணிகிறேன்

    ReplyDelete
  3. பணிவுக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்!

    ஆனால்

    தலைப்புக்கு வேண்டா காட்டுகள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. பணிவு அவசியம் தான்...
    ஆனால் எது வெற்றி என்று வரும் பொழுது
    கொண்ட கொள்கையில் என்ன இன்னல்கள் நேர்ந்தாலும் அடி பிறழாமல் வாழ்ந்தால் வெற்றி என்பேன்...

    ReplyDelete
  5. பணிவிருந்தால்
    வாழ்வை துணிவுடன் எதிர்கொண்டு
    வெற்றிகொள்ளலாம்..

    ReplyDelete
  6. பணிவுடன் நாஞ்சில்மனோ ஹி ஹி...

    ReplyDelete
  7. பணிவுதான் வாழ்க்கையின் வெற்றி ரகசியம் சூப்பர்ப்...!!!

    ReplyDelete
  8. @சௌந்தர் நான் தலைப்பு மாத்திட்டேன்.,

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வது சரியானாலும் பணிவோடு இருந்துவிட்டால் ஒரேயடியாகக் குட்டுகிறார்களே கருன் !

    ReplyDelete
  10. குணிவில்லா பணிவு வேண்டும் நண்பா

    ReplyDelete
  11. இதன் இரகசியத்தை
    இன்னும்
    மனிதகுலம்
    தேடிக்கொண்டிருக்கிறது...


    ஆமா உன்மைதான்

    ReplyDelete
  12. பணிவு இருக்கலாம்.அன்புக்கு அடிபணியலாம். "ஐந்து வயதில்
    ஆசிரியரிடம் பணிவு" - இங்குதான் பணிவின் ஆரம்பப்பாடம்.நல்ல கவிதை.

    ReplyDelete
  13. பணிவோடு ஒரு கமென்ட்.

    ReplyDelete
  14. பணிவுடன்............ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  15. பணிவு இருக்க வேண்டும்தான் என்னை பொறுத்தவரை எல்லோரிடமும் அந்த பணிவு தேவையில்லை.

    ReplyDelete
  16. பணிவு நல்லதுதான், துணிவைப் பற்றியும் கூறுங்கள் புண்ணியமாகப் போகும்!

    ReplyDelete
  17. பணிவு அவசியம் தான்...தேவையான நேரத்தில் மட்டும்...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"