Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/01/2011

ஏமாந்த விஜயகாந்த் ! சுயபரிசொதனைக்கு தயாராக வேண்டும்..


சிந்தியுங்கள் மக்களே, கடவுளோடும், மக்களோடும் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் மக்களே என்று தமிழகம் முழுவதும் வீதி,வீதியாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கெஞ்சாத குறையாக வாக்கு வேட்டையாடியும் விஜயகாந்த்,  பிரேமலதா ஆகியோரின் கோரிக்கையை மக்கள் நிராகரித்து விட்டது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த மக்கள்தானே 29 எம்.எல்.ஏக்களை நமக்குக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது அதே மக்கள் நமக்கு ஏன் பட்டை நாமம் போட்டுள்ளனர் என்ற குழப்பத்தில் விஜயகாந்த் அண்ட் கோ உள்ளனர்.

ஆனால் மக்கள் கணக்கு எப்போதுமே வேறு மாதிரி தான். தேமுதிகவை ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் பிரச்சாரம் செய்தும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை ஆராய்வோம்.

1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக, அதாவது மக்கள் கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை. 

2.மக்களுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக சரியான நேரங்களில்  நடத்தத் தவறி விட்டது.

3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே விஜயகாந்த் செயல்பட்டது.

4. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கத் தவறி விட்டார்.

5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், மறுபடியும் அதிமுகவிதாமே கூட்டணி வைத்தது மக்களுக்கு பிடிக்கவில்லை.

6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதை சரியாக கணிக்காமல் தன்னுடைய கூட்டணிதான் இந்த வெற்றிக்கு காரணம் என நினைத்தது.

7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது.

8. நடக்கும் ஜெ தலைமையிலான ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியது.

9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது.

10. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தேமுதிக செயல்பட்டதால் தான் மக்கள் ஒதுக்கிதள்ளியுள்ளனர்.

தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும்  நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும். 

24 comments:

  1. சரியா சொன்னிங்க பிரதர் ...

    நன்றி

    ReplyDelete
  2. ஒரு புல்லு உள்ள வுட்டா சுய பரிசோதனை முடிஞ்சிரும்...அதை செஞ்சினுதானே இருக்கார்...

    நல்லா சொன்னீங்க....ஆனா அவிங்களுக்கு புரியனுமே...

    ReplyDelete
  3. மப்புக்கு மாப்பின் யோசனைகள் டாப்

    ReplyDelete
  4. உங்கள் கருத்து உண்மைதான் நண்பரே

    த.ம 3

    ReplyDelete
  5. பிரமாதம் - அருமையான யோசனைகளை சொல்லயுல்லிர்கள் - புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சர்தான்

    ReplyDelete
  6. கேப்டன் யோசிக்க வேண்டும்

    ReplyDelete
  7. களத்தில் இறங்கி வேலை பார்க்காமல் சும்மா மக்களே மக்களேன்னா எப்படி ஓட்டு போடுவாங்க. அறுபது வருஷ கட்சிகளை அசைக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன?
    சரியா சொன்னீங்க

    ReplyDelete
  8. 4 லிருந்து 7 வரை மிகவும் சரி...

    சரியான அலசல்....

    ReplyDelete
  9. விஜயகாந்த் பக்கா அரசியல்வாதியா மாறி ரொம்ப நாள் ஆச்சு சகோ. தமிழ்மணம் 5

    ReplyDelete
  10. தேர்தலே ஒரு காமடி
    அதில் இவர் ஒரு காமடி...

    ReplyDelete
  11. இதே நிலையில் விஜயகாந்த் சென்றுகொண்டிருந்தால் அது வைக்கோவுக்கு சாதகமாகும் சூழல் உள்ளது ...

    ReplyDelete
  12. //திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது.//

    சரியான கருத்து

    ReplyDelete
  13. அவரு அவ்வளவுதான்...

    எதிர்கட்சி தலைவருக்கான தகுதியை இழந்து விட்டார்..

    ReplyDelete
  14. நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால் பல வருடங்களாக மாறி மாறி மக்கள் மீது சவாரி செய்யும் திராவிடக் கட்சிகள் இரண்டும் தங்கள் ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் தாங்களே அதியக்ம் வெற்றி பெற்று இருக்கின்றன.
    விஜயகாந்துக்கு படு தோல்வி அது இது என்று மீடியாக்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க.வின் நிலை என்ன? பல வருடங்களாக இருக்கும் குடும்பக் கட்சி... மன்னிக்கவும் மாநிலக் கட்சி... மேயரை வெல்ல முடிந்ததா... இல்லை இனிமேல் தனித்துத்தான் நிற்போம் என்ற காங்கிரஸ் மற்றும் பா.ம.க. எங்கே? இவர்களை எல்லாம் பேசாத மீடியாக்களும் மக்களும் விஜயகாந்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?
    வை.கோ. பரவாயில்லை... வாக்குகள் வாங்கி இருக்கிறார் என்கிறோம். இதே வைகோ அப்போதே இதை செய்திருந்தால் இன்று மூன்றாவது நிலையில் அல்லவா அவர் இருந்திருப்பார்... ஆனால் அவர் செய்யத் தயங்கினார். விஜயகாந்த் மக்களே... மக்களே என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வார்டுகளில் தன் காலைப் பதித்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மைதானே.
    பார்ப்போம்... இனியாவது அவர் பிரதான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்களுக்காக... மக்கள் கட்சியாக மாற்றுகிறாரா என்பதை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.
    விஜயகாந்தும் சாதாரண அரசியல்வாதிதான். மனைவி, மச்சினன் என்று வலம் வருபவர்தான். இருந்தும் அவரிடம் மக்களாகிய நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம் என்பது அவரை நாம் விமர்சிக்க ஆரம்பிப்பதில் தெரிகிறது. நம் ஆவலை பூர்த்தி செய்வாரா கேப்டன். பொறுத்திருந்து பார்ப்போம்.
    இது கருத்து மோதலுக்காகவும் அல்ல... விஜயகாந்த் ஆதரவுக்காகவும் அல்ல...
    உங்கள் பகிர்வு அருமை நண்பரே.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி சகோ .எனது எல்லா ஓட்டும் போட்டாச்சு .உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  16. //ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது.

    //
    இதுதான் மிக பெரிய தவறு

    ReplyDelete
  17. பாடம் கற்றுக்கொண்டால் சரிதான், மப்புல உறங்கினால் பப்பு வேகாது...!!!

    ReplyDelete
  18. சரியா சொன்னீங்க

    ReplyDelete
  19. தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும் நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும்//

    சரியா சொன்னீங்க...

    எதிர்பார்த்து ஏமாந்துட்டேன்...

    ReplyDelete
  20. வித்தியாசமான பார்வை.

    ReplyDelete
  21. கப்டன் தனக்குரிய சந்தர்ப்பத்தை தக்க நேரத்தில் பயன்படுத்த தவறுகின்றார்.
    காற்றுள்ள போது தூற்றிக் கொண்டால் தேதிமுக இன் எதிர்காலம் வளமானதாக அமைந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  22. உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"