Ads 468x60px

11/30/2011

முதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து..நமக்கும்தான்..


நம் தமிழ் நாட்டில் விளை நிலங்களின் பரப்பு இப்போது பெரிதும் குறைந்துவிட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டில் 53 லட்சம் எக்டேராக இருந்த விளையும் நிலங்களின் பரப்பு இப்போது 48 லட்சம் எக்டேராகக் குறைந்துள்ளதே இதற்கு சாட்சி.

இதை,இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்..


"ஹர்வீந்தர் சிங்" இந்த பெயரைக் கேட்டால் இன்று இந்தியாவில் உள்ள  ஊழல் அரசியல் வியாதிகள் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் அரசியல்வியாதிகளுக்கு இதுதான் தண்டனை என்று கூறி முக்கிய மத்திய அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில், பளீர், பளீர் ன்னு அறை விட்டு இருக்கிறார் இந்த சீக்கிய இளைஞர்.

11/29/2011

யார் இப்போது முட்டாள்? - சிறுவர் கதைகள்


அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒரு நாள் ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

குப்பைக் கூடை அரசியல்வாதிகள்...!கூட்டிப் பெருக்கி
முடியவில்லை
ஒரு குப்பைக் கூடை
வாங்கிவா என்றாள்...!

11/28/2011

இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.

கூடங்குளம் பற்றி மறுபடியும் ஏதாவது சொல்றாரோ?


  • அத்தியாவசிய தேவையான நல்ல அரிசியின் விலை கிலோ ரூ. 30 லிருந்து ரூ. 40 ரூபாய்.                                                                                                ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது ...!!

பெட்ரோல் விலை!? மறைக்கப்படும் மர்மங்கள்...


பெட்ரோல், இன்று இந்தியாவில் அடிக்கடி விலை ஏறும் ஒரு பொருள். எப்போது உயரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று உலகளவில்   கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆனால் இந்த விலை ஏற்றம் ஏன்?


11/27/2011

'திமுகா'வின் அடுத்த மூவ் ! சரியா? தவறா?


தமிழ் நாட்டில் தற்போது உயர்த்தப்பட்ட பால் விலை, பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே எதிர்க்கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டார். மற்றொரு எதிர்க்கட்சி எந்த விதமான போராட்டம் நடத்தும் என பெரும்பாலோனோர் எதிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

11/24/2011

இருந்தா இப்படி இருக்கணும்!? இல்லையினா...(மகான்களின் வாழ்க்கையில்)


ஒரு சமயம் போர் முனையில் நெப்போலியனின் படைகள் எதிரிகளால் தீடீர் தாக்குதல் நடத்தப் பெற்று சங்கடமான ஒரு நிலையில் இருந்தது.

அப்போது இரவு நேரம் கூடாரத்தில் நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்தார். உறங்கும் நேரத்தில் நெப்போலியனை எழுப்பித் தகவல் கூறி அவர் ஆலோசனையைப் பெறுவது எப்படி என்று நெப்போலியனின் படைத் தளபதி சங்கடமடைந்தார்.

என்றாலும் வேறு வழி இல்லாததால் படைத் தளபதி நெப்போலியனின் கூடாரத்துக்குள் பிரவேசித்தார்.

நெப்போலியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நெப்போலியனை எழுப்பவா, வேண்டாமா என்று படைத் தளபதி யோசித்தபோது மேஜை மீது ஏதோ எழுதப்பட்ட காகிதம் ஒன்று விரித்து வைக்கப் பட்டு இருந்தது தளபதியின் கண்ணில் பட்டது.

அந்தக் கடிதத்தை தளபதி எதுத்துப் படித்தார். எதிரிப் படைகள் அன்று இரவு திடீர் தாக்குதல் நடத்தக் கூடும் என்று யூகித்து, எதிரிப் படைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கான வழி வகைகளை அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஆலோசனைப்படி தளபதி எதிர்தாக்குதல் நடத்தி எதிரிப் படைகளைப் பின்வாங்கி ஓடச்செய்தார்.

டிஸ்கி: நான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதால் இன்னும் இரண்டு நாளுக்கு நண்பர்களின் பக்கம் வரமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!


ழ்மையான குடும்பத்தில் அவன் பிறந்தான். சிறுவனாக இருந்தபோது தந்தையின் பணிகளுக்கு  உதவிபுரிந்தான். ஒன்பது வயதில்  ஒன்பது மைல் நடந்து ஆரம்பக் கல்வியைக் கற்றான்.  ஒரு நீக்ரோ பெண்ணை அடிமையாக விற்கப்படுவதைக் கண்டு  அதிர்ந்தான்.  இம் மாதிரியான கொடுமைகளை  தடுத்து நிறுத்த அரசியலில் ஈடுபடவேண்டும் என முடிவு  செய்தான். அரசியலில் குதித்தான்.

11/23/2011

கனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்?


இந்த 2G வழக்கு கன்னித்தீவு கதைபோல முடிவே இல்லாமல் இருந்தது. அனால் இன்று, அந்த வழக்கில் சிக்கியுள்ள ஐந்து பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வா? அடப் போங்கப்பா...


"2020ல், நம் இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, பல அறிஞர்களும், பெரியோர்களும் , இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பது உண்மையே..

11/22/2011

கனிமொழி செய்தது ஊழலா? திருட்டா ?ஒரு சராசரி குடிமகன், அடுத்தவருடைய  பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம். 

11/21/2011

முதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு!?


முதல்வர் ஜெயலலிதாவால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை உடனே பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதற்கு பதில் சொல்ல முடியுமா? (மகான்களின் வாழ்க்கையில்)


பகவான் இராமகிருஷ்ணர் ஒரு நாள் தமது சீடர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பொதுவான ஒரு வினாவை எழுப்பினார்.

11/19/2011

வாழ்க்கையின் முரண்பாடுகள்


முதுமலைக்
காட்டில்
துதிக்கையை 
தூக்கிக்காட்டி 
குட்டியிடத்தில் சொன்னது
யானை ஒன்று,
அதோ பார் பேருந்தில் 
மனிதர்கள் என்று...

11/18/2011

போதையில் உளறினாரா விஜயகாந்த்?தமிழக அரசு நேற்று அறிவித்த விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

பஞ்சாமிருதம் - 11182011மீண்டும் ஒருமுறை மீனவர்கள் மீது தாக்குதல். வழக்கம் போல நம் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம். (ங்கொய்யால எல்லா முதலமைச்சர்களும் கடிதம்தான் அனுப்புவீங்களா?)

11/17/2011

அன்புள்ள அம்மாவுக்கு...


ருக்கலிலே களையெடுக்கப் போன
என்  ஆத்தா
பொழுதுசாய வீடு வரும்...!

ஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கையில்)


புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள்.

11/16/2011

என்னடா உலகமிது?


நடு ரோட்டில் 
நாய் ஒன்று அடிபட்டு
நாறிக் கிடந்தது
யாரும் எடுத்தெரியாமல்,
போன வாரத்தில்...! 

Mr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா?


முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் விலைவாசி இருக்கிறது. எப்போதும் நம் பிரதமரிடம் இதைப் பற்றி கேட்டால் பல வளர்ந்த நாடுகளை விட நம் நாட்டில்தான் விலைவாசி குறைவு என்பார். இல்லையென்றால் விலைவாசி உயர்கிறது என்றால் நாம் வளர்கிறோம் என்பார். ஒருமுறை இது தற்காலிகம் தான் பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்துவிடும் என்பார்.

11/15/2011

சொந்த அனுபவம்..(மகான்களின் வாழ்க்கையில்)


இந்த "மகான்களின் வாழ்க்கையில்" என்கிற இந்தத் தொடர், நம் உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள், மகான்கள், வாழ்க்கையில் உச்சத்தை(பொருளாதார நிலையில்) அடைந்தவர்கள், பேரறிஞர்கள் போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான, படிப்பினைத் தரும் நிகழ்ச்சிகளை தொகுப்பாக்கும் ஒரு சிறு முயற்சியே....

இவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ ?

பணம் அனுப்பாத
மாதத்தில்
என் மணிஆர்டரை
எதிர்ப் பார்த்த
பொழுதொன்றில்தான்
அப்பா இறந்துபோனார்...

11/14/2011

என்னக் கொடுமைடா சாமி!?


தலை வலிக்க 
பாதியில் எழுந்து,
பரபரப்புடன் ஓடி வந்து
கிளம்பபோகிற
பேருந்தில்,
ஏறி உட்காந்து 
சுவாசிக்க தொடங்குகையில்!

இன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா?


ஒரு நாட்டின் மன்னர் ஒருவர், தன் அரச வாழ்வில் நிம்மதி அற்று இருந்தார். எதிலும் பிடிப்பு இல்லை, ஏதோ ஒரு ஏக்கம், சோகம் அவரை சூழ்ந்து இருந்தது.

நிம்மதி இல்லையே என்று இருந்தவர் ஒரு மகானிடம்(சூபி) சென்று தன் நிலையைக் கூறினார்.

'மன்னா! உனக்கென்று பல கடமைகள் இருக்கிறது, அவற்றையெல்லாம் செய்தாயா?' என அந்த மகான் கேட்டார்.

மகான்அவர்களே, இந்த நாட்டை நன்றாக செல்வா செழிப்புடன் வைத்துள்ளேன். அண்டை நாட்டுடன் நட்புறவு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன. மக்களுக்கு வரிச்சுமை கூட இல்லை, என்றார் மன்னர்.

"சரி! இப்போதைக்கு ஒன்று செய்வோம், உனது நாட்டை என்னிடம் கொடுத்துவிடு!"

எடுத்துக்கொள்ளுங்கள்!

'அதன் பிறகு நீ என்ன செய்வாய்?'

'நான் வேறு எங்காவது சென்று வேறு வேலை செய்து வாழ்ந்துகொல்கிறேன்!'

"மன்னா! எங்காவது போய் தெரியாத வேலை செய்து கஷ்டப்படுவதை விட, நீ என்னிடமே வேலை செய் . உனக்கு தெரிந்தது அரசாட்சி புரியும் வேலைதான், ஏன் பிரதிநிதியாக சென்று நீயே நாட்டை ஆளு, அதற்க்கு நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நான் எப்போதாவது வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன் என்றார் மகான்.

மன்னர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.

ஓர் ஆண்டு சென்றது.

அந்த மகான் , அந்த அரசனின் அரண்மனைக்குச் சென்று மன்னரை சந்தித்தார்.

இப்போது மன்னர் சந்தோஷத்துடன் காணப்பட்டார். நல்ல சுறுசுறுப்பு, மகானை வரவேற்று உபசரித்தார். எல்லாம் முடிந்ததும் ஒரு வருடத்திற்கான வரவு, செலவு கணக்குப் புத்தகத்தை மகானிடம் காண்பித்தார்.

உடனே மகான், கணக்கு இருக்கட்டும், நீ இப்பொழுது எப்படி இருக்கிறாய்? என கேட்டார்.

மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்!

நிம்மதி இல்லை என்றாயே?

'அதுவும் கிடைத்துவிட்டது '

உன் இந்த ஓராண்டு பணியில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தாயா?

நிச்சயமாக! முன்பு ஒரே மன அழுத்தத்துடன் நிம்மதி அற்று இருந்தேன், ஆனால் இப்போது முழு நிம்மதியுடன் இருக்கிறேன்!.

"இந்த நிம்மது உனக்கு எப்படி கிடைத்தது?"

'அது எப்படி என்று தெரியவில்லை பெருமானே?'

மகான் புன்னகைத்தார்.

"மன்னா! முன்பு இது என்னுடைய ஆட்சி என்று எண்ணினாய், அதனால் எல்லா பொறுப்புகளும் உன்னைச் சூழ்ந்தன. அதனால் பல குழப்பங்கள் உனக்கு இருந்தது. எனவே உனக்கு நிம்மதி போய்விட்டது.

இப்போது இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது "நான்" உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும். இது உன் நாடு, இதை உன்னிடமே ஒப்படைக்கிறேன். சிறப்பாக ஆட்சி செய் என்றார் மகான்.

எனவே "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.

படம் கூகிள் தேடல் மூலம் பெறப் பட்டது.  

11/13/2011

சிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் !!! - அட்ராசக்க...


திரு. சிபி அவர்கள் நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். அப்போது நேரம் மாலை 7 மணி. நண்பரின் பேரன் அசோக் சைக்கிளில் வந்து இறங்கினான்.

11/12/2011

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!!


ஞாபக சக்தி என்பது பல மாணவர்களின் இன்றைய பிரச்சனை. சில மாணவர்கள் என்னிடம், சார் நான் படிச்சேன், அப்ப ஞாபகம் இருக்கு ஆனா தேர்வு அறையில் மறந்து போய்விடுகிறது, என்ன செய்ய என்று கேட்டு இருக்கிறார்கள். அப்படி பட்ட மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்..

11/11/2011

முதல்வர் ஜெ ! இது நியாயமா?


கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து, இந்த வெற்றி தி.மு.க வின் ஊழல் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்று முதல்வர் ஜெ சொல்லி இருந்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த பின்னர் சில அதிரடி மாற்றங்கள் அவரிடம் தெரிந்தது.

ஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?


அவசரமாய்
கதவைத் தள்ளி 
உள் நுழைகையில்,

11/10/2011

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல?இன்னைக்கு காலையில மூணாவது பீரியட் எனக்கு ப்ரீ. அப்ப எங்க தலைமை ஆசிரியர் வந்து இன்னைக்கு ஒன்பதாம் வகுப்புக்கு சமூக அறிவியல் சார் வரல, அந்த வகுப்பு ஒரே சத்தமா இருக்கு நீங்க அந்த வகுப்புக்கு போய் கொஞ்சம் பாத்துக்கோங்க ன்னு சொன்னாரு. சரி நானும் அந்த வகுப்புக்கு போனேன். 

மாணவர்களைப் பார்த்து உங்களுக்கு ஏதாவது பொதுஅறிவு கேள்விகளில் ஏதாவது கேட்கணும்னா எங்கிட்ட கேளுங்க, எனக்கு தெரிஞ்சா பதில் சொல்றேன்னு சொன்னேன்.( மனசுல ஒரு பயம் இருந்தது ஏடாகூடமா எனக்கு தெரியாத கேள்விகள் கேட்டா என்ன பண்றது) சரி சமாளிப்போம், அவர்கள் கேட்ட கேள்விகள் :


உலகில் இரவே இல்லாத இடம் - எது?

ஹேமர்பாஸ்ட் எனப்படும் பனிப் பிரதேசம்.

இதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்


சிக்கல் கூட
அழகாய்த்தான் இருக்கிறது
நீ போட்ட
கம்பிக் கோலம்...!

11/09/2011

இது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை !!!


கனிமொழியின் மீது குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை, அவர்கள் நிரபராதியாக இருந்தால் தன்னம்பிக்கை கண்டிப்பாக அவர்களுக்கு தேவை. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த விஜயகாந்தும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்பட தன்னம்பிக்கை வேண்டும். 


அவமானம் ஒரு மூலதனம்

இந்த உலகம் பல அதிசயங்களைக் கொண்டது. அதே சமயத்தில் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. இந்த உலகத்தில் சில விஷயங்கள் நமக்கு சாதகமாக இல்லை என்பதால் இந்த மொத்த உலகமே நம்மை எதிர்க்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது.

11/08/2011

பெற்றோர்களின் கவனத்திற்கு..


ஒரு சின்னக் குழந்தை புத்தகத்தை எடுக்கப் போனால் உடனே பெற்றோர்கள், வேண்டாம்பா, அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடு கிழித்துவிடப் போகிறாய் என எச்சரிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இது தவறான அணுகுமுறை என்றே அறிஞர்கள் சொல்லுகிறார்கள். குழந்தைகளுக்கு புத்தகத்தின் மகத்துவத்தை பொறுமையாக சொல்லுங்கள் என்கிறார்கள் அவர்கள்.

11/07/2011

பிரச்சனைகள் வரும்போது....


நமது வெற்றித் தோல்விகளை நம்முடைய மனதுதான் தீர்மானிக்கிறது. நமக்கு முன்னே ஒரு சவால் ஒரு பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் வெற்றித் தோல்விகள் அமைகிறது.

'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்ச்சி தகவல்


இன்று உலகம் முழுதும் கணினி பயன்படுத்துவோர் 'பிளாக்' எனப்படும் வலைத்தளத்தை பார்க்காதவர்களும், பயன்படுத்தாதவர்களும் மிகக் குறைவே. மிகப் பெரிய சமூக வலைத் தளமான 'பேஸ்புக்' கை அடுத்து பலரும் பிலாகைப் பயன் படுத்துகின்றனர்.


இந்த 'பிளாக்' மூலம் பலரும் பல சமூக பிரச்சனைகளையும், தம் சொந்த அனுபவங்களையும், நகைச்சுவை, சினிமா பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.


இந்த பிளாக் மூலம் பலருக்கு புதிய நண்பர்களும் கிடைக்கின்றனர் . பல தெரியாத தகவல்களையும் தெரிந்து கொள்ள இந்த பிளாக் உதவுகிறது.


இந்த பிளாக் மூலம் பல நன்மைகள் இருந்தாலும் சிலர் இதற்க்கு அடிமையாகி விடுகின்றனர்.


மது போன்ற பழக்க வழக்கங்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த போதை தரக்கூடிய சமாச்சாரங்களை பயன் படுத்தவில்லை எனில் உடல் நடுங்க ஆரம்பிக்கும், மனம் எப்பாடுபட்டாவது அதை பயன்படுத்த வேண்டும் என துடிக்கும். இதையே அப்பழக்கத்திர்க்கு அடிமையாதல் என்கிறோம்.


அதுபோல சிலருக்கு பிளாகில் இல்லையெனில் மனம் அதைப் பற்றியே சிந்திக்கும். வேறு வேலைகள் செய்ய மனம் போகாது.  சில பல காரணங்களால் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை எனில் பிரவுசிங் சென்டர் சென்றாவது பிளாகில் நேரத்தை செலவிட மனது துடிக்கும்.


இதையே பிலாகிர்க்கு அடிமையாதல் என்கிறோம். உறவுகளே பிளாக் போன்றவைகள் டைம் பாஸ் க்காக மட்டும் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் வாழ்கையாகாது.


பிளாக் மூலம் நல்ல நட்புகளை வளர்ப்போம் .   

11/06/2011

வெற்றிகளுக்கான இரகசியம்...


இதன் இரகசியத்தை 
இன்னும் 
மனிதகுலம் 
தேடிக்கொண்டிருக்கிறது...

புறக்கணிப்பை புறந்தள்ளுவோம்..


ஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஒரு கவிதையை எழுதி ஆசிரியரிடம் காண்பித்தான். அவர் அக்கவிதையை படிக்காமல் அந்த காகிதத்தை பறித்து கசக்கி எறிந்துவிட்டு , டேய் போய் ஒழுங்கா படிக்கற வேலைப் பார் என குட்டு வைத்தார்.

அதன்பிறகு அந்த சிறுவன் கவிதை எழுதுவதில்லை. இது மாதிரி பல திறமைசாலிகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றனர். சரி அந்தப் பையன் எழுந்து நின்று ஏன் எழுத ஆரம்பிக்கவில்லை.

அவன் சந்தித்த முதல் புறக்கணிப்பு. முதல் புறக்கணிப்பைத் தாங்கி ஜெயிக்க அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். அது அவனிடம் இல்லை. ஒவ்வொரு மனிதனிக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் முதல் புறக்கணிப்பில் அவன் செத்துப் போகிறான்.

உறவுகளே புறக்கணிப்பை புறக்கணியுங்கள். வெற்றி நம் பக்கம் .

11/04/2011

அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?


சென்னை கோட்டூர்புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கடந்த திமுக ஆட்சியில் மிகப் பிரமாண்டன நூலகம் கட்டப்பட்டது. 

அங்கு 12 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அங்கு 1,250 பேர் அமர்ந்து படிக்க முடியும். தினமும் 1,300 பேர் வந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கான தனி பிரிவும் உள்ளது.


பல நவீன வசதிகள் கொண்ட இந்த நூலக கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும். கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்றும் செவ்வாய்கிழமை முதல்வர் அறிவித்திருந்தார்.

முன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித்த திரையுலகினர்


தமிழ் திரையுலகின் முன்னாள் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் நினைவு நாளை அனுசரிக்க திரையுலகில் யாருமே வராததது அவரது குடும்பத்தாரை பேரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

11/03/2011

கனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன?- விரிவான அலசல். 2G case Bail pleas of Kanimozhi dismissed


2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கிறார் கனிமொழி.

மேலும் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆர். ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லியில் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

பெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது? - women, secret ...


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ என்பவர் செய்த ஆய்வு பெண்ணின் மனதின் ஆழத்தை கண்டுபிடித்துள்ளது. (இது கொஞ்சம் பழைய அறிக்கைதான், ஏற்கெனவே பல தளங்களில் விரிவாக வந்துள்ளது, இதில் எளிமையாக ) ஆனால் எண்ணற்ற பல பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து கிடக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார் இவர்.

11/02/2011

இது மட்டும் நியாயமா?


டிக்கெட்டுக்காக
கொடுத்த சில்லறையில்,
ஐம்பது காசு 
குறைவாய் 
இருக்கிறதென,

1-11-11


இந்த வருடம் 'எண் 1ஐ' அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய இரண்டு தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. இவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப் படுகிறது.

மேலும் 11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. 11-11-1111 என்ற ஆண்டு, 900 ஆண்டுகளுக்கு முன் வந்தது.நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு, வயதைக் கூட்டினால் 111 வரும். அதே போல இந்த தேதிகளும் வருகின்றன.

இந்த ஆண்டின் போன அக்டோபர் மாதத்தில் தான், 5 சனிக்கிழமைகள்,                  5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வந்தன. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம். 


இதோ இன்னும் ஒருநிமிடத்தில் இந்த அதிசய நாளுக்கு(1-11-11)நாம் விடைக்கொடுக்கப் போகிறோம். மேலும் இன்னொரு அதிசய நாளான 11-11-11 வெள்ளிக் கிழமையில் வருகிறது காத்திருப்போம்.

11/01/2011

சாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்! - உண்மைச் சம்பவம்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்திபலகானூர் என்ற கிராமத்தில் உள்ள, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பூசாரி கையால் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி வருடா வருடம் வெகு விமர்சையாக நடைபெறும்.

ஏமாந்த விஜயகாந்த் ! சுயபரிசொதனைக்கு தயாராக வேண்டும்..


சிந்தியுங்கள் மக்களே, கடவுளோடும், மக்களோடும் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் மக்களே என்று தமிழகம் முழுவதும் வீதி,வீதியாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கெஞ்சாத குறையாக வாக்கு வேட்டையாடியும் விஜயகாந்த்,  பிரேமலதா ஆகியோரின் கோரிக்கையை மக்கள் நிராகரித்து விட்டது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.