Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/25/2011

தீபாவளி சில நம்பிக்கைகள் ..


தன் தாயாலேயே கொல்லப்பட்ட நரகாசுரன் இறந்த நாள்தான் தீபாவளி. இந்த நரகாசுரன் இறந்த நாளைத்தான் நாம் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். தன் மகன் நரகாசுரன் இறந்தான் என்பது சோகத்தை தந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் மற்றவர்கள் சந்தோஷமாக பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டாள் பூமாதா. 

நாம் வருந்தினாலும் மற்றவர்களை வருந்தச் செய்யக்கூடாது என்ற உயர்வான எண்ணத்தை உருவாக்கும் பண்டிகைதான் தீபாவளி. பொறுமையின் சிகரமான மண்மாதா நமக்கு உணர்த்திய பாடம்தான் தீபாவளியின் உட்பொருள். 

ஒரு சமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யனை அழித்து நீரில் அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் , திருமாலுக்கும் பிறந்தவன்தான் இந்த நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயினால் மட்டுமே தான் இறக்க வேண்டும் என்பது.


மக்கள் எல்லோருக்கும் பல தொல்லைகளைக் கொடுத்த நரகாசுரனை வதம் செய்ய எண்ணி திருமால் தேரில் வரும்போது, தன்னுடன் பூமாதாவையும் அழைத்து வந்தார். போரின் உச்சகட்டத்தில் திருமால் மயங்கியதுபோல் நடிக்க, மன்மாதா அம்பெய்தி நரகாசுரனைக் கொன்றாள். அப்போது அவளுக்கு, பூர்வஜென்மத்தில் தான் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்தவனே இந்த நரகாசுரன் என்பதும் அவன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே இறந்துவிட்டான் என்பதும் நினைவுக்கு வந்தது. 

அவன் இறந்த நாளை மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்றும், அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் கலந்திருக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்றாள் பூமாதா. அதைத்தான் நாம் இன்று தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். 

இன்று கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரகம், அகால மரணம், கோர மரணம், நோய் ஏற்படாது எனவேதான் அவள் அப்படி வரம் பெற்றாள். தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான்.


ஆக அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல. 
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

33 comments:

  1. டெம்ப்ளேட் கமெண்ட் போடமாட்டேன் ஹி ஹி அதனால நோ தீபாவளி வாழ்த்து

    ReplyDelete
  2. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  3. தீபாவளியைப் பற்றி அருமையான தகவல் தந்தீர்கள் சகோ .
    வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .........

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் பாஸ்,
    நலமா?

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

    ReplyDelete
  5. //
    ஆக அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
    நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.//

    சரியா சொன்னிங்க தல

    ReplyDelete
  6. தோழருக்கு
    என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஊரெல்லாம் நிறைய காரணம் சொல்லுறாங்க நமக்கு தீபாவளின்னா ஒரு நாள் லீவு சந்தோஷம்

    தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மச்சி பாப்பாவுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிடு.....

    ReplyDelete
  9. தீபாவளிப் பண்டிகையின் மகத்துவத்தைச் சொல்லி நிற்கும் நல்லதோர் பதிவு பாஸ்.

    ReplyDelete
  10. தீபாவளிப் பண்டிகையின் மகத்துவத்தைச் சொல்லி நிற்கும் நல்லதோர் பதிவு பாஸ்.

    ReplyDelete
  11. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தீபாவளி குறித்த தவகல்...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ....

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

    ReplyDelete
  16. உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மாணவ மாணவியர்கள், உங்களைத்தெரிந்த மற்றும் உங்களுக்குத்தெரிந்த அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி, அருமையான தகவல்

    ReplyDelete
  18. பகிர்வுக்கு நன்றி தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. கங்கா ஸ்நானம் பற்றி இதுவரை தெரியாது. தெரிந்துக்கொண்டேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  21. என்னய்யா வாத்தி, தீபாவளியும் அதுவுமா மாமியார் வீட்டுக்கு போகலையா பலகாரம் சாப்பிட ஹி ஹி...

    ReplyDelete
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாப்ள..

    ReplyDelete
  24. தீபாவளியைப் பற்றி அருமையான தகவல் தந்தீர்கள் சகோ .
    வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  25. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  26. கடைசியா சொன்ன வரிகள் முற்றிலும் உண்மை. நன்றி நண்பரே,

    ReplyDelete
  27. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  29. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  30. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"