Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/24/2011

காங்கிரஸ் இனி தேவையா?


நம்நாடு சுதந்திரம் அடைந்த கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் நாம் பார்த்தே இராத ஒரு அசாதாரண அரசியல் சூழ்நிலை இப்போது நிலவுகிறது. இரண்டு, மூன்று பிரதான கட்சிகளும், அதைச் சார்ந்த பல பிரதமர்களும் ஆண்டு முடிந்த நிலையில், கடந்த 2ஆண்டுகளாக படிப்பறிவு இல்லாத மக்கள்கூட 'என்ன நடக்கிறது' எனக் கேட்கும் நிலை உருவாகிஇருக்கிறது எதனால்?

காங்கிரஸ் எனில் காந்தியம் என்றுதான் ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருந்தோம். அந்த நம்பிக்கை சிறுகச் சிறுக இப்போது கேள்விக்குறியாகி பின்பு கேலிக்குரிய விஷயமாகி விட்டது. 

இதை நன்றாக நாம் கவனித்தோமானால் இந்நிலை எப்படி ஏற்பட்டது என்பது சற்று விளங்கும். கடந்த பா.ஜ., அரசின் பதவிக் காலத்தில் நாடு சிறிது முன்னேற்றம் கண்டதாகவே சொல்லலாம். உள்நாட்டு உற்பத்தி, அன்னியச் செலாவணி, வெளிநாட்டு கம்பெனிகளின் வரவு, சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு என நாடு சிறிது முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், ஐ.மு., கூட்டணியின் ஆட்சி ஏற்பட்டு, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி ஏற்பட்டவுடன் நம் நாட்டின் இருண்ட காலம் தொடங்கி விட்டது எனலாம் . 

எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதங்கள், ஊழல்கள்,  போராட்டங்கள், மாநில பிரிவினை போராட்டங்கள், ஊழலுக்கு நாடு தழுவிய எதிர்ப்புகள், இலங்கை அகங்காரத்தை கண்டுகொள்ளாமை, தமிழ மீனவர்களை கண்டுக்கொள்ளாதது என பல பிரச்சனைகள் ஆரம்பித்தன.

காங்கிரஸ் கூட்டணியின் முதுகெலும்பு இல்லாத தலைவர், நிர்வாக திறமை?பிடுங்கப்பட்ட பிரதமர்,  கோடீஸ்வர அமைச்சர்கள், கொள்ளைக்காரர்களாய் கட்சித் தலைவர்கள், பல ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர்கள் என நம் நாடு நாடு பாதாள படுகுழியில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

இன்றைய சூழ்நிலையில் நம் நாடு மீண்டெழ ஒரு நல்ல கட்சித் தலைவரும்,  ஒரு திறமையான பிரதமரும் வேண்டும்.
கிடைப்பர்களா?

டிஸ்கி : கடந்த ஒரு வாரமாக தேர்தல் பணியில் இருந்ததினால் தொடர்ந்து பதிவுகள் இடமுடியவில்லை, நண்பர்களின் பதிவுகளுக்கும் வரமுடியவில்லை. இன்றுதான் பதிவுஉலகம் பக்கம் வரமுடிந்தது. மன்னியுங்கள் உறவுகளே.... இந்த ஒருவார காலத்தில் பல பிரச்சனைகள் பதிவுலகில் நடந்திருப்பதாக தெரிகிறது. அந்த பிரச்சனைகள் பற்றி நண்பர்களே அவர்களுடைய தளத்தில் விளக்கி இருப்பதால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. நன்றி. 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

39 comments:

  1. தமிழக காங்கிரஸ் இல்லாவிடில் நகைச்சுவைக்கான களம் தொலைந்து போகும். இருக்கட்டும்.

    ReplyDelete
  2. >>. அந்த பிரச்சனைகள் பற்றி நண்பர்களே அவர்களுடைய தளத்தில் விளக்கி இருப்பதால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை

    மாப்ளே.. அதெல்லாம் முடியாது, உங்க கருத்தை சொல்லியே ஆகனும்.. ஹி ஹி எப்பூடி?

    ReplyDelete
  3. கருண் சார் எப்படி இருக்கீங்க? சிவகுமார் சொல்வது உண்மைதான்

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. முக்கியமான பதிவரே கருத்து சொல்லாமல் விலகினா எப்படிங்க?

    ReplyDelete
  6. //காங்கிரஸ் கூட்டணியின் முதுகெலும்பு இல்லாத தலைவர், நிர்வாக திறமை?பிடுங்கப்பட்ட பிரதமர், கோடீஸ்வர அமைச்சர்கள், கொள்ளைக்காரர்களாய் கட்சித் தலைவர்கள், பல ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர்கள் என நம் நாடு நாடு பாதாள படுகுழியில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. //

    நிதர்சனமான உண்மை..

    தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காங்கிரஸ் கூட்டணியில் நம் நாடு நாடு பாதாள படுகுழியில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது...

    நிதர்சனம்.

    ReplyDelete
  8. வந்துடீங்களா வாத்தியாரே ..இன்றைய பதிவுல உங்கள கேட்டு எழுதி இருந்தேன். நீங்களே வந்துடீங்க. போங்க உங்க குட உணவருந்துர பாக்கியம் யாருக்கும் இல்லாம போச்சு. நெஞ்சில் அண்ணே நீங்க தப்பிச்சிட்டீங்க.

    ReplyDelete
  9. அட பரவாயில்லையே திரும்பவும் வந்தாச்சா????

    ReplyDelete
  10. காங்கிரசுடைய முதல் ஐந்தாண்டு காலம் நன்றாகத்தான் சென்றது என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  11. என்னது காங்கிரசு தேவையா இன்னுமா தமிழ் நாட்டில் இது இருக்குதுக அதுக எல்லாமே எப்போதோ கூடாரத்தை காலிபண்ணிட்டு போயிடுசிக இனி காங்கிரசு தமிழ் நாட்டில தலைய தூக்கும்ன்னு சொல்றீங்க அட நீங்கவேற சிரிப்பு கட்டதீங்க ...

    ReplyDelete
  12. இரத்தின சுருக்கம்

    ReplyDelete
  13. மாப்ள கேள்வி ரொம்ப Strong.. நம்ம கிட்ட பதில் ரொம்ப வீக்கு பகிர்வுக்கு நன்றி! தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. காங்கிரஸுக்கு சிறந்த மாற்று தோனாறாதவரை காங்கிரஸிற்கு அழிவில்லை.

    ReplyDelete
  15. //சிறுகச் சிறுக இப்போது கேள்விக்குறியாகி பின்பு கேலிக்குரிய விஷயமாகி விட்டது. //

    ஆமா கருன் ஆமா.

    ReplyDelete
  16. //பிடுங்கப்பட்ட பிரதமர்//

    ஃப்யூஸ் -ன்றத விட்டுட்டீங்க பாஸ்.

    படிக்கிற நாங்க நடுநடுவுல “மானே, தேனே, பொன்மானே”... எல்லாம் போட்டுக்கிறோம்.

    ReplyDelete
  17. கருன்,

    ஆசிரியர் நீங்கள். பதிவில் நீங்கள் எதிர்ப்பார்க்கும், எதிர்க்கால பிரதமரை உங்கள் பட்டறையிலிருந்தும் உருவாக்கலாம்.

    ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால்!

    ReplyDelete
  18. இந்த ஒருவார காலத்தில் பல பிரச்சனைகள் பதிவுலகில் நடந்திருப்பதாக தெரிகிறது. அந்த பிரச்சனைகள் பற்றி நண்பர்களே அவர்களுடைய தளத்தில் விளக்கி இருப்பதால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.//

    ஹா ஹா ஹா ஹா அப்போ நீங்களும் விலகிட்டீன்களா...???

    ReplyDelete
  19. காங்கிரஸை எல்லாம் கட்சின்னு நினைச்சுட்டு ஒரு பதிவை மிஸ் பண்ணிட்டீங்களே வாத்தி...!!!

    ReplyDelete
  20. நல்ல கேள்வி ஆனா பதில் தான் ஹா ஹா ஹா

    ReplyDelete
  21. பாவம் மன்மோகன்சிங்...(தேர்தல் பணி எப்படி இருந்துச்சு..விடிய விடிய எண்ணி எண்ணி இன்னும் தூக்கம் கலையல)

    ReplyDelete
  22. கருன்...இன்றைய அரசியலோடு வந்திருக்கிறீர்கள்.சுகம்தானே.
    தீப ஒளி வாழ்த்துகள் !

    ReplyDelete
  23. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. காங்கிரசை எதிர்த்துப் பேசிய நீர், நாடு கடத்தப் படுவீர்....

    அன்னை வாழ்க! ராகுல்ஜி வாழ்க!

    தங்கபாலு வாழுக!

    ReplyDelete
  25. //இன்றைய சூழ்நிலையில் நம் நாடு மீண்டெழ ஒரு நல்ல கட்சித் தலைவரும், ஒரு திறமையான பிரதமரும் வேண்டும்.
    கிடைப்பர்களா?//



    கிடைப்பார்கள்....ஏனென்றால் நான் ரெடி... என்ன ஒன்னு எங்கிட்ட கட்சி இல்ல...அவ்வளவுதான்...

    ReplyDelete
  26. தமிழக காங்கிரஸ் இல்லாவிடில் நகைச்சுவைக்கான களம் தொலைந்து போகும். இருக்கட்டும்....//

    இவர் சொல்வது உண்மைதான் சகோ .அது இருக்கட்டும்..ஹி..ஹி ..ஹி .. மிக்க நன்றி புரட்சிப் பகிர்வுக்கு .வாருங்கள் சகோ என் தளத்திற்கும் .உங்களுக்கு என் தீபாவளி
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ........

    ReplyDelete
  27. //இன்றைய சூழ்நிலையில் நம் நாடு மீண்டெழ ஒரு நல்ல கட்சித் தலைவரும், ஒரு திறமையான பிரதமரும் வேண்டும்.
    கிடைப்பர்களா?//
    என்னத்தக் கெடச்சு என்னத்தமீண்டு!

    ReplyDelete
  28. தேர்தல் பனி முடிந்ததா நண்பரே

    நான் நினைத்தேன் தேர்தல் பணி நிமித்தமாகத்தான் பதிவு பக்கம் வரவில்லை என்று

    தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  29. நல்ல தலைவரா எங்க எங்க ...))

    தீபாவளி வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  30. கலக்கலா வந்திருக்கீங்க!

    என்னங்க!இப்ப இருக்கறத விட ஒரு நல்ல கட்சித்தலைவர்,ஒரு திறமையான பிரதமர் எப்படிங்க கிடைப்பாங்க?

    அட யாருப்பா அது சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும் போது சிரிக்கறது?
    அவங்கள பாத்தா உங்களுக்கு காமெடி பீஸ் மாதிரி தெரியுதா?

    ReplyDelete
  31. //இன்றைய சூழ்நிலையில் நம் நாடு மீண்டெழ ஒரு நல்ல கட்சித் தலைவரும், ஒரு திறமையான பிரதமரும் வேண்டும்.
    கிடைப்பர்களா?//

    ரொம்ப கஷ்டமான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்... எல்லோரும் பெயில் ஆகவே வாய்ப்பு அதிகம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  32. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"