Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/05/2011

நம் நாடு எங்கே செல்கிறது?


நாம் அனைவரும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலு பேருக்கும், நன்றி சொல்வது வழக்கம். அதுபோல, இப்போது கண்டிப்பாக இரண்டு பேருக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 


அந்த இருவரும் யார் தெரியுமா?  நம்மிடையே இருக்கும், நீதித்துறையும், பத்திரிகை துறையும் தான். 


எங்கு பார்த்தாலும், கோடி, கோடியாக ஊழல், லஞ்சம். இந்த இரண்டும், நம் நாட்டை பிடித்த பீடைகள். இதை ஒழிக்க முடியாதா... 


'லஞ்சப் பணத்தையும், ஊழல் செய்த பணத்தையும் வெளிக்கொண்டு வருவோம்' என, மார்தட்டி பேசி, மக்களை மயக்கி, ஓட்டு வாங்கி அரசியல் செய்தவர்கள் எல்லாரும் தற்போது என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை . 


மக்களின் பொறுமையும் அளவு கடந்து மலையளவு(எவரெஸ்ட்) உயர்ந்து விட்டது. பாவம் அவர்களால் என்ன தான் செய்ய முடியும்? தங்கள் தலையெழுத்தை எண்ணி, கண்ணீர் சிந்துவதைத் தவிர . 


சுப்ரீம் கோர்ட் தன் வழியில் நேர்மையாக செல்வதால்(செல்கிறதா?), இன்று சில ஊழல்வாதிகள், திகார் சிறையில் அடைபட்டு கிடக்கின்றனர். இன்னும் பல பேர் வெயிடிங் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் . இதை, பத்திரிகைகள் தொடர்ந்து தோலுரித்துக் காட்டினாலே போதும். 


எந்தவித கருணையும் காட்டாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு , 'எந்த'  மயக்கத்திற்கும் ஆளாகாமல், குற்றவாளிகளை கடுமையாக தண்டியுங்கள். 


நீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்! 
பத்திரிக்கையாளர்களே...பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றுங்கள்...

26 comments:

  1. மக்களின் பொறுமையும் அளவு கடந்து மலையளவு(எவரெஸ்ட்) உயர்ந்து விட்டது. பாவம் அவர்களால் என்ன தான் செய்ய முடியும்? தங்கள் தலையெழுத்தை எண்ணி, கண்ணீர் சிந்துவதைத் தவிர .


    இதுதானே நிஜத்தில் நடக்கிரது.

    ReplyDelete
  2. கரெக்டா சொல்லி இருக்கீங்க பாஸ்

    ReplyDelete
  3. உங்கள் ஆதங்கம் சரி ஆனா இது செவிடன் காதில் ஊதிய சங்கு

    ReplyDelete
  4. நீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்!
    பத்திரிக்கையாளர்களே...பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றுங்கள்..///////

    அருமையான வேண்டுகோள் அண்ணே!அவர்கள் இருவரும் இறுக்கமாக இருந்தால், நாடு முன்னேறும்!

    ReplyDelete
  5. மாப்ள கேட்ப்போம் கேட்ப்போம் கேட்டுகிட்டே இருப்போம்!

    ReplyDelete
  6. நீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்!
    பத்திரிக்கையாளர்களே...பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றுங்கள்...


    அருமையான வேண்டுகோள்

    ReplyDelete
  7. சரியாக சொன்னிர்கள் - இந்த அரசியல்வியாதிகள் எந்த துணிச்சலில் மீண்டும் மீண்டும் ஒட்டு கேட்டு மக்களிடம் வருகிறார்கள் அப்படினா தவறு மக்கள் கிட்டேயும் இருக்கு என்பது என் தாழ்மையான கருத்து

    ReplyDelete
  8. நீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்!
    பத்திரிக்கையாளர்களே...பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றுங்கள்...////

    மச்சி, ரொம்ப கஷ்டமா இருக்கே... இந்த விஷயங்கள்?

    ReplyDelete
  9. ஏங்க!யார் காதிலாவது விழுதா?

    ReplyDelete
  10. தினப்பாட்டு வேளைகளில் மூழ்கி இருக்கவே
    எங்களுக்கு நேரம் போதவில்லை..
    அந்தந்த வேலையை செய்வதற்கு தானே
    அரசாங்கப் பிரிவுகள் உள்ளன.
    அவரவர்கள் வேலையை சரியாய் செய்யுங்கள்.
    எங்களையும் நிம்மதியாக இருக்க விடுங்கள்.

    உங்களின் கடைசி வேண்டுகோள் அவர்களின் காதில் ஒலிக்கட்டும்.

    ReplyDelete
  11. ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களைப் பத்தி நல்லா சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  12. இனிய மதிய வணக்கம் பாஸ்,

    பத்திரிகையாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் அவர்களின் கடமை என்ன என்பதனை நினைவுபடுத்துகின்ற நல்ல பதிவு பாஸ்.

    ReplyDelete
  13. நீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்!
    பத்திரிக்கையாளர்களே...பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றுங்கள்...//

    நக்கீரன் பத்திரிக்கையின் கவனத்திற்கு...!!!

    ReplyDelete
  14. திகார் ஜெயில்ல இருந்து இப்போ திடீர்னு கனிமொழி வெளியே வந்தால் என்னைய்யா செய்யமுடியும்???? எல்லா இடத்திலும் பினாயில் ஊற்றி கழுவணும், இதில் பத்திரிக்கை துறையும் அடக்கம்!!!!!

    இந்திய மக்கள் பொறுமையா இருந்ததினால்தான் அன்னைக்கு ஆங்கிலேயன் உள்ளே வந்தான் இன்னைக்கு அரசியல் வியாதிங்க வந்து கொல்லுதுங்க ராஸ்கல்...

    ReplyDelete
  15. நல்ல பதிவு பாஸ்.

    ReplyDelete
  16. செய்வாங்களா நண்பரே ?

    ReplyDelete
  17. நீதிபதிகளே... நீதியை நிமிர்த்திப் பிடியுங்கள்!
    பத்திரிக்கையாளர்களே...பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றுங்கள்...


    காப்பாற்றுவார்களா....

    ReplyDelete
  18. சரியா சொல்லிருக்கீங்க பாஸ்.சூப்பர் பதிவு

    ReplyDelete
  19. கருன்,

    அவரவர் கடமையைச் சரியாக செய்தால்... நாடு சுபிட்சமாகிவிடும்.

    ReplyDelete
  20. அடிமேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்லுவாங்க...
    இவனுங்கெல்லாம் டம்மி பீசு... தாராளமா பேத்து எடுத்துரலாம்...
    ஆனா அடிக்கவேண்டியவங்க...நீதித்துறையும்....பத்திரிக்கைத்துறையும்தான்....
    HOPE FOR THE BEST...

    ReplyDelete
  21. நீங்களாவது உங்க மாணவர்களை முடிஞ்ச அளவு நேர்மையாளர்களா உருவாக்கி விடுங்க..... சிறுதுளி பெருவெள்ளம்.......

    ReplyDelete
  22. நல்லா சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  23. உங்கள் ஆதங்கம் புரிகிறது.

    ReplyDelete
  24. அநீதிக்கெதிராக குரல் கொடுக்க, போராட நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

    ReplyDelete
  25. நியாயமான ஆதங்கம். நிச்சயம் நடக்கணும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"