Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/04/2011

சொந்த வீடு/நிலம் வாங்கப் போறீங்களா? உஷார்..!


அண்மைக் காலமாக நில மோசடி வழக்குகளும் , நில அபகரிப்பு வழக்குகளும் ஆயிரக்கணக்கில் பதிவாகியுள்ளன. பல அரசியல் வாதிகளும் இதில் சிக்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால், மோசடிப் பேர்வழிகளிடமிருந்து ஒரு சில நிலங்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளன. 

இந்த மாதிரியான நடவடிக்கையில், பல போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் செய்தல் , உரிமையாளருக்கே தெரியாமல் பத்திரப் பதிவு, ஆள் வைத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்குதல் போன்ற உண்மைகள் வெளி வந்துள்ளதால், பதிவு தொடர்பாக, மக்களிடையே இனி, கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படும் எனத் தோன்றுகிறது. 

பத்திரங்கள் பதிவு செய்யும் சார் பதிவாளர் அலுவலகத்திற்குத் தெரியாமல், கண்டிப்பாக இந்த தவறுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, கண்டிப்பாக இந்த நில மோசடி வழக்குகளில், அந்தந்த சார் பதிவாளரையும், ஒரு சாட்சியாக்கி விசாரிப்பது அவசியம் ஆகிறது . 

இன்று, பத்திரப் பதிவின் போது வீடு, நிலம் சம்பந்தமான மதிப்பீட்டுத் தொகைக்கான பத்திரம்,அதற்கான தொகை மற்றும் பிற கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை மட்டுமே, அவர்கள் தம் கடமையாகக் கருதி வேலை செய்கின்றனர். 

அப்பதிவின் உறுதித் தன்மைக்கு, சார் பதிவாளர் மற்றும் அங்கு பணி புரியும் அலுவலர்கள் தமக்கு பொறுப்பல்ல என தட்டி கழித்து விடுகின்றனர். ஒருவேளை, தவறாக ஒரு பத்திரப்பதிவு நடந்து, பத்திரம் அடுத்தவர் கைக்கு போவதற்கு முன், சார் பதிவாளரிடம், நில உரிமையாளர் முறையிட்டால், அவர்கள் கூறும் பதில் கோர்ட்டை அணுகுங்கள் என்று . 

நில உரிமையாளர் ஒருவர் தம் நிலத்தை, எதிராளிகள் தவறாக பதிவு செய்து விடுவாரோ என, முன்னெச்சரிக்கையாக, சார் பதிவாளருக்கு தெரிவித்தால் கூட, அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆக, தற்போதைய பத்திரப் பதிவு விதிமுறைகள், வெறும் வசூல் நிலையங்களாக இருக்கிறது என்றே தோன்றுகிறது. 

நாம் நூறு ரூபாய் மதிப்பிற்கு ஒரு பொருள் வாங்கினால் கூட, அதில் நமக்கு உத்தரவாதம் கொடுக்கிறார்கள் . லட்சக்கணக்கில் அல்லது கோடிக் கணக்கில் அரசுக்கு பணம் செலுத்தி, நிலத்தை வாங்கும்போது , நமக்கு எந்தவித உத்தரவாதம் இல்லை.  இது எந்த வகையில் நியாயம்? 

இம்மாதிரியான அசையா சொத்து(நிலம்) பத்திரப்பதிவில், நம்பகத் தன்மையை உருவாக்க, அரசு ஏதாவது வழி முறைகளை கண்டறிய வேண்டும். இதை ஆட்சியாளர்கள் செய்வார்களா?

22 comments:

  1. தேவையான விழிப்புணர்வு பதிவு....

    ReplyDelete
  2. விவரமா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  3. அவசியமான தகவல்கள் கருண் மாஸ்டர்! ரொம்ப நன்றி!

    ReplyDelete
  4. பலருக்கும் பயனளிக்கும் பதிவு.

    ReplyDelete
  5. அறிய வேண்டிய அரிய தகவல் சார் சல்யுட்

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே

    ReplyDelete
  7. . லட்சக்கணக்கில் அல்லது கோடிக் கணக்கில் அரசுக்கு பணம் செலுத்தி, நிலத்தை வாங்கும்போது , நமக்கு எந்தவித உத்தரவாதம் இல்லை. இது எந்த வகையில் நியாயம்?


    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. TMல ஏழு மச்சி...மற்றும் அனைவருக்கும் தேவையான எச்சரிக்கை பதிவு....

    ReplyDelete
  9. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிங்க மாப்ள!

    ReplyDelete
  10. ஆக்கப்பூர்வமான கருத்துகள்.

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு பாஸ்

    ReplyDelete
  12. எல்லோரும் அறியவேண்டிய விழிப்புணர்வு பதிவு!!!!

    ReplyDelete
  13. தேவையான விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  14. அவசியமான பதிவு. அரசு கவனிக்க வேண்டும்.

    எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!

    அட.., இப்படியும் சொல்வார்களா?

    நன்றி.

    ReplyDelete
  15. சிந்திக்க வேண்டிய விஷயம் தான் நீங்கள் சொல்லியிருப்பது

    ReplyDelete
  16. இந்தப் பதிவில் நீங்கள் கேட்டுள்ள வினாக்களும் சொல்லியுள்ள கருத்துகளும் உண்மையில் அனைவராலும் கேட்கப் படவேண்டிய வினாக்கள் எழுப்பியுள்ள ஐயப்பாடுகள் ஏற்புடையன சிறந்த விழிப்புணர்வு பதிவு நிலம் வாங்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும் அரசும்.....

    ReplyDelete
  17. நல்ல தகவல் சகா. . .நிச்சயம் அரசு இதற்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். . .

    ReplyDelete
  18. புதிதாக வீடு வாங்குவோருக்கும், வாழ்வில் முன்னேற்றம் காணத் துடிப்போருக்குமேற்ற அருமையான பதிவு பாஸ்..

    ReplyDelete
  19. விழிப்புணர்வூட்டும் பதிவிற்கு நன்றி

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"