Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/20/2011

''வேணாம்.. ரொம்ப வலிக்குது'' ஜெயலலிதாவுக்கு கம்யூனிஸ்ட் 'கண்ணீர்' கடிதம்!


கூட்டணிக் கட்சிகளை கொஞ்சம் கூட மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


ஆனால், கிட்டத்தட்ட அதிமுககாரர் போல செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆழ்ந்த அமைதி காத்து வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே தமிழகத்தின் 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் ஜெயலலிதா.

சரி மாநகராட்சி போனாலும் பரவாயில்லை, நகராட்சிகளாவது கிடைக்கும் என எதிர்பார்த்து பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் தொடர்ந்தது. ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட நகராட்சிகளுக்கும் சேர்த்தே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அதிமுக. அதிலும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் இப்போது தலைவர்களாக உள்ள நகராட்சிகளுக்கும் சேர்த்து அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தான் அந்தக் கட்சியை கடும் கோபத்தில் தள்ளியிருக்கிறது.

இந் நிலையில், இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் போது அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக வேட்பாளர் பட்டியலை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து, அதிமுக-மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக தலைமை அறிவித்து வருகிறது.

இதன்மூலம் அந்தக் கட்சிகளுக்கு இவ்வளது தான் மரியாதை என்பதை அதிமுக தெளிவாகவே சுட்டிக் காட்டிவிட்டது.

இந் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்தது. இதையடுத்து, கட்சி சார்பில் பேச்சுவார்த்தை குழுவும் அமைக்கப்பட்டது.

அதிமுக பேச்சுவார்த்தை குழுவின் அழைப்பை அடுத்து, கடந்த 16ம் தேதியன்று மாலை பேச்சுவார்த்ûதையில் கலந்து கொள்ள இருந்தோம். இந் நிலையில், பத்து மாநகராட்சி மேயர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது.

அன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில் வெளியான பட்டியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிமுக பேச்சுவார்த்தை குழு தலைவர்கள், பட்டியல் இறுதியானது அல்ல. கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிவுகளுக்கு உள்பட்டு மாறுதலுக்கு உரியது, என்று தெரிவித்தனர்.

மீண்டும், 52 நகராட்சிகளுக்கான பட்டியலை அதிமுக வெளியிட்டது. தொடர்ந்து, கடந்த 18ம் தேதியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தை குழு அதிமுக குழுவோடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

மீண்டும் 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நகர்மன்றத் தலைவர்களுக்கான அதிமுக வேட்பாளர்களின் 2வது பட்டியல் திங்கள்கிழமை வெளியானது.

இதையடுத்து, மொத்தம் 124 நகராட்சித் தலைவர்கள் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. மேலும், முதல் கட்டமாக பேரூராட்சித் தலைவர்களுக்கான ஒரு பகுதி வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே,தொடர்ந்து உள்ளாட்சி தலைவர்கள் அனைவருக்குமான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல.

இது, கூட்டணிக் கட்சிகளின் கீழ்மட்ட ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறது.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தை முடிவுக்குப் பிறகு வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதே கூட்டணி கட்சிகளுக்குள் நல்ல இணக்கத்தை உருவாக்கப் பயன்படும் என்று தனது கோபத்தை முழுமையாக காட்டவும் முடியாமல், அதே நேரத்தில் கட்சித் தொண்டர்களின் ஆத்திரத்தை மூடி மறைக்கவும் முடியாமல், ஆனால் அதிமுகவை கோபப்படுத்திவிடாத வகையிலும் மிக ஜாக்கிரதையான வார்த்தைகளைப் போட்டு இந்தக் கடிதத்தை எழுதி முடித்துள்ளார் ராமகிருஷ்ணன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதே நிலை தான் என்றாலும், தா.பாண்டியனைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு எந்தப் பிரச்சனையும் தரக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார். இதனால் பெரும் அமைதி காத்து வருகிறார். இதன்மூலம் அந்தக் கட்சியின் தொண்டர்களைப் பற்றிக் கூட அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை- தட்ஸ்தமிழ்.



21 comments:

  1. ஜெயலலிதா சொல்வது இன்னுமா ராமகிருஷ்ணன் காதில் விழல. கம்யூனிஸ்டையும், தேமுதிக வையும் அப்பீட்டு ஆயிக்க சொல்றாங்கபா. இதை தா. பாண்டியன் புரிஞ்சிகிட்டு வாயை பொத்திகிட்டு இருக்கார்.

    நல்ல அலசல்.

    ReplyDelete
  2. கடைசில கம்யூனிஸ்ட் காம்ரேட்களின் நிலைமை கைப்புள்ளைகள் ரேஞ்சுக்கு தலைப்பு வைக்குற அளவுக்கு போய்யிடிச்சே..

    ReplyDelete
  3. தமிழ்மணத்தில் வாக்களிக்க இயலவில்லை. பின்னர் வருகிறேன்.

    ReplyDelete
  4. ஹி ஹி ஹி...

    ஆமாங்க... இந்த ராமு ராமுங்குறீகளே...

    யாருங்க அவரு?

    #பிளீஸ், பிளிஸ் சொல்லுங்க...

    ReplyDelete
  5. தலைப்பு சூப்பர் அண்ணே...

    ReplyDelete
  6. ஹஹா..சூப்பர் டைட்டில்

    ReplyDelete
  7. அருமையான தலைப்பு. அழகான அலசல். கம்யூனிஸ்ட்கள் காமெடியன்களாகிட்டாங்களா??? ஐயோ பாவம்.

    ReplyDelete
  8. தலைப்பும் சரி
    அலசலும் சரி சூப்பர்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 6

    ReplyDelete
  9. ரொம்ப நேரம் தூங்குனா இப்படித்தான்

    ReplyDelete
  10. t.m 9

    அழகான அரசியல் அலசல்

    ReplyDelete
  11. ஆடு கிட்ட அனுமதி வாங்கித்தான் அறுக்கனும்ன்னா ஒரு பய பிரியாணி சாப்பிட முடியாது ..........
    அது இந்த கூட்டணி ஆடுகளுக்கு தெரியாமல் போச்சே ................
    அப்புறம் மீண்டும் வந்திருக்கேன் நம்ம கடை பக்கம் வரது ......

    ReplyDelete
  12. ஜெயலலிதாவை நம்பினோர் கைவிடப்படுவார்...!!!

    ReplyDelete
  13. வலிக்க தானே அடி விழுகுது...????

    ReplyDelete
  14. நீங்க என்ன சொல்றீங்க கருண்?

    ReplyDelete
  15. உங்களோட சொந்தக் கருத்து? அப்புறம் அப்படியே நம்ம கடைப்பக்கம் ஒரு நடை வந்துட்டுப் போறது.. சூடா டீ, காபி, பண்ணு எல்லாம் கிடைக்கும்..!வாரீயளா..?

    அன்னை மடியே அறிவாலயம்..!!

    காதலியுங்கள்...! காதலிப்பது முக்கியம்!

    ReplyDelete
  16. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..!

    ReplyDelete
  17. இப்படியும் பதிவு போட முடியுமா - டவுட் கோவாலு

    ReplyDelete
  18. The politicians who don't have ethics and principles should be discarded like this.Having known that it is "mann kuthirai"(Clay horses),these intellectuals(?)have been running behind Madam."Thirunthaatha jenmangal irunthenna laabam?"

    ReplyDelete
  19. அரசியல் ஆய்வுப் பகிர்விற்கு நன்றி நண்பா.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"