Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/30/2011

இலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெயிட்..



நல்ல கம்பெனியில் தயாரிக்கப்படும், எந்த பொருளாக இருந்தாலும், அனைத்துப் பொருட்களிலும், அதன், 'சீரியல் எண்' மற்றும் தயாரிக்கப்பட்ட 'லாட், பேட்ச் எண்' தவறாமல் குறிக்கப்பட்டிருக்கும். எனவே, மூன்று பொருட்களையும், ரேஷன் கடைகளில் கொடுக்கும் போதே, ஒவ்வொரு பொருளின் சீரியல் எண்ணை, ரேஷன் கார்ட்டில் பொறுமையாக, கவனமாக பதிந்து, மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

அதன் மூலம் இப்பொருளை யாராவது, விற்றோ, வாங்கியோ பிடிபட்டால், அவர்களின் குடும்ப ரேஷன் கார்டையும், அந்த பொருளில் இருக்கும் சீரியல் எண்ணையும் ஒப்பிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

'அரசே இந்த, மூன்று பொருட்களையும், ஒரே பேக்கிங்காக கொடுக்கும்' என்று செய்திகள் வருகின்றன. எனவே, ஒவ்வொரு பேக்கிங்கிலும் அலுமினியம் அல்லது ஏதாவது சிறப்பு உலோகத்தினால் செய்யப்பட்ட, உயர்தர வில்லையில், மூன்று பொருட்களின் வரிசை எண்களையும், அரசு முத்திரையையும் பதிந்து கொடுக்கலாம். முடிந்தால், அந்த வில்லைக்கு, 'தனிப்பட்ட எண்' (வருமான வரி பான் எண் அல்லது மாவட்ட வாரியாக கொடுக்கப்படும் வாகனப் பதிவு எண்போல) ஒன்றை பதிந்து கொடுக்கலாம்.

அந்த வில்லையை குறிப்பிட்ட காலத்திற்கு, குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்காவது, பத்திரமாக வைத்திருந்து, சோதனை செய்யப்பட்டால், காண்பிக்கப் பட வேண்டும் என, உத்தரவு விடலாம். சர்வீஸ் செய்வதற்கு பொருட்களை கொண்டு செல்லும் போது, கண்டிப்பாக அதைக் காட்ட வேண்டும் என்றும் சொல்லலாம்.

சாதாரணமாக, பொருட்களை விற்க நினைப்பவர், மூன்று விதமான பொருட்களையும், ஒரே நபரிடம் விற்க முயல்வது சிறிது கடினம். எனவே, மூன்று பொருட்களுக்கும், ஒரே வில்லையாக இருப்பதால், தனித்தனியாக விற்க முடியாது. வாங்கியவரும், வில்லை இல்லாத பட்சத்தில் சர்வீஸ் கொடுக்க முடியாது.

மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ, சந்தேகப்படும்படியான இடத்திலோ, நபரிடமோ சோதனை செய்யும் போது, வில்லையை காட்டமுடியாத பட்சத்தில் அல்லது அதிகப்படியான வில்லைகள் வைத்திருக்கும் போது, நடவடிக்கை எடுக்க முடியும்.

லட்சக்கணக்கான மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகளை தரம் பார்த்து, வினியோகிக்கப் போகும் அரசு இயந்திரத்திற்கு, இப்பணிகள் கடினமானதோ அல்லது செய்ய முடியாததோ இல்லை.

இந்த வழிகளால் ஒரு வேளை காலதாமதம் ஆனால் கூட, சிறந்த பரிசை முறையாகப் பெற்றதற்காகவும், நிர்வாக திறமைக்காகவும் அரசை பாராட்டுவர் மக்கள். செய்வார்களா?

15 comments:

  1. இந்த யோசனையை பயன்படுத்துவார்களா....

    ReplyDelete
  2. மாப்ள ஒரே கேள்வியா இருக்கே பதில் எப்ப போடுவே!

    ReplyDelete
  3. //விக்கியுலகம் said...

    மாப்ள ஒரே கேள்வியா இருக்கே பதில் எப்ப போடுவே!///

    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  4. அருமையான யோசனை!அரசு உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்!

    ReplyDelete
  5. அருமையான யோசனை
    அரசு கவனத்தில் கொண்டால் நல்லது
    ஆற்றில் போட்டாலும் அளந்து போட்டால்தான் நல்லது
    பார்ப்போம்
    த.ம 7

    ReplyDelete
  6. அரசுக்கு இவற்றை செயல்படுத்த நிறைய காலம் பிடிக்கும். (என்னிக்கு வேகமா வேலை பார்த்திருக்கு அரசு இயந்திரம்?) ஆனால் உபயோகமான யோசனை சொல்லியிருக்கீங்க. அற்புதம்.

    ReplyDelete
  7. ஹை இந்த ஐடியா நல்லாயிருக்கே...!!!!

    ReplyDelete
  8. மேடம் நோட் த பாயிண்ட்....!!!

    ReplyDelete
  9. நிச்சயம் கணிசமான பேர் விற்கவே முயல்வார்கள். அதை தடுப்பது மிக கடினம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"