Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/29/2011

முரண் - சினிமா விமர்சனம் அல்ல...


1.
சாரலாய்க் கொட்டும்
பனிக்காலங்களின்
வைகைறைகளில்
சாணம் தெளித்து
வாசல் கூட்டி
நடுங்கும் கரங்களால்
மாக்கோலம் தீட்டி
பரங்கிப் பூச்சூட்டிய
அலங்கார அழகை
ஊரே ரசிக்க
மகிழ்ந்துபோவாள் அம்மா
விடியலில்
மௌனமாய்க் கரையும்
எறும்புகளின் பசி...

2.
நீங்கள்
உங்களையே தேடி
செல்கையில்
உள்மனதில்
அடி ஆழத்தில்
கேட்குமே ஒரு குரல்..
உண்மையான குரல்...
கேட்டதுண்டா எப்போதாவது?

3.
நிஜமாய் இருக்கிறேன்
நான் முரனானவன் என்று
எல்லோரும்
முகம் சுழிக்கிறார்கள் ...

32 comments:

  1. தமிழ்மணம் இணைச்சாச்சு....

    ReplyDelete
  2. நிஜமாய் இருக்கிறேன்
    நான் முரனானவன் என்று
    எல்லோரும்
    முகம் சுழிக்கிறார்கள் ...//

    sila samayam rivarslayum nadappathundu!

    ReplyDelete
  3. மூன்றாவது..
    யதார்த்த வரிகள்..

    ReplyDelete
  4. உண்மையான குரல்...
    கேட்டதுண்டா எப்போதாவது?


    முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
    நண்பரே

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள் உண்மையிலேயே நிஜமாக இருப்பது பெரும் கஸ்ட்டம்

    ReplyDelete
  6. இன்ட்லி இணைத்துவிட்டேன்

    ReplyDelete
  7. நானும் அதை தேட முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  8. அருமையான கவிதை தொகுப்பு...

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  9. ///விடியலில்
    மௌனமாய்க் கரையும்
    எறும்புகளின் பசி////

    அழகான வரிகள்...சூப்பர் கவிதை பாஸ்

    ReplyDelete
  10. //நிஜமாய் இருக்கிறேன்
    நான் முரனானவன் என்று
    எல்லோரும்
    முகம் சுழிக்கிறார்கள் ...//


    அழகான வரிகள்.

    ReplyDelete
  11. நிஜமாய் இருக்கிறேன்
    நான் முரனானவன் என்று
    எல்லோரும்
    முகம் சுழிக்கிறார்கள் ...

    ம்ம்ம்ம் நான் மட்டும் இல்ல ஹி ..ஹி ..ஹி ..வாழ்த்துக்கள் சகோ அருமையாய் உள்ளது நிஜமான கவிதை வரிகள் .நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  12. ///நிஜமாய் இருக்கிறேன்
    நான் முரனானவன் என்று
    எல்லோரும்
    முகம் சுழிக்கிறார்கள் ...///

    உண்மை எல்லோருக்குமே கசக்கும். கவிதை அருமை.

    ReplyDelete
  13. //மகிழ்ந்துபோவாள் அம்மா
    விடியலில்
    மௌனமாய்க் கரையும்
    எறும்புகளின் பசி...//

    இப்போது மாக்கோலத்தை பார்க்க முடிவதில்லை. நவீனம் இதையும் மாற்றிவிட்டது.

    ReplyDelete
  14. நிஜமாய் இருக்கிறேன்
    நான் முரனானவன் என்று
    எல்லோரும்
    முகம் சுழிக்கிறார்கள் /

    யதார்த்த வரிகள்.. கவிதை அருமை.

    ReplyDelete
  15. மூணும் நல்லாய் இருக்கு பாஸ் ..முக்கியமா மூணாவது சூப்பர் !

    ReplyDelete
  16. மூன்றாவது மிக மிக மிக அருமை ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. மனதில் நிற்கும் கவிதை! இதயம் நிறைந்த பாராட்டுக்கள்1

    ReplyDelete
  18. படிப்பவர் மனதில் இதமாய்
    ஒத்துப்போகும் அழகிய படைப்பு முரண்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 9

    ReplyDelete
  19. நிழலாய் மாறிப்போன இவ்வாழ்வில்
    நிஜம் தேடும் வரிகள்..
    உண்மையில் சொல்லப்போனால்
    எல்லோரும் தேடும் தேடிக்கொண்டிருக்கும்
    எண்ணங்கள்..
    அருமை.

    ReplyDelete
  20. மூன்றும் முத்துக்கள்!

    ReplyDelete
  21. வித்தியாசமான உணர்வுகளைக் கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறீங்க நண்பா.

    ReplyDelete
  22. முரனானால் முகம் சுழிக்க தான் செய்வார்கள்... பாரதியை பார்த்து அன்றைய சமூகம் அதைத்தானே செய்தது... ஆனால் இன்று அதே சமூகம்?

    ReplyDelete
  23. அருமையான வரிகள்...

    ReplyDelete
  24. முயற்சி வாழ்த்துக்குரியது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"